ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 , அமுதென்று பேர் - மதிப்பீடு - பலவுள் தெரிக / 9th TAMIL - EYAL 1 - ONE MARK QUESTIIN & ANSWER

 


ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 1 , அமுதென்று பேர்

மதிப்பீடு

பலவுள் தெரிக.

1. குழுவில் விடுபட்ட வரிசையைத் தேர்ந்தெடுக்க.

குழு -1 / குழு - 2  / குழு - 3   / குழு -4


நாவாய் / மரம் / துறை / தன்வினை 

அ. 1- வங்கம், 2- மானு, 3- தாழிசை, 4- பிறவினை

ஆ. 1- தாழிசை, 2- மானு, 3- பிறவினை, 4- வங்கம்

இ. 1- பிறவினை, 2- தாழிசை, 3- மானு, 4- வங்கம்

ஈ. 1- மானு, 2- பிறவினை, 3- வங்கம், 4- தாழிசை

விடை : அ. 1- வங்கம், 2- மானு, 3- தாழிசை, 4- பிறவினை

2. தமிழ் விடு தூது ----- என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

அ. தொடர்நிலைச் செய்யுள்

ஆ. புதுக்கவிதை

இ சிற்றிலக்கியம்

ஈ. தனிப்பாடல்

விடை : இ ) சிற்றிலக்கியம்

3. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.

அ ) ------   இனம்

ஆ. ------- வண்ணம்

இ ) ------குணம்

ஈ ) ------- வனப்பு

க) மூன்று, நூறு, பத்து, எட்டு

உ) எட்டு, நூறு, பத்து, மூன்று

ங )  பத்து, நூறு, எட்டு, மூன்று

ச ) நூறு, பத்து, எட்டு, மூன்று

விடை : க) மூன்று, நூறு, பத்து, எட்டு

4 ) 'காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! - எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!". இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்-

அ. முரண், எதுகை, இரட்டைத் தொடை

ஆ. இயைபு, அளபெடை, செந்தொடை

இ மோனை, எதுகை, இயைபு

ஈ. மோனை, முரண், அந்தாதி

விடை : இ) மோனை , எதுகை , இயைபு 

5 ) அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி அடிக்கோடிட்ட  சொற்களுக்கான இலக்கணக்குறிப்பு :

அ. வேற்றுமைத்தொகை

ஆ )  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

இ. பண்புத்தொகை

ஈ. வினைத்தொகை

விடை : ஆ ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்


Post a Comment

0 Comments