ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - அமுதென்று பேர் - நெடுவினா - வினா & விடை / 9th TAMIL - EYAL 1 - NEDUVINA - QUESTION & ANSWER

 

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

இயல் - 1 , அமுதென்று பேர்

மதிப்பீடு

நெடுவினா  - வினாக்களும் விடைகளும்


நெடுவினா

1 ) திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை   எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

* தமிழ்மொழி பழமையும் தொன்மையும் பெற்றது. பன்னெடுங்காலமாக மாறாத இளமைத் தன்மையும்,எத்தகைய கால மாற்றத்திலும் மங்காப் பொலிவுடனும் விளங்குகிறது.

* புதிய படைப்புகளுக்கு ஈடுகொடுத்து வளர்ந்து வந்துள்ளது. தமிழின் தொன்மையை உலகிற்கு அளித்த முதன்மையாளர் கால்டுவெல் ஆவார்.

* திராவிட மொழிகளுக்குள் இருக்கும் இலக்கணக் கூறுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றின் ஒற்றுமைகளைக்   கால்டுவெல் எடுத்துரைத்தார்.

* திராவிட மொழிகளில் எண்ணுப்பெயர்கள் ஒன்றுபோலவே உள்ளன. சான்றாக ஐந்து, தமிழ் - ஐந்து, மலையாளம் அஞ்சு, தெலுங்கு - ஐது, கன்னடம் - ஐது.

* திராவிட மொழிகளில் உயிர் எழுத்துகளில் உள்ள குறில் நெடில், பொருளை வேறுபடுத்தத் துணை செய்கின்றன. குறில் அடி, வளி, நெடில் - ஆடி, வாளி

* திராவிட மொழிகளில் திணை, பால் பாகுபாடு இயற்கையானது. திராவிட மொழிகள், பெயர்ச்சொல்லின்பின் வேற்றுமை உருபுகளைச் சேர்த்துப் பொருள் உணர்த்தும். பெயரடைகள் பால், எண் என்ற வேறுபாடு உணர்த்தாமல் பொதுவாக உள்ளன.

* திராவிட மொழிகள் வினைச்சொல், திணை, பால், எண் ஆகியவற்றைத் தெளிவாகக் காட்டும். இதற்குத் தமிழ்மொழி துணை செய்கிறது. திராவிட மொழிகளின் பொதுப்பண்புகளைப் பெற்றுள்ளதால்,அவற்றைப் பிரித்தறிய உதவுகிறது. எனினும், தனக்கெனச் சில தனித்தன்மைகளையும் கொண்டுள்ளது.

* தமிழின் பல அடிச்சொற்களின் ஒலியன்கள், திராவிட மொழிகள் வழங்கும் இடத்திற்கு ஏற்ப, ‘ஒலி பெயர்த்தல்' விதிப்படி திராவிட மொழிகளின் வடிவம் மாறி இருக்கிறது.

* இவ்வகையில் திராவிட மொழிக்குடும்பத்துள் தொன்மையான மூத்த மொழியாகத் திகழ்கின்ற தமிழே, பிற திராவிட மொழிகளைவிட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந்துணையாக அமைந்துள்ளது.


Post a Comment

0 Comments