நாமக்கல் கவிஞர் பிறந்த நாள் - 19 - 10 - 2021
நாமக்கல் கவிஞர் - 14.10.1888- 24.08.1972
இயற்பெயர் : இராமலிங்கம் பிள்ளை
பெற்றோர் : வேங்கடராம பிள்ளை , அம்மணி அம்மாள்
வளர்ப்புத் தாய் : பதுலாபீவி என்ற முகமதிய பெண்
ஊர் : நாமக்கல் மாவட்டம் மோகனூர்
பணி : நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் எழுத்தர்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்
சிறைவாசம் : 1932ல் நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்று ஓராண்டு சிறைவாசம்
சிறப்பு : தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர்
சாகித்திய அகாதமியில் தமிழ் பிரதிநிதி
சட்ட மேலவை உறுப்பினர்
விருது : பத்மபூஷண் உட்பட பல்வேறு விருதுகள்
சிறந்த ஓவியர்
முதன் முதலாக வரைந்த படம் : இராமகிருஷ்ண பரமஹம்சர்
நூல்கள் :
கவிதை நூல்கள்
தமிழன் இதயம்,
சங்கொலி
தமிழ்த் தேர்
கவிதாஞ்சலி
பிரார்த்தனை
தாயார் கொடுத்த தனம்
தேமதுரத் தமிழோசை
அவனும் அவளும் 'காவியம்
மலைக் கள்ளன் - மர்ம நாவல் (திரைப்படமாக்கப்பட்டது)
இலக்கிய இன்பம் - கட்டுரை
என் கதை - தன் வரலாற்று நூல்
கோவிந்தராச ஐயங்காருடன் சேர்ந்து நடத்திய இதழ் லோகமித்திரன்
மேற்கோள் பாடல்
"கத்தியின்றி ரத்தம் இன்றி
யுத்தம் ஒன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
நம்பும் யாரும் சேருவீர்
காந்தி என்ற சாந்த மூர்த்தி
தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்தருக்குள் தீமை குன்ற
வாய்த்த தெய்வ மார்க்கமே”
"தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அதற்கொரு குணமுண்டு
அமிழ்தம் அவனது மொழியாகும்
அன்பே அவனது வழியாகும்”
1 Comments
Keerthana
ReplyDelete