கவிதை
தமிழ் மொழி !
அழகிய மொழி தமிழ் மொழி ! ஆன்றோன் வகுத்த மொழி ! இவ்வையத்தின் தொன்மை மொழி ! ஈடில்லா தன்மை வாய்ந்த மொழி ! உலகம் போற்றும் மொழி ! ஊக்கம் கொடுக்கும் மொழி ! எல்லா மொழியிலும் சிறந்த மொழி ! ஏற்றமுடன் இருக்கும் மொழி ! ஐயம் பல நீக்கும் மொழி ! ஒன்றே சிறந்ததென காட்டும் மொழி ! ஓங்கி உயர்ந்து நிற்கும் மொழி ! ஔடதமாய் என்றும் இருக்கும் மொழி ! அஃதே நிலைத்து நிற்கும் மொழி ! தமிழ் மொழி !
வாழ்க ! வளர்க ! தமிழ் மொழி !
---------
மரம்
இறைவன் நமக்கு கொடுத்த வரம் ! மரம் நடுவதில் நீட்டவேண்டும் நம் கரம் ! மரம் இருந்தால் தாழ்வதில்லை நம் சிரம் மரம் வளர்த்தால் பூமியில் உயரும் ஈரம் ! அதனால் உலகில் உயரும் நம் தரம் ! மரம் நமக்கு ஆவதில்லை என்றும் பாரம் ! இதைப் புரிந்து கொண்டால் வாழ்க்கையில் நமக்கு வரும் நல்ல நேரம்
இதயம்
கருவில் தோன்றும்
முதல் உறுப்பு இதயம் ! உண்மை அன்பு மறைந்திருக்கும் இடம் இதயம் ! ஏமாற்றுவதில் உட்படுவதும் இதயம் !
எளிதில் ஏமாறுவதும்
அசட்டை பண்ணப்படுவதும் இதயம் ! இவ்வுலகில் இரக்கம் வாழ்கிறது என்றால் அதற்கு காரணம் இதயம் ! மனிதனுக்கு வலிமையான எண்ணத்தைக் கொடுப்பதும் இதயம் !
பிடிவாதத்தில் குழந்தையாக
மாறுவதும் இதயம் ! நினைவுகளைத் தேக்கிவைத்து அவ்வப்போது அசைபோடும் இடம் இதயம் !
உலகின் எல்லா காரணிக்கும் மூலமா இருப்பது இதயம் ! அன்பான இதயத்தைக் கண்டுபிடிக்கும் இதயம் விலைமதிப்பற்ற இதயம் !
மரணம் என்னும் காலதேவன் அழைக்கும் போது செயலிழக்கும் முதல் உறுப்பு இதயம் !
கவிஞர்.வே.விசுவாசம் தேன்மொழி, தலைமை ஆசிரியர் ஊ.ஒ.தொ.பள்ளி முக்கரம்பாக்கம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் திருவள்ளூர் மாவட்டம்.
**************** **************** **********
0 Comments