நவராத்திரி - சரஸ்வதி பூஜை
சிறப்பு இயங்கலைத் தேர்வு
04 - 10 - 2022 - வினாக்களும் விடைகளும்
************** *************** ***********
1) வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பவர்
அ ) சரஸ்வதி
ஆ) மீனாட்சி
இ ) காமாட்சி
ஈ) துர்க்கை
விடை : அ ) சரஸ்வதி
2) பெண்கள் கொண்டாடும் திருவிழா
அ) நவராத்திரி
ஆ) சிவராத்திரி
இ) விநாயகர் சதுர்த்தி
ஈ) கந்தர்சஷ்டி
விடை : அ) நவராத்திரி
3) நவராத்திரி - இதில் ' நவ' என்ற சொல்
குறிக்கும் எண்ணிக்கை
அ) 5
ஆ) 7
இ) 8
ஈ) 9
விடை : ஈ) 9
4) நவராத்திரிக்கு அடுத்து வரும்
பத்தாம் நாள்
அ ) சிவராத்திரி
ஆ) விஜயதசமி
இ) இராமநவமி
ஈ ) சதுர்த்தி
விடை : ஆ) விஜயதசமி
5) வீரத்தின் அடையாளம்
அ) பார்வதி
ஆ) இலட்சுமி
இ ) சரஸ்வதி
ஈ) அம்மன்
விடை : அ) பார்வதி
6) சரஸ்வதி அந்தாதி என்ற நூலைப்
படைத்தவர்
அ) பாரதி
ஆ) ஔவை
இ) கம்பர்
ஈ) ஒட்டக்கூத்தர்
விடை : இ) கம்பர்
7) தசரா பண்டிகை கர்நாடக மாநிலத்தில்
உள்ள ------ ல் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.
அ) மைசூர்
ஆ) மங்களூர்
இ) சிக்மகளூர்
ஈ) பெங்களூர்
விடை : அ) மைசூர்
8) கலைமகள் என்று அழைக்கப் படுபவர்
அ) காளீஸ்வரி
ஆ) சக்தீஸ்வரி
இ ) சாமுண்டீஸ்வரி
ஈ) சரஸ்வதி
விடை : ஈ) சரஸ்வதி
9) செல்வத்தின் அதிபதி
அ) மகாலட்சுமி
ஆ) வீரலட்சுமி
இ) விசாலாட்சி
ஈ) பாக்யலட்சுமி
விடை : அ) மகாலட்சுமி
10 ) ' செய்யும் தொழிலே தெய்வம்' என்ற
கவிஞர்
அ) பாரதிதாசன்
ஆ) கண்ணதாசன்
இ) வண்ணதாசன்
ஈ) பட்டுக்கோட்டை
விடை : ஈ) பட்டுக்கோட்டை
11 ) நவராத்தியின் போது வீடுகளில் ------ வைப்பார்கள்.
அ ) பொங்கல்
ஆ) கொலு
இ) கரும்பு
ஈ) கொழுக்கட்டை
விடை : ஆ) கொலு
12) கொலுவின் முதற்படியில் வைக்கப்படும்
பொம்மைகள்
அ) ஆறறிவு
ஆ) ஐந்தறிவு
இ ) நான்கறிவு
ஈ) ஓரறிவு
விடை : ஈ) ஓரறிவு
13 ) தமிழகத்தில் தசரா சிறப்பாகக்
கொண்டாடப்படும் ஊர்
அ) காயல்பட்டனம்
ஆ) தேங்காய்ப்பட்டனம்
இ) குலசேகரன்பட்டனம்
ஈ) நாகப்பட்டனம்
விடை : இ) குலசேகரன்பட்டனம்
14) சரஸ்வதியின் நான்கு கைகளில்
இருப்பவை வீணை, ஜெபமாலை மற்றும் ----
அ) சங்கு
ஆ) சக்கரம்
இ) சுவடிகள்
ஈ) வாள்
விடை : இ) சுவடிகள்
15 ) ஆய கலைகள் மொத்தம் ------
அ) 24
ஆ) 44
இ) 54
ஈ) 64
விடை : ஈ) 64
16) கமலம்' என்ற சொல் குறிக்கும் மலர்
அ) மல்லிகை
ஆ) தாமரை
இ) சாமந்தி
ஈ ) கனகாம்பரம்
விடை : ஆ) தாமரை
17) ' தசரா' - இதில் தசம்' என்ற சொல்
குறிக்கும் எண்ணிக்கை
அ)1
ஆ) 10
இ ) 100
ஈ ) 1000
விடை : ஆ) 10
18) பராசக்தியை நோக்கிக் கடுந்தவம் புரிந்த அசுரன்
அ) சம்பராசுரன்
ஆ) இராவணன்
இ ) மகிஷாசுரன்
ஈ) கடோத்கஜன்
விடை : இ ) மகிஷாசுரன்
19 ) ஒவ்வொரு மனிதனின்
முன்னேற்றத்திற்கும் தேவையான மூன்று கல்வி, ------- மற்றும் செல்வம்.
அ) உணவு
ஆ) உடை
இ) நட்பு
ஈ) வீரம்
விடை : ஈ) வீரம்
20) முதன் முதலில் குழந்தைகளுக்கு அகரம் கற்றுத் தருவது ------- ல்
அ) கரும்பலகை
ஆ) ஏட்டில்
இ) களிமண்ணில்
ஈ) நெல்மணியில்
விடை : ஈ) நெல்மணியில்
0 Comments