ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு
வினாத்தாள் - 2008 - 2009
வினாக்களும் விடைகளும் - பகுதி - 3
101 முதல் 150 வரை - வினாக்களும் விடைகளும்
PG - TRB - TAMIL
ORIGINAL QUESTION PAPER - 2008 - 2009
QUESTION & ANSWER - PART - 3
**************** ************* ***********
101. தொல்காப்பியர் இலக்கியத்தின் அழகை என்னவென்று கூறுகிறார்?
A) தூக்கு
B) வனப்பு
C) வண்ணம்
D ) ஓசை
102. ஆடுபுலி ஆட்டத்தின் வேறு பெயர் என்ன?
A) பல்லாங்குழி
B) பதினைந்தாம் புலி
C) தட்டாங்கல்
D) வட்டத்திரி
103. 'பாசறையில் ஒரு கை பள்ளியொற்றி ஒருகை முடியொடு கடகஞ் சேர்த்தி'- இருப்பவன் யார்?
A) வீரன்
B) பகைவன்
C) தோழன்
D) தலைவன்
104. புறப்பொருள் வெண்பாமாலை கூறும் எயில் காத்தல் எத்திணைக்குரியது?
A) தும்பை
B) வெட்சி
C) நொச்சி
D) வாகை
105. கொன்றைக் காய்க்கு நிகராக வாலை ஆட்டியது எது என்று பாரதிதாசன் கூறுகிறார்?
A) பசு
B) நாய்
C ) பூனை
D) மயில்
106. ஆடம்பரத்தைப் பாவம் என்று கருதியவர் என மு.வ. யாரைக் கூறிப்பிடுகின்றார்?
A) மண்டேலா
B) காந்தியடிகள்
C) அன்னை தெரசா
D) ஜவஹர்லால் நேரு
107. 'இராசாக்கோவை' என்ற பாராட்டைப் பெற்றது?
A) தஞ்சைவாணன் கோவை
B) திருக்கோவையார்
C) சிதம்பரச் செய்யுட் கோவை
D) ஒரு துறைக் கோவை
108. இருமை என்ற எண் இல்லா மொழி எது?
A) பஞ்சாபி
B ) வடமொழி
C) திராவிட மொழி
D ) ஐரோப்பிய மொழி
109. 'எத்தன் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை'
எனச் சிவபெருமானிடம் கூறியவர் யார்?
A) அதிரா அடிகள்
B) சுந்தரர்
C) திருஞானசம்பந்தர்
D) திருநாவுக்கரசர்
110. காட்டில் மான்கூட்டம் சிதறி ஓடக் காரணம்?
A) யானையின் பிளிறல்
B) சிங்கத்தின் கர்ஜனை
C) வரிப்புலியின் முழக்கம்
D) நரியின் ஊளை
111. கவிதை தனித்த முருகியல் இன்பம் வாய்ந்ததென்றும்அதை உணர்ந்து திளைப்பதே கவிதையின் பயன் என்றும்
பொழிந்தவர்
A) பேட்டர்
B) எட்கார் ஆலன்போ
C) போதலர்
D) கான்ட்
112 மாரியம்மன் வழிபாட்டுடன் தொடர்புடையது
A) சிலம்பாட்டம்
B) காவடியாட்டம்
C) கரக ஆட்டம்
D) சக்கையாட்டம்
113. ‘தனிச்சேறல் ஆயத்தில் கூடு' என்று தலைவியிடம் கூறியது யார்?
A) தோழி
B) தாய்
C) செவிலி
D) தலைவன்
114. 'விடுகணை' எத்தொகையைச் சார்ந்த சொல்?
A) வினைத்தொகை
B) உம்மைத்தொகை
C) பண்புத்தொகை
D) அன்மொழித் தொகை
115. வாடிக் கிடந்த புத்தருக்கு ஆயர்குலச் சிறுவன் கொடுத்தது என்ன?
A) மருந்து
B) உணவு
C) நீர்
D) பால்
116. 1832 இல் ‘பூமிசாஸ்திரம்' என்ற நூலை எழுதியவர்
A) டாக்டர் கரோல்
B) இராம சுந்தரம்
C) இரேனியுஸ் பாதிரியார்
D) டாக்டர் சாமுவேல்
117. 'சமுதாயப் பாட்டு' எனத் தமிழண்ணல் கூறும் நூல்
A) திருமுருகாற்றுப்படை
B) சிறுபாணாற்றுப்படை
C) கூத்தராற்றுப்படை
D) பெரும்பாணாற்றுப்படை
118. மக்களின் பேச்சு வழக்கிலுள்ள தமிழ்ச்சொற்கள்
A) இயற்சொல்
B) வடசொல்
C) திரிசொல்
D) திசைச்சொல்
119. கண்ணே மனோன்மணியே கண்பார்வைக் கெட்டாத
விண்ணடங்கா வெட்டவெளியே பராபரமே' எனப் பாடியவர்
A) குணங்குடி மஸ்தான்
B) செய்குத் தம்பிப் பாவலர்
C) காசிம்புலவர்
D) குலாம் காதிறு
120. கலைமகள் கொடுத்த முத்து மாலையைச் சீதை யாருக்கு அளித்தாள்?
A) பரதன்
B) இலட்சுமணன்
C) வீடணன்
D) அநுமான்
121 நுண்கலைகளுள் உணர்ச்சி ஒன்றையே கொண்டு அமைந்த
கலை எது என்று தா.ஏ. ஞானமூர்த்தி குறிப்பிடுகிறார்?
A) ஓவியம்
B) இயல்
C) இசை
D) சிற்பம்
122. இலக்கிய வழக்கில் விடுகதையை எவ்வாறு அழைப்பர்?
A) புதிர்
B) அழிப்பாங்காதை
C) வெடி
D) நொடி
123. 'நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு' எனத் தொடங்கும்
பத்துப்பாட்டு நூல் எது?
A) முல்லைப்பாட்டு
B) குறிஞ்சிப்பாட்டு
C) சிறுபாணாற்றுப்படை
D) பொருநராற்றுப் படை
124. இரண்டாம் வேற்றுமை உருபைக் கூறுக.
B) கு
A) அது
D) ஐ
C) ஆல்
125. திக்குத் தெரியாத காட்டில் உள்ளம் அஞ்சக் குரல் பழகுபவை எவை எனப் பாரதியார் கூறுகிறார்?
A) சிங்கம்
B) புலிகள்
C) நரி
D) யானை
126. உரிமையை மட்டும் மிகுதியாக விரும்பிக் கடமையைப் புறக்கணித்தால் எது மிஞ்சும்?
A) குழப்பம்
B) கவலை
C) துன்பம்
D) இன்பம்
127. எட்டுத்தொகையில் ஒவ்வொன்றும் எத்தகு பாடல்களின் தொகுப்பு?
A) போர்ப்பாடல்கள்
B) நெடும்பாடல்கள்
C) உதிரிப்பாடல்கள்
D) துன்பப்பாடல்கள்
128. மொழியின் பழைய வடிவத்தைக் காத்து வரும் மொழி எது?
A) பேச்சு மொழி
B) இலக்கிய மொழி
C) செயல் மொழி
D) அறிவு மொழி
129. திருமாலின் கையிலுள்ள சுதர்சனம் என்பது என்ன?
A) வில்
B) வாள்
C) சங்கு
D) சக்கரம்
130. மலையிடைப் பிறவா மணியே! எனக் கண்ணகியைக் கூறியது யார்?
A) கவுந்தியடிகள்
B) கோவலன்
C) மாதவி
D ) ஐயை
131. 'இலக்கியமாவது சிறந்த கருத்துகள் அடங்கிய நூலாகும்' என்றவர்
A) ஸ்டாபோர்டு புரூக்
B) அட்சன்
C) வின்செஸ்டர்
D) எமர்சன்
132 'அம்மானை' என்ற சொல் முதன் முதலில் எந்த இலக்கியத்தில் இடம் பெற்றுள்ளது?
A) சீவகசிந்தாமணி
B) வளையாபதி
C) சிலப்பதிகாரம்
D) மணிமேகலை
133. மயில் குளிரால் நடுங்குமென்று போர்வை கொடுத்த வள்ளல் யார்?
A) பாரி
B) காரி
C) ஓரி
D) பேகன்
134. ஓதல் பிரிவுக்குரிய கால அளவு -
A) 2 ஆண்டுகள்
B) 4 ஆண்டுகள்
C) 3 ஆண்டுகள்
D) 5 ஆண்டுகள்
135. "போதுகின்ற அன்புடை நண்பனே முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்கவோ காதலோடு என் முன்னம் வந்துள்ளாய்? கடவுள் தம்மை உனக்கென வேண்டுவேன்” - என கண்ணதாசன் யாரைக் குறிப்பிடுகிறார்?
A) இராயப்பர்
B) யூதாஸ்
C) அன்னாஸ்
D) அரிமத்தியாவூர் சூசை
136. அஜயன், விஜயன் யாருடைய மைந்தர்கள்?
A) பார்வதி
B) இலக்குமி
C) கலைவாணி
D) பூமாதேவி
137. உலகிலேயே பாடு பொருள்களை 'துறை' என்ற பெயரால்
அடிக்கருத்துகளாக எண்ணி வகை தொகைப்படுத்திக் காட்டியவர் இவர் ஒருவரே - யார்?
A) சன்மதி முனிவர்
B) வச்சணந்தியார்
C) பவணந்தியார்
D) தொல்காப்பியர்
138. 'ஒருவர் செய்வதைப் பார்த்து அவ்வாறே செய்வது'
என்பதை எவ்வாறு கூறுவர்?
A) ஒழுங்குபடல்
B) படியெடுத்தல்
C) போலச் செய்தல்
D) ஒப்புமையாக்கம்
139. பித்தா பிறைசூடி பதிகத்தைச் சுந்தரர் பாடிய தலம் எது?
A) திருநள்ளாறு
B) திருமழபாடி
C) திருவெண்ணெய்நல்லூர்
D) திருவலம்புரம்
140. போர் உதவிய திண் தோளாய் பொருந்துறப் புல்லுக' என்று
இராமன் யாரை அழைத்தார்?
A) வீடணன்
B) அனுமான்
C) நீலன்
D) பரதன்
41 உலகில் சிறந்ததென்று உணர்ந்து சிந்திக்கப் பெறுவதைத்
தன்னலமற்ற முறையில் அறிந்து பரப்புவதற்கு முயற்சி செய்வது திறனாய்வாகும் என்று கூறியவர்
A) வால்டர் பெட்டர்
B) மேத்யூ அர்னால்டு
C) விக்டர் யூகோ
D) சி.டி. வின்செஸ்டர்
142 தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசு எது எனத் தமிழண்ணல் கூறுகிறார்?
A) விடுகதை
B) பழமொழி
C ) கதை
D) தாலாட்டு
143. பாலைக்கலியைப் பாடியவர்
A) கபிலர்
B) பெருங்கடுங்கோ
C) பரணர்
D) ஔவையார்
144. முச்சீரால் வரும் அடியின் பெயர் என்ன?
A) குறளடி
B) நெடிலடி
C) சிந்தடி
D ) அளவடி
145. கடல் நீருக்கும் நீலவானுக்கும் இடையில் கிடக்கும் வெள்னத்தைப் பாரதிதாசன் எவ்வாறு உருவகிக்கிறார்?
A) வீணை
B) யாழ்
C ) முழவு
D) பறை
146. படைப்பில் அமைந்த வியக்கத்தக்க விந்தைகளுள் மிகச் சிறந்தது எது என்று மு.வ. கூறுகிறார்?
A) உலகம்
B) அண்டம்
C) மனித உடம்பு
D) நீர்
147. தமிழர் கலைக் களஞ்சியம் எனத் தமிழண்ணல் குறிப்பிடும் நூல்
A) சிலப்பதிகாரம்
B) திருக்குறள்
C) மணிமேகலை
D) சீவகசிந்தாமணி
148. உள்ளத்து உணர்ச்சியின் தூண்டுதலால் இயல்பாகத் தானே வரும் மொழி
A) அறிவுமொழி
B) எழுத்துமொழி
C) செயல்மொழி
D) பேச்சுமொழி
149. "ஊர் பரந்த உலகின் முதலாகிய ஊர்” - எது?
A) திருச்சிராப்பள்ளி
B) திருப்பிரமபுரம்
C) தில்லை
D) திருவாரூர்
150. "காதலர் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல் தீதறுக' இடம்பெறும் காப்பியம் எது?
A) மணிமேகலை
B) சீவக சிந்தாமணி
C) சிலப்பதிகாரம்
D) வளையாபதி
0 Comments