PG - TRB - தமிழ் - வினாத்தாள் 2005 - 2006 - வினாக்களும் , விடைகளும் / PG TRB - TAMIL - ORIGINAL QUESTION PAPER - 2005 - 2006 - QUESTION & ANSWER

 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய 

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2005 - 2006

வினாக்களும் விடைகளும் - பகுதி - 1

01 முதல் 50 வரை - வினாக்களும் விடைகளும்

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER - 2005 - 2006

QUESTION & ANSWER - PART - 1

***************   ************   ************

1 . திராவிட மொழிகளில் மிகப் பழமையான எழுத்துருவத்தைக் கொண்ட மொழி

A) தெலுங்கு

B) கன்னடம்

C ) துளு 

D) தமிழ்

2 . நன்னூலார் குறிப்பிடும் சார்பெழுத்துகளின் வகைகள்

A ) ஆறு

B) எட்டு

C) பத்து

D) பன்னிரண்டு

3 . பின்வருவனவற்றுள் ஓரெழுத்து ஒரு மொழியாக நின்று பொருள் தருவது

A) அ

B) ஆ

C) இ

D) எ

4 . தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கை

A) 217

B) 227

C) 237

D) 247

5 . எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் உரைக்கும் நூல்கள் 

A) எட்டு

B) இரண்டு

C) மூன்று

D) எதுவுமில்லை

6 . தீர்மானம் செய்தலின் ஒருங்கிணைந்த பகுதி

A) திட்டமிடல்

B) இணைந்து செயலாற்றுதல்

C) மதிப்பிடல்

D) ஆய்வு செய்தல்

7 . ஏதேனும் ஒரு முடிவு அல்லது குறிக்கோளை அடைவதற்கு உதவும் உயர்தகவு என்பது

A) கருவிசார் உயர்தகவு

B) மரபுசார் உயர்தகவு

C) உள்ளார்ந்த உயர்தகவு

D) ஊக்குவிக்கப்பட்ட உயர்தகவு

8 .மக்கள் தேவைக்கேற்ற மற்றும் அவர்களது சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தக் கூடிய கல்வி

A) முதியோர்க்கான கல்வி 

B) செயல்முறைக் கல்வி

C) தொழில்முறைக் கல்வி 

D) சூழ்நிலைக் கல்வி

9 . இந்தியாவிலுள்ள 'பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணம்

A) வறுமை

B) மக்கள்தொகைப் பெருக்கம்

C) சூழ்நிலை பற்றிய எதிர்மாறான நம்பிக்கை

D) மக்களின் அறியாமை

10. சிறந்த கல்வியை அளிக்கும் பொருட்டு பயன்படுத்தப்படும்தத்துவமான பங்களிக்கும் நீதி என்பது

A) சமூகக் கல்வி

B) பெண் சமத்துவத்திற்கான கல்வி

C) அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி

D) கல்வியில் சமவாய்ப்பு அளித்தல்

11. மருந்து பற்றிக் கூறாத நூல் இது

A) திரிகடுகம்

B) ஏலாதி

C) இன்னிலை

D) சிறுபஞ்சமூலம்

12. பக்தி இயக்கக் காலம் என்பது

A) சேரர் காலம்

B) சோழர் காலம்

C) பாண்டியர் காலம் 

D) பல்லவர் காலம்

13. திராவிட வேதம் என்று கூறப்படுவது

A) திருவாய்மொழி 

B) திருமந்திரம்

C) திருக்குறள்

D) திருவிருத்தம்

14. சுந்தரர் பாடிய பாடல்கள் இடம் பெற்றுள்ள திருமுறை

A) 1, 2, 3 ஆம் திருமுறை 

B) 4, 5, 6 ஆம் திருமுறை

C) 7-ஆம் திருமுறை 

D) 8-ஆம் திருமுறை

15. பெருங்காதையின் மூல நூல்

A) மகாபாரதம்

B) கம்பராமாயணம்

C) மத்தவிலாசப் பிரகசனம்

D) பிருகத்கதா

16. 'திராவிட சிசு' என்று அழைக்கப்படுபவர்

A) திருநாவுக்கரசர் 

B) திருஞானசம்பந்தர்

C) சுந்தரர்

D) மாணிக்கவாசகர்

17. சகஸ்ரநாமம் நிறுவிய நாடகக் குழுவின் பெயர்

A) சேவா ஸ்டேஜ் 

B) ஷண்முகானந்த சபை

C) சுகுணவிலாச சபை 

D) இயலிசை நாடக மன்றம்

18. மறைமலையடிகள் நடத்திய இதழ்

A) சுதேசமித்திரன் 

B) இந்தியா

C) சரஸ்வதி

D) ஞானசாகரம்

19. 'மாங்கனி' எனும் சிறுகாப்பியத்தை இயற்றியவர்

A) தேசிக விநாயகம் பிள்ளை

B) கண்ணதாசன்

C) வாணிதாசன்

D) வெ. இராமலிங்கம் பிள்ளை

20. தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டின் என்று போற்றப்படுபவர்

A) லக்ஷ்மி

B) இராஜம் கிருஷ்ணன்

C) அனுத்தமா

D) ஆர். சூடாமணி

21. அன்பே சிவமென்றது

A) கபிலர்

B) சுந்தரர்

C) பரணர்

D) திருமூலர்

22. குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் மலர்களின் எண்ணிக்கை

A) 9

B) 19

C) 99

D) 109

23. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறநூல்கள்

A) 1

B) 11

C) 6

D) 5 

24. கார்நாற்பதின் ஆசிரியர் சார்ந்திருந்த சமயம்

A) சைவம்

B) வைணவம்

C) பௌத்தம்

D) சமணம்

25. காரைக்காலம்மையாரின் இயற்பெயர்

A) குந்தவை

B) அமராவதி

C) திலகவதி

D) புனிதவதி

26. "அணைந்த மெழுகுவர்த்தி இன்னொரு மெழுகுவர்த்தியை
ஒளி ஏற்றாது” எனக் கூறியவர்

A) ஜவஹர்லால் நேரு

B) தாகூர்

C) சுவாமி விவேகானந்தா 

D) டாக்டர். இராதாகிருஷ்ணன்

27. திறனுள்ள பயிற்சி பெற்ற நபர்கள் வெளிநாடு செல்வதற்குப் பெயர்

A) மூளை வழிந்தோடல்

B) திறனுள்ளவர்களைச் சரியாகப் பயன்படுத்தாமை

C) கருத்துப் புயல்

D) தனிப்பட்ட நபரின் விருப்பம்

28. காந்திஜியின் கருத்தான ஆதாரக் கல்வியின் சிறப்பம்சம் யாதெனில்

A) தன்னைத்தான் அறிதல் 

B) சுய ஆதாரம்

C) சுய கற்றல்

D) தொழில் மையமானது

29. தேசிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்தத் தேவையானவற்றுள் முதன்மையானது

A) தேசிய நாட்களைக் கொண்டாடுதல்

B) மத ஒப்பீட்டினைப் போதித்தல்

C) தேசிய ஒருமைப்பாட்டுக்
 கூடாரங்களை அமைத்தல்

D) உணர்வுபூர்வமான ஒருமைப் பாட்டினைக் கொணர்தல்

30. கல்வி நிர்வாகத்தில் சிறந்த அணுகுமுறை

A) குடியாட்சி

B) அறிவியல் சார்ந்தது

C) சமூகவியல் சார்ந்தது

D) அதிகரிக்கப்பட்ட எழுத்தறிவு தரம்

31. பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தவர்

A) பெரியாழ்வார் 

B) நம்பியாண்டார் நம்பி

C) நாற்கவிராச நம்பி 

D) நாதமுனி அடிகள்

32 தொல்காப்பியத்திற்கு முழுமையும் உரை எழுதிய உரை ஆசிரியர்

A) பேராசிரியர்

B) இளம்பூரணர்

C) நச்சினார்க்கினியர் 

D) சேனாவரையர்

33. சைவ சித்தாந்த சாத்திரங்களின் எண்ணிக்கை

A) 14

B) 41

C) 144

D) 114

34. சிற்றிலக்கியங்களின் வகை

A) 98

B) 89

C) 69

D) 96

35. கிறிஸ்துவக் கம்பர் என்று போற்றப்படுபவர்

A) வீரமாமுனிவர்

B) சாமுவேல் பிள்ளை

C) ஹெச்.ஏ. கிருட்டிணப் பிள்ளை

D) வேதநாயகம் பிள்ளை

36. மனித உரிமைக் கல்வியின் நோக்கம்

A) மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் இவற்றை பயன்படுத்தும் வழிகளை ஏற்படுத்தல்

B) குடிமக்களை தங்களுடைய உரிமைக்குப் போராட தயார்படுத்துவது

C) ஏழைகள் மற்றும் சமூகப் பின்தங்கிய மக்களைப் பாதுகாத்தல்

D) குழந்தைகள் மற்றும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லங்களை அமைத்தல்


37. ஒரு பெண் இரட்டைப் பொறுப்பு கொள்ள வேண்டியதன் காரணம்

A) அவள் ஒரு தாயும், ஒரு மனைவியுமாதலால்

B) அவள் ஒரு மனைவியும், ஒரு மருமகளுமாக இருப்பதால்

C) அவள் ஆட்சியும், சேவையும் செய்வதால்

D) அவள் வீட்டையும் காத்து, வருமானமும் ஈட்டுவதால்

38. ஒரு நல்ல தலைவரானவர்

A) பின்பற்றுகிறவர்களிடமிருந்து மனமுவந்தால் ஒத்துழைப்பைப் பெறுபவர்

B) பின்பற்றுபவரின் விருப்பத்திற்கேற்ப செயல்படுபவர்

C) எப்போதும் நேரம் தவறாதவர்

D) தாமதமாக முடிவுகள் எடுப்பவர்

39. கல்வியில் வழிகாட்டுதல் என்பது

A) வட்டத் துளைகளுக்கு ஏற்ற வட்ட முளைகளையே ஒதுக்கீடு செய்தல்

B) குறையறிதலும், உள்ளார்ந்த திறன்களை முன் கூட்டியே அறிதலும்

C) மாணவர்களைச் சோதித்தலும், அளவிடுதலும்

D) மாணவர்களைச் சமூக எதிர்பார்ப்பு களுக்கேற்ப தயார் செய்தல்

40. சமுதாயக் கல்வியின் நோக்கமாவது

A) சமுதாய மாற்றத்தின் உருவாக்கல் மட்டும்

B) வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல்

C) சமுதாய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல் மற்றும் சமுதாய மாற்றத்தை உருவாக்குதல்

D) அறியாமையைப் போக்கல்

41 "உலக சுற்றுச்சூழல் தினம்” கொண்டாடப்படுவது

A) ஜுன் 5

B) ஜூலை 10

C) டிசம்பர் 8

D) மார்ச் 8

42 இந்தியாவில் முதன்முதலில் "பஞ்சாயத்து ராஜ்” என்ற அமைப்பை ஏற்படுத்திய மாநிலம்

A) பஞ்சாப்

B) இராஜஸ்தான்

C) தமிழ்நாடு

43. "பேக்கிங் சோடா”வின் வேதிப் பெயர்

A) சோடியம் கார்பனேட்

B) சோடியம் பைகார்பனேட்

C) சோடியம் நைட்ரைட்

D) சோடியம் நைட்ரேட்

44. "இரத்தம் உறைதலில்” எந்த வைட்டமின் உதவி புரிகிறது ?

A) A

B)'D

C) E

D) 'K


45. இந்தியாவின் தலைமை நீதிபதி

A) ஆர்.சி. லஹோதி 

B) சுபாஷன் ரெட்டி

C) ஜி.பி. பட்டநாயக்

D) ஏ.ஆர். லட்சுமணன்

46. 'கண்டதும் கேட்டதும்” என்ற உரைநடை நூலை எழுதியவர்

A) ஆறுமுக நாவலர்

B) உ.வே. சாமிநாதையர்

C) ந.மு. வேங்கடசாமி நாட்டார்

D) சி.வை. தாமோதரம் பிள்ளை

47. பஞ்சதந்திரக் கதையின் ஆசிரியர்

A) தாண்டவராய முதலியார்

B) செல்வக் கேசவராய முதலியார்

C) வ.வே.சு. ஐயர் 

D) பி.எஸ். இராமையா

48. 'தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்' எனும் நூலை இயற்றியவர்

A) டாக்டர். கைலாசபதி

B) எஸ். வையாபுரிப் பிள்ளை

C) கா. சிவத்தம்பி 

D) கோ. கேசவன்

49. கஜூராகோ கோயில்கள் அமைந்துள்ள மாநிலம்

A) ஆந்திரப் பிரதேசம் 

B) மத்தியப் பிரதேசம்

C) உத்திரப் பிரதேசம் 

D) கர்நாடகம்

50. 'மணிக்கொடி' எனும் பத்திரிகை தோன்றிய ஆண்டு

A) 1903

B) 1913

C) 1923

D) 1933

*****************   ****************   ********


தேர்வில் வெற்றி உங்களுக்கே !

வாழ்த்தும் ,

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*****************   *************   **********


Post a Comment

0 Comments