இந்திய காவலர் தினம்
( Central Reserve Police Force )
21 • 10 • 2021
நாட்டின் வெளி பாதுகாப்பையும் , நாட்டிற்குள்ளான பிரச்சனைகளையும் காப்பது, தீர்ப்பது ஆகியவற்றில் காவலர்களின் பங்கு இன்றியமையாத தாகும் . அவர்களின் வெற்றியையும், தியாகத்தையும் போற்றும் வகையில் இந்தத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
மத்திய சேமக் காவல்படை ( சி.ஆர். பி.எஃப் ) என்பது மத்திய காவல் ஆயுதப் படைகளில் பெரிய படையாகும் . இது இந்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் . இப்படை மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும். நாட்டில் ஏற்படும் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டது.
1959 -- ம் ஆண்டு அக்டோபர் 21 - ம் நாள் இப்படையைச் சார்ந்த S. P . கரம் சிங் மற்றும் அவரது 20 - வது படைவீரர்களும் இந்திய- சீனப் போரில் , சீன இராணுவத்தால் " லடாக் " பகுதியில் சுடப்பட்டார்கள். அந்த நிகழ்வின் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் - 21- ம் நாளை காவலர் நினைவு தினமாக அனுசரிக்கப் பட்டு வருகிறது.
இந்தப் படை 1939 - ம் ஆண்டு ஜூலை 27 -ம் நாள் பிரிட்டிஷ் அரச பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட து. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 1949 - ஆம் ஆண்டு டிசம்பர் 28 - ம் நாள் சி.ஆர். பி. எஃப் . சட்டப்படி மத்திய சேமக் காவல்படை ஆனது.மேலும் சமீப காலங்களில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பிற்கு அடுத்ததாக நாட்டின் பொதுத் தேர்தல் பணிக்கும் இப்படையை பயன்படுத்தப்படுகிறது. துணை இராணுவப் படையில் இதுவே பெரிய படையாகும். இப்படை டெல்லியைதலைமையிடமாகக் கொண்டு சி.ஆர்.பி. எஃப் உருவாக்கப்பட்டது.
மத்திய சேமக் காவல் படையானது அரசகுடும்பச் சொத்துக் களைப் போராட்டக் காரர்களிடம் இருந்து பாதுகாக்கும் விதமாக மத்திய பிரதேசத்தில் 1939 - ஆம் ஆண்டு ஜூலை 27 - ம் நாள் அரச பிரதி நிதிக் காவலர் .( Crown RePresentive ' s ) என்ற படை யை உருவாக்கினர்.இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1949 -ல் மத்திய சேமக் காவல் படைச் சட்டம் இயற்றப்பட்டு ,பின் மத்திய சேமநலக் காவலர் படை என்ற பெயரில் மாற்றப்பட்டது. பின்னர் 1960 -ம் ஆண்டு மற்ற மாநிலப் படைகளும் இதனுடன் இணைக்கப்பட்டன.
எல்லைப் பாதுகாப்பில் - C R P F
1965 -ம் ஆண்டு எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கும்வரை இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியை , இந்தப்படை பாதுகாத்து வந்தது. அதே 1965 - ம் ஆண்டு நடந்த இந்திய - பாகிஸ்தான் போரில் இரண்டாம் பட்டாலியனைச் சேர்ந்த இரண்டு கம்பெனியைக் கொண்ட 150 -வீரர்கள் 1600 படைவீரர்களைக் கொண்ட பாகிஸ்தானிய இராணுவத்தை குஜராத், கங்ஜர் காட் என்ற இடத்தில் வீழ்த்தினர்.
சமீபகாலமாக இந்திய அமைச்சர்களுக்கு இப்படையின் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டுகிறது. இந்தப் படை வீரர்கள் 2001 -- ம் ஆண்டு புது தில்லியில் தீவிரவாதிகள் இந்திய நாடாளுமன்றத் தாக்குதலின் போது ஐந்து தீவிர வாதிகளைச் சுட்டு வீழ்த்தினர்.
கோப்ரா- ( Commando Battalion For Resolute Action )
கோப்ரா என்பது இந்தியாவின் நக்சலைடுடன் மோதும் மத்திய பின்னிருப்புக் காவல் படையின் ஒரு பிரிவாகும். இது இந்தியாவின் மத்திய காவல் ஆயுதப் படைகளிலேயே பிரத்யேக கரந்தடிப் போர்முறைத் தாக்குதல் அற்ற படையாகும். இத்தகைய சிறப்புப் பயிற்சிகள் மூலம் சிறிய நக்சலைட் குழுக்கள் சிதைக்கப்பட்டது. ஒரு பட்டாலியன் என்பது 500 முதல் 1500 வரை படைவீரர்கள் கொண்ட குழுவாகும். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இந்திய மத்திய காவல் துணைப்படையின் திறமைகளையும் சவால்களைச் சமாளிக்கும் திறத்தையும் கண்டு பெருமிதம் கொள்வோம்! நாட்டின் நலன் காக்க தங்கள் இன்னுயிரை ஈந்த காவலர்களைப் போற்றி வணங்கி நன்றி செலுத்துவோம்.!
0 Comments