காந்தி ஜெயந்தி - உலக அகிம்சை தினம் - சிறப்புப் பதிவு

 


    காந்தி   ஜெயந்தி  (  2 • 10 • 2021 ) 

           உலக  அகிம்சை  தினம்

       சுதந்திர   இந்தியச்  சரித்திரத்தின்   கதாநாயகர் ,  எவருக்கும்  கட்டுப்படாத   சுதந்திர   நாட்டை   நிலைநிறுத்த போராடிய   மாவீரர்,    வீரமும் ,  தீரமும்  ,  விவேகமும்   துடிப்பும் கொண்ட   புதிய   தலைமுறையைக் கொண்ட   நாட்டை உருவாக்கப்   பாடுபட்ட    தியாகத்   திருமகனார் அண்ணல்  காந்தியடிகளின்    வீர வரலாற்றை   விழாவாக்கும்  நாள்இன்று.  


மிகத்  துள்ளியமாத்   திட்டமிட்டு ,   அசத்தலாக  அணிவகுத்து 

சிந்தித்து  செயல்பட்டு  ,  தன்  கனவை  நனவாக்கிய  "பாரதத்

தந்தை "  ,  பாய்ந்தும்,  பதுங்கியைம்,   சீரியலும், சிந்தித்தும் 

சுற்றிச்  சுழன்று   ஆயுதமில்லா   அகிம்சை   அணியொன்றை 

அணிந்து, ஆங்கிலேயரை  விரட்டியடித்த  வீர  வரலாற்று 

வித்தகர்   காந்தியடிகளின்  பிறந்த நாள்  திருவிழா இன்று.


அத்தகு  திருநாளை  இன்று  உலகமே   தலை வணங்கி  உவகைக்  கொள்ளும்   உன்னதத்  திருநாள்.  அகிம்சை கொள்கையினை  அறிமுகப்படுத்தி  அதன்  பாதையில் பவனி  வர   உலகமே   ஆயத்தமாகிக்  கொண்டிருக்கும்  நிலை  உருவாகியுள்ளது  என்பது  தெளிவாகிறது. 

ஆம் .!

                இன்றுள்ள    அவசர   உலகின்   அநியாயம்   தவிர்க்க காந்திய  கொள்கையே  சிறந்ததெ கண்டுக்கொண்ட உலகம் இதனை  அரங்கேற்றி   அமைதியைக்காண  விழைகின்றது. உலக  மக்களிடம்  பெரும் வரவேற்பைப்  பெற்று விளங்கும் அகிம்சைக்  கொள்கையை ,  அமெரிக்கா  போன்ற  மேலை நாடுகளில்  பள்ளிகளிலும்,  கல்லூரிகளிலும்  வன்முறைச் சம்பவங்கள்   அதிகரித்து  வருவதால்  , கல்வியக   மாணவர்களிடம்  அறிமுகப்படுத்த  மேற்கத்திய  அரசுகள் முடிவுகண்டு   முழங்குகின்றன. 

"மகாத்மா"   என  திரு .  ரவீந்திர நாத்  தாகூரால்   போற்றப்பட்ட  மகாத்மா காந்தியடிகளின்  பிறந்த தினமான அக்டோபர்2- ம்  நாளை  " உலக   அகிம்சை  தினமாக "  அனுசரிக்க வேண்டி  இந்தியா  சார்பாக  2007 - ம்  ஆண்டு  ஜுன்  15 - ம் நாள்  தீர்மானம்  கொண்டுவரப் பட்டது.  இத்தீர்மானத்திற்கு 145 - நாடுகள்  ஆதரவு  தெரிவித்தன.   அத்தீர்மானத்தை நிறைவேற்றிய   ஐ.நா   அக்டோபர்  2 - நாளை  சர்வதேச அகிம்சை  தினமாக  கடைபிடிக்க  இசைந்தது. 

இத்தினம்   இந்தியாவில்  ஆண்டு தோறும்   மாபெரும்  சிறப்புமிக்க  திருநாளாக  கொண்பாடப் படுகிறது. மேலும் இத்தினத்தை  சர்வதேச அளவில்  கொண்டாட வேண்டுமென அரசு மற்றும்  அரசு சாரா   நிறுவனங்களையும், ஐக்கியநாட்டு  உறுப்பு க்கழகங்களையும்  வலியுறுத்தியது.

 மோகன் தாஸ்  கரம்  சந்த்   காந்தி ,  போர்பந்தர் சமஸ்தானத்தின்   திவானாகவும்,  பின்  இராஜ் காட்டின்    முதலமைச்சராகவும்  இருந்த  கரம்  சந்த்  காந்தி  மற்றும்  புத்தலிபாய் அம்மை அவர்களின்  மகனாக  1869 - ம்  ஆண்டு  அக்டோபர்  2 -- ம்  நாள்  பிறந்தனர். 

சிறுவயதிலேயே  வழக்கறிஞர்  படிப்பிற்காக  இலண்டன்  சென்று  " பாரிஸ்டர் " பட்டம்  பெற்றார்.  பெரும்  செல்வச்செழிப்பில்   வளர்ந்த   காந்தியார்,  தம்  வளம்மிக்க  வாழ்வை விடுத்து ,  இந்திய  நாட்டு   துன்பம்   தீர்க்கும்   தீர்வுகாண புறப்பட்டார்.  தாய் நாட்டின்   தரமிழந்த  நிலைக்கண்டு விடுதலைக்குப்   பாடுபடும்   தியாக வாழ்வை மேற்க்கொண்டார். இந்திய சுதந்திரத்திற்காக  பல  போராட்டங்களை நடத்திய வற்றுள்   சத்தியாகிரகப் போராட்டம் என்பது தன்மானம்  காக்கும்  தனிப் போராட்டமாக  விளங்கியது.

சத்யாகிரகம்  தோன்றிய  வரலாறு :

        தென்  ஆப்பிரிக்காவில்  ஒரு  மாகாணத்தில்  இந்தியர்களுக்கு   எ‌திராக  பிறப்பிக்கப்பட்ட  சட்டத்தின்படிஅங்கு  வாழுகின்ற  இந்தியர்கள்  பெருவிரல்   பதிவு  செய்த தங்களுடைய  அடையாள  அட்டையை   எங்கு  சென்றாலும் எடுத்துச்   செல்ல வேண்டும். கேட்கும்  போது  காட்ட  வேண்டும்.அவ்வாறு   பதிவு  செய்யாத   இந்தியர்கள்  அங்கேவசிப்பதற்கான   உரிமையினை   இழந்தவர்கள் ஆவார்கள். 

       அடையாள   அட்டையை   இழந்தவர்கள்  ,  காட்டத் தவறியவர்கள்  சிறைதண்டனை  போன்ற  பல் வேறு விதமான  தண்டனைக்கு  ஆளாவர். இது போன்ற  பல  இழிவுப்படுத்தும்  சட்டம்  இயற்ற ப்பட்டு  இன்னல்  தந்தனர். 

சட்டமறுப்பு   கண்ட  இஸ்லாமியர் :

            இந்நிலைதனைக்  களைய  காந்தி தலைமையிலான   அமைப்பில் , இங்குள்ள   இந்தியர்   ஒன்று  திரண்டு  போராடத்   துணிந்தனர். 1906 - ம்  ஆண்டு  " ஜோஹன்ஸ்பர்க்"  நகரில்  செப்டெம்பர்  11 - ம்  நாள்    எம்பயர்  திரையரங்கில்   கூடினர்.  அக்கூட்டத்திற்கு   தலைமை  வகித்தார்   " அப்துல்கனி "  என்னும்  புகழ்மிக்க  வர்த்தகர் ஆவார். 

கூட்டத்தில்  பலரும்   பல்வேறுபட்ட  இந்திய   மொழிகளில்   பேசினர்.   அப்துல்கனி  தான்  அந்தச் சட்டப்படி   பதிவு செய்ய   விரும்பவில்லை .  தேவைப்படின் சிறைச்செல்லவும்   தயார்  என  அறிவித்தார். அவரது  செய்கை  சட்டமறுப்பு   எனும்  சத்தியாகிரக அமைப்பாக  இருந்தது.  இவ்வாறான  அறிவிப்பை  முதலில்  ஒரு  இஸ்லாமியர்  செய்தது   போற்றத்தக்கது.

      அக்கூட்ட த்தில்   கடைசியாக    பேசிய  காந்திய டிகள், ஆப்பிரிக்கா  வாழ்  இந்தியர்கள்    உறுதிமொழி  எடுத்துக் கொள்ள  வலியுறுத்தினார்.  அவற்றினால் ஏற்படும்  கடுமைகளையும் , கொடுமைகளையும்  விளக்கினார்.  இவற்றில் ஈடுபட அனைவரும்  தயங்கினாலும்,  தான்  மட்டும் ,  போராட்ட த்தில்  ஈடுபட ப்  போவதாக   முடிவெடுத்தார். இவ்வாறே  உரிமையைப்  பறிக்கும்   சட்டத்தை  மீறும்  " சத்தியாகிரகம்"   என்னும்   தாரக   மந்திரம்   உருவானது.

சத்தியாகிரகம் :

                தான்  தொடங்கிய   இயக்கத்திற்கு   "சாத்விக  எதிர்ப்பு " ( passive   Resistance )  என்ற  பெயரையே   ஆரம்ப த்தில்   பயன்படுத்தினார்.   அந்நிய பெயரான  இவற்றை  எல்லோராலும்   பயன்படுத்த  இயலாத  காரணத்தால்  ஒரு  நல்ல  பெயரைச்  சூட்ட  எண்ணி  " இந்தியன்  ஓப்பீனியன் " என்ற  பத்திரிக்கை  மூலம்   போட்டி நடத்தினார்.   அப்போட்டியில்   கலந்துக்கொண்ட   மகன்லால்  காந்தி   என்பவர்  "  சத்கிரஹ"   என்ற   வார்த்தையைத்   தந்தார்.இதன் பொருள்   " ஒரு  நல்ல   காரியத்தில்  உறுதி "  என்பதாகும். இவ்வாக்கியம்   காந்தியடிகளைக்  கவர்ந்தது.   இருந்தாலும்  தான்  எதிர்பார்த்த    முழுக்கருத்தையும்  தராததால்   ,  சிறு  மாற்றம்   செய்து   " சத்யாகிரகம் "  என  தன் இயக்கத்திற்கான   பெயராக   அறிவித்தார்.  

             "சத்யம் "  என்பதில்  அன்பு  என்ற  பொருளும்  ,  " ஆக்ரஹ"   என்பது  உறுதி   என்னும்  பொருளும் தருவதாகும் . உறுதி சக்தியை  உருவாக்க வல்லது.  எனவே  சக்திக்  என்ற  பொருளில்  " ஆக்ரஹ"   பயன்படுகிறது.  ஆகவே  உண்மை  அல்லது   சத்தியத்திலிருந்து   பிறந்த  சக்தி  என்பதே   சத்தியாகிரகம்   என்பதன்   பொருள்   ஆயிற்று. சத்தியாகிரகம்  என்பது  காந்திய டிகள்    தந்த   பொருள்  நிறைந்த   இயக்கப்  பெயராயிற்று.  சத்தியத்தைக்  கடைப்பிடிப்பதே  சத்தியாகிரகம்  ஆகும். எனவே  சத்தியத்தின்   சக்தியே  சத்தியாகிரகம்  ஆகும்.

சத்தியாகிரகம்  இந்தியாவில்  மட்டுமல்லாது   உலகில்  அடைமைப்படுத்தப் பட்ட  பல  நாடுகள்  எழுச்சிப் பெற்று   விழிப்படைய   இவ்வியக்கக்  கொள்ளை யே  காரணமாக   அமைந்தது.  காந்திய   வழியில்  ஈர்க்கப்பட்ட   "  மார்டின்  லூதர்   லூதர்  கிங் " ,   நெல்சன்  மண்டேலா  "   போன்றவர்களும்  இக்கொள்கையைப்   பின்பற்றி  விடுதலை  கண்டனர். இந்திய   தேச த்து    சத்தியாகிரக  வழியில்  நலமே   விதைப்போம்  என  உறுதியெடுத்து   மகிழ்வோம்.!

Post a Comment

0 Comments