எட்டாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 9 வினா & விடை / 8th TAMIL - ACTIVITY - 9 , QUESTION & ANSWER

 

எட்டாம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 9

பிறமொழிச் சொற்களுக்கு

இணையான தமிழ்ச் சொற்கள்,

கலைச்சொற்களை அறிதல்

வினாக்களும் , விடைகளும்

***************    ***************   **********

திறன் / கற்றல் விளைவு

6.14 புதிய சொற்களைத் தெரிந்து கொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்தல்,

அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயலுதல்.

கற்பித்தல் செயல்பாடு

அறிமுகம்

       தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழி. பிறமொழிச் சொற்களின் கலப்பில்லாமல் தனித்தியங்கும் மொழி. எனினும் பிறமொழிச் சொற்கள் தமிழ் மொழியில் காலப்போக்கில்   கலந்துவிட்டன. தமிழ் மொழிச் சொற்களைப் போலவே பேச்சிலும் எழுத்திலும் அவை   பயன்படுத்தப்  படுகின்றன. இதனைத் தவிர்த்து அருமையான தமிழ் நடையில் பேசவும் எழுதவும் பிறமொழிச் சொற்களுக்குரிய தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்வது   இன்றியமையாததாகும்.

மாணவர்களே சில பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச் சொற்களை அறிவோமா?

(எ.கா.) டிரஸ்ட்     அறக்கட்டளை

லைப்ரரி                 நூலகம்

ஆண்டு                   வருஷம்

கும்பாபிஷேகம்   குடமுழுக்கு

சந்தோசம்                 மகிழ்ச்சி

மதர்ஸ் டே                 அன்னையர் நாள்

தேங்க்யூ                    நன்றி

அடுத்துக் கலைச்சொற்கள் பற்றி அறிந்து கொள்வோம்.

ஒரு துறை சார்ந்த வல்லுநர்கள் தங்களிடையே அத்துறை சார்ந்த செய்திகளைச் சுருக்கமாகவும், துல்லியமாகவும்பரிமாறிக்கொள்வதற்குகலைச்சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கலைச்சொற்கள் பொருள் ஆழமுடையதை வெளிப்படுத்தும். சில கலைச்சொற்களைப் பார்ப்போம்.


மின் நூலகம்      E- Library
மின்நூல்              E - BOOK
மின் இதழ்கள்   E-Magazine
பயணப் படகுகள் Ferries
பாரம்பரியம்            Heritage
நுகர்வோர்               Consumer
Voyage                          கடற்பயணம்
கலப்படம்                  Adulteration
வணிகர்                     Merchant
இணையம்                Internet
தேடுபொறி               Search engine
Face Book                     முகநூல்
புலனம்                        Whats app
தொடுதிரை              Touch screen
மின்னஞ்சல்             E- mail
கண்டம்                        Continent
climate                           தட்பவெப்பநிலை
வானிலை                  Weather
வலசை                        Migration
புகலிடம்                       Sanctuary

*****************   **************  **********

மதிப்பீட்டுச் செயல்பாடு - 1

கீழ்க்காணும் பத்தியைப் படித்து, ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.

      மகிழன் காலையில் எழுந்தான். தன் காலைக் கடன்களை முடித்தான்.
காலை உணவு சாப்பிட்டான். 8.30 மணிக்குப் பள்ளி பேருந்தில்ஸ்கூலுக்குச் சென்றான். பள்ளியில்காலைவழிபாட்டுக் கூட்டத்தில்கலந்துகொண்டான்.தனது வகுப்பில் டீச்சரிடம் அனைத்துப் பாடங்களையும் சூப்பராகப் படித்தான். மதிய உணவு இடைவேளையில்
பிரண்சுடன் லஞ்ச் சாப்பிட்டான். மதியம் கணிதப் பாடவேளையில் ஆசிரியர் கொடுத்த ஆக்டிவிட்டி செய்தான். ஈவினிங் 4.30 மணிக்கு ஸ்கூல்பெல் ஒலித்தது. பள்ளி முடிந்து அனைவரும் வீட்டிற்குச் சென்றனர். வீட்டிற்குச் செல்லும் வழியில் ரோட்டில் செல்லும்
பஸ், கார், லாரி, மிதிவண்டி போன்ற வாகனங்களைக் கண்டு இரசித்தான். வீட்டிற்குச் சென்றவுடன் யுனிபார்மை மாற்றிக் கை, கால்களைக் கழுவினான். மம்மி கொடுத்த ஸ்நாக்சைச் சாப்பிட்டுவிட்டு தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றான்.

ஆங்கிலச் சொற்கள்    தமிழ்ச் சொற்கள்


ஸ்கூலுக்கு               பள்ளிக்கூடத்திற்கு


டீச்சரிடம்                   ஆசிரியரிடம்

சூப்பராக                   நன்றாக
பிரண்சுடன்              நண்பர்களுடன்
ஆக்டிவிட்டி                செயல்பாடு
ஈவினிங்                     மாலை 
ஸ்கூல்பெல்              பள்ளி மணி
ரோட்டில்                      சாலையில்
பஸ்                                பேருந்து
கார்                                மகிழுந்து
லாரி                              சரக்குந்து
யுனிபார்ம்                  சீருடை
மம்மி                            அம்மா
ஸ்நாக்ஸ்                    தின்பண்டம்


மதிப்பீட்டுச் செயல்பாடு - 2


படத்தைப் பார்த்து ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.


CALENDAR     நாட்காட்டி
DIAMOND       வைரம்
April 2021)
m Sun Mon Tue Wed Thu Fri Sat
1 2 3
4
5
8 9 D
- 11 12 13 14 15 10 17
. 18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30
நாள்காட்டி


PARLIAMENT    பாராளுமன்றம்
MUSICAL
INSTRUMENTS  - இசைக்கருவிகளெ
TWIN


CONGRATULATIONS

TORTOISE

Congratulations!

TO

CLASSROOM

ESCALATOR

மதிப்பீட்டுச் செயல்பாடு - 3

பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தேர்ந்தெடுத்து

எழுதுக.

(ஆணை, பயன்பாடு, சிற்றுண்டி, அறிஞர், கருவூலம், பணி, வழிபாடு, இழப்பு)

பிறமொழிச் சொல்

தமிழ்ச்சொல்

ஆபூர்வம்

புதுமை

நஷ்டம்

ஆராதனை

உத்தியோகம்

கஜானா

நிபுணர்

நாஷ்டா

உபயோகம்

உத்தரவு








Post a Comment

0 Comments