ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு
வினாத்தாள் - 2004 - 2005
வினாக்களும் விடைகளும் - பகுதி - 2
51முதல் 100 வரை - வினாக்களும் விடைகளும்
PG - TRB - TAMIL
ORIGINAL QUESTION PAPER - 2004 - 2005
QUESTION & ANSWER - PART - 2
**************** ************** **********
51. அகநானூற்றின் வேறு பெயர் யாது?
A) புலவராற்றுப்படை
B) பாணாறு
C) நெடுந்தொகை
D) நெஞ்சாற்றுப்படை
52 சேர மன்னர்களைப் பற்றி மட்டுமே பாடும் எட்டுத்தொகை நூல் எது?
A) பரிபாடல்
B) புறநானூறு
C) பதிற்றுப்பத்து
D) கலித்தொகை
53. அறிவு எனப்படுவது பேதையார் சொல்நோன்றல் எனக் குறிப்பிடும் எட்டுத்தொகை நூல் யாது?
A) கலித்தொகை
B) புறநானூறு
C) குறுந்தொகை
D) பரிபாடல்
54. 'வினைக வயலே வருக இரவலர்' எனக்கூறும் எட்டுத்தொகை நூல் எது?
A) புறநானூறு
B) நற்றிணை
C) அகநானூறு
D) ஐங்குறுநூறு
55. 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்' என்று குறிப்பிடும் நூல் யாது?
A) நற்றிணை
B) புறநானூறு
C) குறுந்தொகை
D) பரிபாடல்
56. தொல்காப்பியம் குறிப்பிடும் பொருள்கோள்கள்
A) நான்கு
B) ஒன்பது
C) எட்டு
D) பத்து
57. தன்மையணியின் வேறுபெயர் யாது?
A) இயல்பு நவிற்சியணி
B) ஒட்டணி
C) தற்குறிப்பேற்றவணி
D) நுட்பவணி
58. ‘சிறப்பினும் பொருளினும் குணத்தினும் உண்மை மறுத்துப் பிறிதுரைக்கும்’ அணி எது?
A) தீவகவணி
B) முன்னவிலக்கணி
C) அவநுதியணி
D) விபாவனையணி
59. 'கருதிய பொருள் தொகுத்து அது புலப்படுவதற்கு ஒத்தது என்று உரைக்கும்' அணி யாது?
A) ஒட்டணி
B) இலேசவணி
C) சங்கீரணவணி
D) ஆர்வமொழியணி
60. வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும் உயர்ச்சி புனைந்துரைக்கும் அணி எது?
A) ஆர்வமொழியணி
B) அதிசயவணி
C) உதாத்தவணி
D) சுவையணி
61 மரபு என்ற பெயர் கொண்டு முடியும் இயல்கள்
A) மூன்று
B) நான்கு
C) ஐந்து
D) இரண்டு
62 அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருமாறு அமையும்தொடையின் பெயர் என்ன?
A) இயைபுத் தொடை
B) மோனைத் தொடை
C) அளபெடைத் தொடை
D) எதுகைத் தொடை
63. வஞ்சிப்பாவிற்குரிய ஓசை எது?
A) துள்ளலோசை
B) செப்பலோசை
C) தூங்கலோசை
D) அகவலோசை
64. கலிப்பாவிற்குரிய உறுப்புகள்
A) ஐந்து
B ) ஆறு
C) பதினெட்டு
D) பத்து
65. இழுமென்ற ஒலியுடன் சொற்களைப் புணர்த்தி விழுமிய பொருள்களைப் பாடும் வனப்பு யாது?
A) தோல்
B) இழைபு
C) இயைபு
D) அம்மை
66. கால் கழீஇ வருதும் என்பது
A) இடக்கரடக்கல்
B) குழூஉக்குறி
C) இலக்கணப் போலி
D) மரூஉ
67. ஈரிதழ் ஒலிகள்
A) தந
B ) ப ம
C ) ட ண
D) சஞ
68. எதிரொலிச் சொற்களைத் தமிழ் மொழி எம்மொழியிலிருந்து பெற்றது?
A) மராத்தி மொழி
B) சிங்கள மொழி
C) இந்தி மொழி
D) முண்டா மொழி
69. 'பிங்கான்' என்ற சொல்
A) சீனமொழிச் சொல்
B) மலாய் மொழிச் சொல்
C) உருது மொழிச் சொல்
D) துருக்கி மொழிச் சொல்
70 . ' குடக்கு'எனும் சொல் உணர்த்தும் பொருள் யாது?
A) கிழக்கு
B) தெற்கு
C) மேற்கு
D) வடக்கு
71 . திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?
A) வீரமாமுனிவர்
B) ஜி.யூ.போப்
C) கால்டுவெல்
D) இராபர்ட்-டி-நொபிலி
72. திருந்திய திராவிட மொழிகளின் எண்ணிக்கை
A) பன்னிரண்டு
B) ஆறு
C) ஐந்து
D) பத்து
73. 'கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை' எனக்கூறும் இலக்கண நூல்
A) நன்னூல்
B) யாப்பருங்கலம்
C) நேமிநாதம்
D) தொல்காப்பியம்
74. மொழிக்கு இறுதியில் வரும் மெய்கள்
A) பதினெட்டு
B ) ஆறு
C) பதினொன்று
D) பன்னிரண்டு
75. 'ஓ' எனும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
B) ஆறு
A) எருது
B) நுரை
C) மதகு நீர் தாங்கும் பலகை
D) மலர்
76. 2004-இல் ஒலிம்பிக் வெள்ளி பதக்கத்தை வென்ற இந்தியர்
A) தன்ராஜ் பிள்ளை
B) ராஜ்யவர்தன் சிங் ரதோர்
C) அஞ்சு பாபி ஜார்ஜ்
D) திலீப் டர்க்கி
77. ISO குறிப்பது
A) இண்டர்நேஷ்னல் ஸ்டான்டர் ஆர்கனைசேஷன்
B) இன்டியன் ஸ்பேஸ் ஆர்கனைசேஷன்
C) இண்டர் நேஷ்னல் சயின்ஸ் ஆர்கனைசேஷன்
D) இன்டியன் சோஷியல் ஆர்கனைசேஷன்
78. லேசான உலோகம்
A) காரீயம்
B) சோடியம்
C) அலுமினியம்
D) லித்தியம்
79. ஓர் உருகு இழையின் தன்மை
A) அதிக மின்தடை மற்றும் அதிக உருகுநிலை
B) குறைந்த மின்தடை மற்றும் அதிக உருகுநிலை
C) அதிக மின்தடை மற்றும் குறைந்த உருகுநிலை
D) குறைந்த மின்தடை மற்றும் குறைந்த உருகுநிலை
80. இந்தியாவின் தலைமை நீதிபதி
A) ஆர்.சி. லஹோதி
B) சுபாஷன் ரெட்டி
C) ஜி.பி. பட்நாயக்
D) ஏ.ஆர். லட்சுமணன்
81 இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு
மாற்றப்பட்ட வருடம்
A) 1910
B) 1911
C) 1912
D) 1913
82. கீழ்க்கண்டவர்களுள் எந்த முகலாய சக்கரவர்த்தி பிரிட்டிஷாருக்கு இந்தியாவுடன் வாணிகம் நடத்த முதலில் அனுமதி அளித்தவர்?
A) ஜஹாங்கீர்
B) அக்பர்
C) ஷாஜஹான்
D) ஔரங்கசீப்
83. இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது
A) ஆகஸ்ட் 15, 1947
B) ஜனவரி 26, 1947
C) ஜனவரி 26, 1950
D) ஆகஸ்ட் 15, 1950
84. பாராளுமன்றத்தில் பூஜ்ய நேரம் என்றால் என்ன?
A) மக்களவையில் பண மசோதா அறிமுகப்படுத்தப்படும் பொழுது
B) காலை மற்றும் மாலை அலுவல்களுக்கு இடைப்பட்ட இடைவேளை நேரம்
C) எதிர்க்கட்சிகளின் பிரேரணைகளை எடுத்துக் கொள்ளும் நேரம்
D) மிகமுக்கியத்துவம் நிறைந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரம்
85. 'As I See' என்ற நூலின் ஆசிரியர்
A) அடல் பிஹாரி வாஜ்பாய்
B) குஷ்வந்த் சிங்
C) கிரண்பேடி
D) ஷீலா தீக்ஷித்
86. WAIS -இன் வாய்மொழி அளவுகோல் கொண்டிருப்பது
A) 6 சோதனைகள்
B) 4 சோதனைகள்
C) 5 சோதனைகள்
D) 8 சோதனைகள்
87. வாழ்க்கை உள்ளுணர்வு (Life instincts) .......... என்று அழைக்கப்படுகிறது.
A) ஈராஸ் (Eros)
B) சூப்பர் ஈகோ (Shperegp)
C) தானடோஸ் (Thanatos)
D) லிபிடோ (Libido)
88. கீழ்க்கொடுத்துள்ளதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எப்பிரிவு ஆங்கிலத்தை 15 ஆண்டுகளுக்கு
நீடிக்க வகை செய்கிறது?
A) பிரிவு 343
B) பிரிவு 45
C) பிரிவு 49
D) பிரிவு 351
89. பிளேக் இதனால் ஏற்படுகிறது.
A) எலி
B ) பேன்
C) தெள்ளுப்பூச்சி
D ) கொசு
90. ஃப்ரோபெல் என்பவர்
A) ஒரு பிரெஞ்சு கல்வியறிஞர்
B) ஓர் இத்தாலி கல்வியறிஞர்
C) ஒரு ஜெர்மன் கல்வியறிஞர்
D) ஓர் அமெரிக்க கல்வியறிஞர்
91. “கல்வி என்பது அனுபவங்களை மறுபடியும் வடிவமைத்தல்”
(Education is the reconstruction of experiences)
என்ற கருத்துடையவர்
A) பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்
B) ஜான் டூயி
C) ஸ்ரீ அரவிந்தர்
D ) தாகூர்
92. செயல் திட்டம் என்பதை முன்மொழிந்தவர்
A) தாகூர்
B) ஸ்ரீ அரவிந்தர்
C) ஜான் டூயி
D) ஃப்ராபெல்
93. இந்தியன் சைனிக் பள்ளி அகாதமியின் தலைவர்
A) இந்தியக் குடியரசுத் தலைவர்
B) பிரதம மந்திரி
C) மனிதவள மேம்பாட்டு அமைச்சர்
D) பாதுகாப்பு அமைச்சர்
94. மனித உளவியல் அறிஞர் (Humanistic psychologist)
A) ப்ராய்டு
B) கார்ல் ரோஜர்ஸ்
C) ஜங்
D) ஆட்லர்
95. ஊக்கத்தின் உள்ளுணர்வு கொள்கையை (The instinct theory of motivation) உருவாக்கியவர்
A) மர்பி
B) ஆபிரகாம் மாஸ்லோ
C) மெக்டூகல்
D) கில்போர்டு
96. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
A) டிஸ்பிளே ஸ்கிரின்
B) விசைப்பலகை (Key board)
C) அறிவுரைப் பொருட்களுடன் கூடிய ஃப்ளாப்பி டிஸ்க்
D) பிரிண்டர்
97. குழந்தை மையப்படுத்திய கல்வி முறையின் தந்தை எனப்படுபவர்
A) இரவீந்திரநாத் தாகூர்.
B) மகாத்மா காந்தி
C) மரியா மாண்சோரி
D) ரூஸோ
98. "The Noisy child and the Silent Mind' என்ற
கட்டுரையை எழுதியவர்
A) ஸ்ரீ அரவிந்தர்
B) ஜே. கிருஷ்ணமூர்த்தி
C) பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்
D) பால் ஃப்ரியர்
99. முதன் முதலாக நடுநிலை கல்வியில் பலவிதமான மார்க்கங்களை (Diversified courses) குறிப்பிட்டது
A) ஹண்டர் குழு
B) ஹார்டாக் குழு
C) உட்ஸ் அறிக்கை
D) கல்கத்தா பல்கலைக்கழகக் குழு
100. ஐக்கிய நாடுகள் தினம் கொண்டாடப்படுவது
A) அக்டோபர் 1
B) மார்ச் 15
C) அக்டோபர் 24
D) டிசம்பர் 1
************** ********** *****************
தேர்வில் வெற்றி உங்களுக்கே !
வாழ்த்தும் ,
பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
***************** ************* **********
0 Comments