எட்டாம் வகுப்பு - தமிழ்
வினாடி வினா
பகுதி - 4 - வினாக்களும் விடைகளும்
வினா உருவாக்கம்
பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு,
தமிழாசிரியர் , மதுரை - 97961 41410
************* ************* *************
1) பின்வருவனவற்றுள் குமரகுருபரர் எழுதாத நூலினைத் தேர்ந்தெடுக்க.
அ) கந்தர் அலங்காரம்
ஆ) கந்தர் கலிவெண்பா
இ) கயிலைக் கலம்பகம்
ஈ) மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
விடை : அ ) கந்தர் அலங்காரம்
2) மயங்கொலிப் பிழையற்ற தொடரைத் தெரிவு செய்து எழுதுக.
அ ) கல்வி கறையில கற்பவர் நாள் சில
ஆ) கல்வி கரையில கற்பவர் நாள் சில
இ) கல்வி கரையில கர்பவர் நாள் சில
ஈ) கல்வி கரையில கற்பவர் நாள் சில
விடை : ஆ) கல்வி கரையில கற்பவர் நாள் சில
3) வடிவு ,வனப்பு , பொழிவு , எழில் என்னும் பலசொல் தரும்ஒரு பொருளைக் கண்டறிந்து எழுதுக.
அ ) தங்கம்
ஆ) காடு
இ) அழகு
ஈ) வளையல்
விடை : இ ) அழகு
4) ஐம்பெருங்காப்பியங்களின்
பெயர்கள் ----- ன் பெயர்கள் ஆகும்.
அ) திணை
ஆ) நிலம்
இ) அணிகலன்
ஈ) கிரகம்
விடை : இ ) அணிகலன்
5) சிலம்பு பெண்கள் ----- ல் அணியும் தண்டை
அ) கையில்
ஆ) காலில்
இ) நெற்றியில்
ஈ) இடையில்
விடை : ஆ ) காலில்
6) பெண்கள் இடையில் அணிவது -----
அ) மேகலை
ஆ) கொலுசு
இ) குண்டலம்
ஈ) சிந்தாமணி
விடை : அ ) மேகலை
7) காதில் அணியும் காதணி -----
அ) வளையல்
ஆ) குண்டலம்
இ) சிலம்பு
ஈ) மேகலை
விடை : ஆ ) குண்டலம்
8) சிந்தாமணி ------ முடியில் பதிக்கப்படும் மணிக்கல்
அ) அரசன்
ஆ) அரசி
இ) அமைச்சன்
ஈ) புலவன்
விடை : அ ) அரசன்
9) வெந்தணல் - பிரித்து எழுதுக.
அ) வெந் + அணல்
ஆ) வெந்த + தணல்
இ) வெள்ளை + அணல்
ஈ) வெம்மை + தணல்
விடை : ஈ ) வெம்மை + தணல்
10) சென்றது - இச்சொல்லில் உள்ள இறுதி எழுத்தை நீக்கினால் கிடைக்கும்
பெயரெச்சச்சொல் -----
அ ) சென்றன
ஆ) செல்லும்
இ) செல்
ஈ) சென்ற
விடை : ஈ ) சென்ற
11) ஐந்தாம், ஏழாம் வேற்றுமை
உருபுகளில் வேறு வேறுபொருளில் வரும் உருபு ----
அ ) இல்
ஆ) இன்
இ) அது
ஈ) கண்
விடை : அ ) இல்
12) வேற்றுமை உருபும் , சொல்
உருபும் இல்லாத வேற்றுமை ------
அ) நான்காம் வேற்றுமை
ஆ) ஐந்தாம் வேற்றுமை
இ) எட்டாம் வேற்றுமை
ஈ) இரண்டாம் வேற்றுமை
விடை : இ ) எட்டாம் வேற்றுமை
13) பிரித்து எழுதுக - கொய்யாப்பழம்
அ) கொய் + பழம்
ஆ) கொய்த + பழம்
இ ) கொய்யா + பழம்
ஈ) கொய்யாப் + பழம்
விடை : இ ) கொய்யா + பழம்
14) பணத்திற்குப் பருப்பு வாங்கினான் - இதில் வேற்றுமை உருபு ----- பொருளில் வந்துள்ளது.
அ) எல்லை
ஆ) அடைதல்
இ) அதுவாதல்
ஈ) கொடை
விடை : இ ) அதுவாதல்
15 ) ' வேழம்' என்ற சொல் ---- யைக் குறிக்கும்.
அ) யானை
ஆ) சிங்கம்
இ) புலி
ஈ) பூனை
விடை : அ ) யானை
16 ) சுனை என்பதன் பொருள் -----
அ) தினை
ஆ) நிலம்
இ) நீர்நிலை
ஈ) வானம்
விடை : இ ) நீர்நிலை
17) பதிகம் என்பது ------ பாடல்களைக் கொண்டது.
அ) பத்து
ஆ) இருபது
இ) ஐம்பது
ஈ) நூறு
விடை : அ ) பத்து
18) பள்ளி சென்றான் - இத்தொடரில் மறைந்துள்ள வேற்றுமை உருபு ------
அ) ஐ
ஆ) ஆல்
இ)கு
ஈ) இன்
விடை : இ ) கு
19 ) ' நண்பா படி' - என்ற தொடருக்கு இணையான தொடரினைத் தேர்ந்தெடு
அ) தேன்குடி
ஆ) கண்ணா எடு
இ) விரைவாக வா
ஈ) அங்கே போ
விடை : ஆ ) கண்ணா எடு
20) சொற்களுக்கு இடையிலும்
இறுதியிலும் ' உம்' என்னும்
இடைச்சொல் மறைந்து நின்று
பொருள் தருவது ----- தொகை
அ) பண்புத்தொகை
ஆ) உவமைத்தொகை
இ) வினைத்தொகை
ஈ) உம்மைத்தொகை
விடை : ஈ ) உம்மைத்தொகை
0 Comments