எட்டாம் வகுப்பு - தமிழ் - வினாடி வினா 3 - கற்கண்டு , எழுத்துகளின் பிறப்பு / 8th TAMIL - VINADI VINA - 3 , QUESTION & ANSWER

 

எட்டாம் வகுப்பு - தமிழ் 

வினாடி வினா - 3

 கற்கண்டு - எழுத்துகளின் பிறப்பு

பலவுள் தெரிவு வினா

1 ) உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது எவ்விடங்களில் பொருந்தி வருவதனால் எழுத்துகள் பிறக்கின்றன?

அ) இதழ், நாக்கு, மார்பு, கழுத்து

இ) மார்பு, வாய், நாக்கு. கழுத்து

ஆ) இதழ், நாக்கு, பல், மேல்வாய்

ஈ) மார்பு, தலை, கழுத்து, மூக்கு

விடை ஈ. மார்பு, தலை, கழுத்து, மூக்கு

2. எழுத்துகள் வேறு வேறு ஒலிகளாகத் தோன்ற காரணமான உறுப்புகள் யாவை?

அ) இதழ், நாக்கு, பல், மேல்வாய்

இதழ், நாக்கு, கழுத்து, மூக்கு

ஆ) மார்பு, தலை, கழுத்து, மூக்கு

ஈ) மார்பு.தலை, பல், மேல்வாய்

விடை- அ ) இதழ், நாக்கு ,  பல், மேல்வாய்

3. கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ) மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் வ் என்னும் எழுத்துப்பிறக்கிறது.

ஆ) ய்' என்னும் எழுத்தின் பிறப்பிடம் ( கழுத்து ) ஆகும்,

4. சரியா? தவறா? என எழுதுக.

அ) எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு , முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர்.  ( சரி )

ஆ) சார்பெழுத்துகள் முதலெழுத்துகளைச் சாராமல் தனியாகப் பிறப்பதற்குரிய முயற்சிகளைக் கொண்டு பிறக்கின்றன.

(தவறு)

5. பொருத்துக.

எழுத்து பிறக்குமிடம்

அ) அ -வாயைத் திறத்தல்

ஆ ) உ - இதழ்கள் குவிதல்

இ ) க -  நாக்கின் முதற்பகுதி மேல் இதழ்கள்                    ஒட்டுதல்

ஈ) ப  - இதழ்கள் ஒட்டுதல்

6. படத்தில் உள்ள பேச்சுறுப்புகளின் பெயர்களை எழுதுக.

விடை: இதழ் , நாக்கு, பல் , மேல்வாய்

7.அட்டவணையில் 'தமிழ்' என்னும் சொல்லிலுள்ள எழுத்தின் வகை, அது பிறக்கும்இடத்தை எழுதுக.

எழுத்துகள் - த - உயிர்மெய் - மார்பு

                          மி - உயிர்மெய் - மூக்கு

                            ழ் - மெய் - கழுத்து


8. உயிரெழுத்துகளின் முயற்சிப்பிறப்புப் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன. அப்படத்தின்
முயற்சியோடு பிறக்கும் உயிரெழுத்துகளை அதற்குப் பக்கத்திலுள்ள கட்டங்களில்
எழுதுக.
முயற்சிப்பிறப்பு / பிறக்கும் உயிரெழுத்துகள்
            அ. ஆ  வாய் திறத்தலால்.

             இ, ஈ, எ, ஏ ஆகிய ஐந்தும்
வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின்
அடி ஓரம் மேல்வாய்ப்பல்லை பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.

        உ,ஊ,ஒ ஒ.ஔ  வாய்
திறக்கும்  முயற்சியுடன் இதழ்களைக் 
குவிப்பதால் பிறக்கின்றன.

9. உரைப்பகுதியைப் படித்து விடைக்கேற்ற வினாக்களை உருவாக்குக.

       உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக்கொண்டு
பிறக்கின்றன. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு
பிறக்கின்றன. மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டுபிறக்கின்றன. ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.

விடைகள்

அ) உயிரெழுத்துகள்

வினா. கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்துகள் யாவை ?

--------    -------- ------  ---------   --------- ------- 

ஆ) மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

வினா: வல்லின மெய் எழுத்துகள் எங்கு பிறக்கின்றன?

---------      -----------      ----------     ------------

இ) மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

வினா: மெல்லின மெய் எழுத்துகள் எங்கு பிறக்கின்றன?

-------    --------     --------    ---------- ------------- -------

இடையின மெய்யெழுத்துகள்

ஈ)வினா: கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்துகள் யாவை ?

*******     ********    ********* ******

உ ) ஆய்த எழுத்து

வினா - தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து எது ?

********   *******   *******    ******

10 ) மெல்லின எழுத்துகளின் முயற்சிப் பிறப்பு குறித்து எழுதுக. ( குறிப்பேட்டில் எழுதுக.

ங - நாவின் முதற்பகுதி அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருத்துவதால் பிறக்கிறது.

ஞ - நாவின் இடைப்பகுதி , நடு அண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது.

ண - நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கிறது.

ந - மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கிறது.

ம - மேல் இதழும் , கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கிறது.

ன - மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கிறது.

வாழ்த்துகள் ஆசிரிய நண்பர்களே ! மாணவத் தம்பிகளே ! இவ்வினா விடைகளை நேரடிக் காட்சிப் பதிவில் விளக்கத்துடன் காண Green Tamil - You Tube சேனலைப் பார்க்கவும். நன்றி.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை. 97861 41410

Post a Comment

0 Comments