எட்டாம் வகுப்பு - தமிழ் - வினாடி வினா - பகுதி - 3 , வினாக்களும் விடைகளும் / 8th TAMIL - QUIZ - PART 3 - QUESTION & ANSWER

 

எட்டாம் வகுப்பு - தமிழ்

வினாடி வினா 

பகுதி - 3

வினா உருவாக்கம் 


பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு,

 தமிழாசிரியர் , மதுரை - 97961 41410


1) ' வேர்பாரு ; தழை பாரு மிஞ்சினக்கால்
பற்ப செந்தூரம் பாரே - இது யார் கூற்று?

அ) உழவர்கள்
ஆ) மீனவர்கள்
இ) சித்தர்கள்
ஈ) வணிகர்கள்

விடை : இ ) சித்தர்கள்

2) மரபு சார்ந்த மருந்து வேலை செய்யும் விதத்தைப் புரிந்து கொள்வற்கு பயன்படும் மருத்துவமுறை

அ) தமிழர் மருத்துவமுறை

ஆ) ஹோமியோபதி மருத்துவமுறை

இ) அலோபதி மருத்துவமுறை

ஈ) அறுவைசிகிச்சை மருத்துவமுறை

விடை : அ ) தமிழர் மருத்துவமுறை

3) 'உடம்பை வளர்த்தேன் உயிர்
வளர்த்தேனே' - என்று பாடியவர் -------

அ) திருநாவுக்கரசர்
ஆ) திருமூலர்
இ) பட்டினத்தார்
ஈ) அகத்தியர்

 விடை : ஆ ) திருமூலர்

4) மஞ்சள் காமாலையைக் குணப்படுத்துவது -------

அ) தூதுவளை
ஆ) குப்பைமேனி
இ) கற்றாழை
ஈ) கீழாநெல்லி

விடை : ஈ ) கீழாநெல்லி

5) கண்பார்வையைத் தெளிவாக்குவது

அ) அகத்தி
ஆ) பொன்னாங்கண்ணி
இ) கரிசலாங்கண்ணி
ஈ) தூதுவளை

விடை : இ ) கரிசலாங்கண்ணி 

6) தலைமுடி நன்கு வளரப் பயன்படுவது

அ) வேப்பிலை
ஆ) மருதாணி இலை
இ) கற்றாழை
ஈ ) தூதுவளை

விடை : இ ) கற்றாழை

7) நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்தாக
விளங்கும் மூலிகைச்செடி

அ) குப்பைமேனி
ஆ) மஞ்சணத்தி
இ) ஆவாரம்பூ
ஈ) துளசி

விடை : அ ) குப்பைமேனி 

8) வயிற்றுச் சூட்டைத் தணிப்பது -----

அ) வெந்தயம்
ஆ) வெங்காயம்
இ) சீரகம்
ஈ) பெருங்காயம்

விடை : இ ) சீரகம்

9 ) குருதி - பொருள் தருக.

அ ) இரத்தம்
ஆ) மறதி
இ) பித்தம்
ஈ) சித்தம்

விடை : அ  ) இரத்தம்

10 ) நெஞ்சிலுள்ள சளியை நீக்குவது

அ) இஞ்சி
ஆ) மிளகு
இ) மஞ்சள்
ஈ) சுக்கு

விடை :  இ ) மஞ்சள்

11) குளிர்ச்சியைத் தந்து குருதியைத்
தூய்மைப்படுத்துவது

அ) பெருங்காயம்
ஆ) வெங்காயம்
இ) தக்காளி
ஈ) பூண்டு

விடை : ஆ ) வெங்காயம்

12) வயிற்றுப்பொருமலை நீக்கி பசியை
அதிகப்படுத்துவது -----

அ) மிளகு
ஆ) சீரகம்
இ) பூண்டு
ஈ) இஞ்சி

விடை : இ ) பூண்டு

13) நாச்சுவை கருதி உண்ணாமல் ------ நலம் கருதி உண்ணுதலே நல்லது.

அ) மனநலம்
ஆ) உடல்நலம்
இ) குடும்ப நலம்
ஈ) நாட்டுநலம்

விடை : ஆ ) உடல்நலம்

14) காய்கறிகளை ----- வேக்காட்டில்
வேகவைத்து உண்ணுதல் வேண்டும்.

அ) கால்
ஆ) அரை
இ) முக்கால்
ஈ) முழு

விடை : இ ) முக்கால்

15 ) நோயற்ற வாழ்வே ----- செல்வம்

அ) குறைவற்ற
ஆ) முறையற்ற
இ) மக்கள்
ஈ) நிலையற்ற

விடை : அ ) குறைவற்ற

16) நினைவாற்றல் பெருக உதவும் கீரை

அ) முடக்கத்தான்
ஆ) முருங்கை
இ) வல்லாரை
ஈ) பசலைக்

விடை : இ ) வல்லாரை 

17) வாய்ப்புண், குடற்புண்ணைக்
குணமாக்கும் கீரை -----

அ) நாட்டுத்தக்காளிக்
ஆ) மணித்தக்காளிக்
இ) சொடக்குத்தக்காளிக்
இ) பசலைக்

விடை : ஆ) மணித்தக்காளிக்

18) ' உணவே ------ என்பது முன்னோர் 
மொழி

அ) விருந்து
ஆ) மருந்து
இ) திருந்து
ஈ) பலம்

விடை : ஆ ) மருந்து

19 ) பல்சார்ந்த நோய்களைக் குணமாக்கும் கீரை

அ) பசலைக்
ஆ) தூதுவளை
இ) அகத்திக்
ஈ) வல்லாரைக்

விடை : இ ) அகத்திக்

20) அம்மையால் வந்த வெப்பு
நோயை அகற்றுவது

அ) வாழை இலை
ஆ) வேப்பிலை
இ) பப்பாளி இலை
ஈ) துளசி இலை

விடை : ஆ ) வேப்பிலை

*******************   ********   **************

Post a Comment

0 Comments