எட்டாம் வகுப்பு - தமிழ் - வினாடி வினா - பகுதி - 2 வினா & விடை / 8th TAMIL - PART 2 - QUESTION & ANSWER

 

எட்டாம் வகுப்பு - தமிழ் 

வினாடி வினா - பகுதி - 2

வினாக்களும் விடைகளும்

1) கீழ்வருவனவற்றுள் வாணிதாசனின் சிறப்புப் பெயர்களில் பொருந்தாததை எழுது.

அ) சிந்துக்குத்தந்தை

ஆ) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்

இ) பாவலர்மணி

ஈ ) கவிஞரேறு

விடை : அ ) சிந்துக்குத்தந்தை 

2) கீழ்வருவனவற்றுள் எதுகை இடம்பெறாத இணையைத் தேர்ந்தெடு.

அ) கொஞ்சி - குலவி

ஆ) நெஞ்சில் - செஞ்சொல்

இ) நன்செய் - புன்செய்

ஈ) ஏடு - ஈடு

விடை : அ ) கொஞ்சி - குலவி

3) சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.

அ) வாணிதாசன் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் கவிஞர் என்று புகழப்படுபவர்.

ஆ) தமிழகத்தின் கவிஞர் வாணிதாசன் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர்.

இ) கவிஞர் வாணிதாசன் என்று புகழப்படுபவர் தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்

ஈ) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்

விடை : ஈ ) தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் கவிஞர் வாணிதாசன்

4 ) செம்மை + சொல் - சேர்த்து எழுதுக.

அ) சிவப்புச்சொல்

ஆ) செஞ்சொல்

இ )  செம்சொல்

ஈ செம்மைச்சொல்

விடை : ஆ) செஞ்சொல்

5 ) மாதர் என்ற சொல்லின் பொருள் -----

அ) கண்

ஆ) விண்

இ) பெண்

ஈ ) ஆண்

விடை : இ) பெண்

6) நெல்குத்தும் போது பாடும் பாட்டு -----

அ) வெள்ளப்பாட்டு

ஆ) தாலாட்டுப்பாட்டு

இ) வள்ளைப்பாட்டு

ஈ) ஏற்றப்பாட்டு

விடை : இ) வள்ளைப்பாட்டு

7 ) ஏற்றப்பாட்டு எப்போது பாடப்படும்?

அ) குழந்தை தூங்கும்போது

ஆ) திருமணத்தினபோது

இ) நாற்று நடும்போது

 ஈ) நீர் இறைக்கும்போது

விடை :  ஈ) நீர் இறைக்கும்போது

8) நன்செய் புன்செய்க்கு உணவை ஊட்டி -
இதில் 'செய்' என்பதன் பொருள் ------

அ) நிலம்

ஆ) வேலை

இ) செய்வது

ஈ) வானம்

விடை : அ) நிலம்

9) பின்வருவனவற்றுள் ஒருமை ,
பன்மையைக் காண இயலாத
வினைமுற்றினைத் தெரிவு செய்க.

அ) குறிப்பு வினைமுற்று

ஆ) தெரிநிலை வினைமுற்று

இ) ஏவல் வினைமுற்று

ஈ) வியங்கோள் வினைமுற்று

விடை : ஈ) வியங்கோள் வினைமுற்று

10 ) காலத்தை வெளிப்படையாகக் காட்டாத வினைமுற்று -----

அ) குறிப்பு வினைமுற்று

ஆ) வியங்கோள் வினைமுற்று

இ) தெரிநிலை வினைமுற்று

ஈ) ஏவல் வினைமுற்று

விடை :  அ) குறிப்பு வினைமுற்று

11 ) ஏவல் வினைமுற்று -----ல் மட்டும் வரும்.

அ) தன்மை

ஆ) முன்னிலை

இ) படர்க்கை

ஈ) அனைத்திலும்

விடை : ஆ) முன்னிலை

12) ' ஓடும்' என்பது ----- கால வினைமுற்று.

அ) இறந்த

ஆ) நிகழ்கால

இ) எதிர்கால

ஈ) மூன்று

விடை : இ) எதிர்கால

13 ) வியங்கோள் வினைமுற்று வாழ்த்துதல் ,வைதல் , வேண்டல் மற்றும் --------  பொருள்களில் வரும்.

அ) விதித்தல்

ஆ) மதித்தல்

இ) துதித்தல்

ஈ) பணித்தல்

விடை : அ) விதித்தல்

14) வினை முற்று ------  வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ)நான்கு

ஈ ) ஆறு

விடை : அ) இரண்டு

15 ) கீழ்வருவனவற்றுள் எது
வியங்கோள் வினைமுற்று இல்லை?

அ) வாழ்க

ஆ) பாடுக

இ) வாழியர்

ஈ) பாடம் படி

விடை : ஈ) பாடம் படி

16) ' ஒரு பால் கோடாமை சான்றோர்க்கு
அணி ' என்னும் குறளடியிலுள்ள ' அணி'
என்ற சொல் உணர்த்தும் பொருள்

அ) பொறுப்பு

ஆ) அழகு

இ) செயல்

ஈ) அணிதல்

விடை : ஆ) அழகு

17 ) திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் ------

அ) குறளோவியம்

ஆ) திருவள்ளுவமாலை

இ) அழகின் சிரிப்பு

ஈ) குறளின் குரல்

விடை : ஆ) திருவள்ளுவமாலை

18 ) " சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்
அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க்குஅணி - இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி

அ) உவமை அணி

ஆ) உருவக அணி

இ) இல்பொருள் உவமை அணி

ஈ) பிறிது மொழிதல் அணி

விடை : அ) உவமை அணி

19 ) புகழாலும் பழியாலும் அறியப்படுவது ----

அ) அடக்கமுடைமை

ஆ) நாணுடமை

இ) நடுவுநிலைமை

ஈ) பொருளுடைமை

விடை : இ) நடுவுநிலைமை

20 ) பயனில்லாத களர்நிலத்திற்கு
ஒப்பானவர்கள் ------

அ) வலிமையற்றவர் 

ஆ) கல்லாதவர்

இ) ஒழுக்கமற்றவர்

ஈ) அன்பில்லாதவர்

விடை : ஆ) கல்லாதவர்

****************    *************   ************

வாழ்த்துகள் மாணவர்களே !

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***************    ****************   ***********


Post a Comment

0 Comments