வில்லியம் டி . கூலிட்ஜ் பிறந்த தினம்.
( Willaim D . Coolidge)
23 • 10 • 2021
இயற்பியல் துறை ஏற்றமிகு அறிஞர்களைக் கொண்டு விளங்குகின்றது. அத்தகைய சிறந்தவர்களில் ஒருவரேவில்லியம் டி. கூலிட்ஜ் ( Willaim D . Coolidge) ஆவார். இவர்1873 - ம் ஆண்டு அக்டோபர் 23 -- ஆம் நாள் மாசாசூசெட்சின் அருகில் உள்ள அட்சன் என்னும் இடத்தில் ஒரு பண்ணையில் பிறந்தார். இவர் ஓர் அமெரிக்க இயற்பியலார். இவர் இமாலயச் சாதனை யாக X -- கதிர்கருவி மேம்பாட்டில் மிக முக்கியமான பங்கை அளித்துள்ளார்.
கூலிட்ஜ் அவர்கள் 1891 -- முதல் 1996 - ஆம் ஆண்டு வரையிலும் எம்.ஐ.டி யில் மின் பொறியியல் பயின்றார். மேலும் இரு ஆண்டு கள் அங்கு ஆய்வகத் துணைவராகப் பணியாற்றினர். பின்னர் மேற்படிப்புக்காக ஜெர்மனி சென்றார்.அங்கு "லீப்ஜிக் " பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்பெற்றார் . பிறகு நாடு திரும்பிய பிறகு மீண்டும் எம் .ஐ. டி யில் வேதியியல் துறையில் பேரா. ஆர்தர் . ஏ.நாய்சு அவர்களின் துணைவராக 1899-- ஆம் ஆண்டு முதல் 1905 - ம் ஆண்டு வரையிலும் பணியாற்றினார். அதன் பின் ஜெனரல் எலெக்ட்ரிக் கின் ஆய்வகச் சோதனைச் சாலை யின் இயக்குனராகவும் , பின் அதன் தலைவராகவும் பணியாற்றினார்.
வில்லியம் கூலிட்ஜ் 1913 - ஆம் ஆண்டு கூலிட்ஜ் குழாயைகண்டுப்பிடித்தார். இது எக்ஸ்- ரே இயந்திரங்களில் பயன்படுத்த மேம்பட்ட கேத்தோடு கொண்ட எக்ஸ் - ரே குழாயாகும் இது ஆழமாக அமைந்த உடற் கூறியலிலும் , கட்டிகளை மேலும் துல்லியமாகக் காணவும் அனுமதிக்கப்பட்டது. இவை அந்த காலகட்டத்தில் புதிய மருத்துவ சிறப்புக் கதிரியக்கவியலில் ஒரு மாபெரும் வளர்ச்சியாக இருந்தது. இதன் அடிப்படை வடிவமைப்பு இன்றும் பயன்பாட்டில் உள்ளது.
டங்ஸ்டன் :
கூலிட்ஜ் இழை மின் விளக்குகளில் முதல் முறையாக மெல்லிய கம்பியினைப் பயன்படுத்தினார். இதற்கான காப்புரிமையினையும் பெற்றார் . எக்ஸ் கதிர்வீச்சுத் துறையில் இவருடைய இன்றியமையாத பங்களிப்பானது எலெக்ட்ரான்களை உமிழும் டங்ஸ்டன் கம்பிச் சுருளை எதிர் மின் முறையாக பயன்படுத்தியதாகும். இந்த நிகழ்வின் மூலம் கூலிட்ஜ் அவர்கள் சீரான குழாய் மின்னூட்டம் பெற வழிகண்டார் . இவற்றாலேயே சிறப்பானகதிரின் படம் கிடைக்கப்பெற்றது. அது இன்று வரையி லும் பயன்பாட்டில் உள்ளது . X -- கதிர்களை உருவாக்க கூலிட்ஜ் குழாய் பயன்படுகிறது.மின் விளக்குகளில் முதல் முறையாக மெல்லிய "டங்ஸ்டன்." கம்பியினைப் பயன்படுத்திய X - கதிர் கூலிட்ஜ் குழாயை அமைத்தார் 1913 - ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே கூலிட்ஜ்குழாய்கள் பயன்பாட்டுக்கு வந்தது. கூலிட்ஜ் குழாயின் மூலமாகவே முதன் முதலில் வெப்ப அயனிகள் X - கதிர்களைப் பெறுவதற்காக பயன்படுத்தப்பட்டன. விரைந்துச் செல்லும் இலத்திரன்கள் வெற்றிடக் குழாயிலுள்ள இலக்கைத் தாக்கும் போது அவைகள் வேகத் தளர்ச்சியுற்று , அவற்றின் ஆற்றல் , சிறு பகுதிX - கதிர்களாக மாற்றப்பட்டு , குழாயில் உள்ள கதிர்களுக்கான திறப்பு வழியாக வெளிப்படுகின்ற கதிர்கள் தோன்றும் இலக்கு டங்ஸ்டனால் ஆனது .
வில்லியம் டி கூலிட்ஜ் பெற்ற சிறப்புகள் :
* American Academy Of Art And Science 1914 - ம் ஆண்டு கூலிட்ஜீக்கு " திரம்ஃபோர்ட் " என்ற பரிசை வழங்கியது.
* 1927 - ஆம் ஆண்டு American Institute Of Elactrical Engineers -
எடிசன் பதக்கம் வழங்கியது .
* 1926 -- ஆம் ஆண்டு இந்த பெருமதிப்புக் கொண்ட விருதை
கூலிட்ஜ் நிராகரித்தார்.
* கூலிட்ஜ் அவர்களுக்கு 1926 -- ஆம் ஆண்டு Howard N .
பாட்ஸ் பதக்கம் வழங்கப்பட்டது .
* 1927 - ம் ஆண்டு லூயிஸ் ஈலெவி பதக்கம் வழங்கப்பட்டது.
* 1939 - ம் ஆண்டு ஃபாரடே பதக்கம் வழங்கப்பட்டது.
* 1944 - ம் ஆண்டு பிராங்க்ளின் பதக்கம் வழங்கப்பட்டது.
* 1963 - ம் ஆண்டு வெப்பமான கேத்தோடு X - ரே குழாயைக்கண்டுபிடித்தார்.
* கேத்தோடு X - ரே குழாயைக் கண்டுப்பிடித்ததற்காக
ரெம்ஷெய்ட் நகரம் கூலிட்ஜூக்கு ரோன்ட்ஜென்
பதக்கத்தை வழங்கியது .
* கூலிட்ஜ் அவர்கள் புகழ்பெற்றக் கண்டுபிடிப்பாளர்
அரங்கிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* கூலிட்ஜ் அவர்கள் 101 - வது வயதில் தேசிய கண்டுபிடிப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார் .இவ்வாறு கண்டுபிடிப்புகளில் பெருமைபெற்ற கூலிட்ஜ் அவர்கள் பேராற்றலைப் போற்றுவோம்.
************ **************** ************
(
0 Comments