ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சி வினாடி வினா - பகுதி - 2 - வினா & விடை / 9th TAMIL - QUIZ - PART 2 - QUESTION & ANSWER

 


ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

வினாடி வினா - 2

வினாக்களும் விடைகளும்

**************   *************    ************

1) இருவரிடையே நடைபெறும் செய்திப் பரிமாற்றம் அல்லது கருத்துப் பரிமாற்றம்

அ) உரையாடல்

ஆ) கவிதை

இ) கட்டுரை

ஈ) நாடகம்

விடை : அ) உரையாடல்

2) ஒரு பொருளின் இயற்பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்கு ஆகிவருவது

அ) பண்புப்பெயர்

ஆ)பெயர்ச்சொல்

இ) உரிச்சொல்

ஈ) ஆகுபெயர்

விடை : ஈ) ஆகுபெயர்

3) ஆகுபெயரை  ------- வகையாகப் 
பிரிக்கலாம்.

அ) 2

ஆ) 4

இ) 6

ஈ) 8

விடை : இ) 6

4) ஒரு பொருளின் முழுப்பெயர் அதனைக்
குறிக்காமல் அப்பொருளின் உறுப்புக்கு
ஆகிவருவது

அ) பொருளாகு பெயர்

ஆ) இடவாகு பெயர்

இ )  காலவாகு பெயர்

ஈ) சினையாகு பெயர்

விடை : அ) பொருளாகு பெயர்

5 ) ஊர் சிரித்தது -------  ஆகு பெயர்.

அ) முதலாகு பெயர்

ஆ) இடவாகு பெயர்

இ) பண்பாகு பெயர்

ஈ) சினையாகு பெயர்

விடை : ஆ) இடவாகு பெயர்

6) காலத்தின் பெயர், காலத்தைக்
குறிக்காமல் அக்காலத்தில் உருவாகும்
பொருளுக்கு ஆகிவருவது -----ஆகுபெயர்.

அ) தொழிலாகு பெயர்

ஆ) பண்பாகு பெயர்

இ )  காலவாகு பெயர்

ஈ) சினையாகு பெயர்

விடை : இ )  காலவாகு பெயர்

7) தலைக்கு ஒரு திருக்குறள் கொடு - இதில் வந்துள்ள ஆகுபெயர் -----

அ) சினையாகு பெயர்

ஆ) பண்பாகு பெயர்

இடவாகு பெயர்

ஈ) தொழிலாகு பெயர்

விடை : அ) சினையாகு பெயர்

8) படிக்கும் போது பொருள் புரியாத
சொற்களை -------   வைத்துக் கொள்ள 
வேண்டும்

அ) நீக்கி

ஆ) வண்ணமிட்டு

இ) அடிக்கோடிட்டு

ஈ) மறைத்து

விடை : இ) அடிக்கோடிட்டு

9) வினா எழுப்புவதற்காகப்
பயன்படுத்தப்படும் சொற்கள் -------சொற்கள்.

அ) விடை

ஆ) வினா

இ) வியப்பு

ஈ) கவிதை

விடை : ஆ) வினா

10) வினாச்சொற்றொடரில் எங்கே
வினாக்குறி அமைந்திருக்கும்?

அ ) முதலில்

ஆ) நடுவில்

இ) இறுதியில்

ஈ) எங்கும் இல்லை

விடை : இ) இறுதியில்

11 ) ஏதேனும் ஒரு காரணத்தை அறிந்து
கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும்
வினாச்சொற்கள் ------ மற்றும் ------

அ) ஏன்? எதற்கு?

ஆ) எப்படி ? எவ்வாறு?

இ) யார் ? எங்கு?

ஈ ) எத்தனை ? எது ?

விடை : அ) ஏன்? எதற்கு?

12) இடத்தைப் பற்றி அறிவதற்குப் பயன்படும் வினாச்சொல்

அ) எங்கு?

ஆ) ஏன்?

இ) எதற்கு?

ஈ) எப்படி?

விடை : அ) எங்கு?

13) எண்ணிக்கையைப் பற்றி அறிந்து
கொள்ளப் பயன்படுத்தும் வினாச்சொல் -----

அ) ஏன்?

ஆ) எதற்கு?

இ) எனன?

ஈ ) எத்தனை?

விடை : ஈ ) எத்தனை?

14) ஒரு செயலைச் செய்தவரைப் பற்றித்
தெரிந்து கொள்ளப் பயன்படுத்தும்
வினாச் சொல் ------

அ) எங்கே?

ஆ) எப்படி?

இ) யார் ?

ஈ) ஏன்?

விடை : இ) யார் ?

15 ) இந்தப் பணம் உனக்கு -----க் கிடைத்தது ?

அ) என்ன

ஆ) எப்படிக்

இ) யார்

ஈ) எந்த

விடை : ஆ) எப்படிக்

16) ஒரு துறையில் உள்ள கருத்துகளையோ , கருத்துத் தொகுப்புகளையோ குறிக்கப்
பயன்படுத்தும் சொல் ------

அ) உயிர்ச்சொல்

ஆ) பெயர்ச்சொல்

இ ) கலைச்சொல்

ஈ) வினைச்சொல்

விடை : இ ) கலைச்சொல்

17) ஒரு மொழியின் -------சொல்லின் 
பகுதியைக் கொண்டு கலைச்சொற்கள்
உருவாக்கப் படுகின்றன.

அ) வேர்ச்சொல்

ஆ) கிளைச்சொல்

இ) வட்டாரச்

ஈ ) பெயர்ச்சொல்

விடை : அ) வேர்ச்சொல்

18 ) கலைச்சொற்கள் பெரும்பாலும் -
பெயர்களாகவே இருக்கும்.

அ ) இயற்பெயர்

ஆ) காரணப்பெயர்

இ) பொருட்பெயர்

ஈ) காலப்பெயர்

விடை : ஆ) காரணப்பெயர்

19 ) YOU TUBE என்பதன் தமிழ் கலைச்சொல் -

அ) புலனம்

ஆ) ஊடலை

இ ) வலையொளி

ஈ) அருகலை

விடை : இ ) வலையொளி

20 ) SMART PHONE 
தமிழ்ச்சொல்லாக்கம்

அ ) அலைபேசி

ஆ) கைபேசி

இ) திறன்பேசி

 ஈ) தொலைபேசி

விடை : இ) திறன்பேசி


*****************    ********    ***************

வாழ்த்துகள்

பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

****************   ***********   ***************

Post a Comment

0 Comments