எட்டாம் வகுப்பு - தமிழ் - வினாடி வினா - 2 , உரைநடை உலகம் - தமிழ் வரிவடிவ வளர்ச்சி - வினா & விடை / 8th TAMIL - VINADI VINA - 2 , QUESTION & ANSWER

 

                         எட்டாம் வகுப்பு - தமிழ் 

வினாடி வினா - 2

உரைநடை உலகம் - தமிழ் வரிவடிவ வளர்ச்சி

1 ) கல்வெட்டுகளிலுள்ள எந்த எழுத்துகளுக்குக் குறில், நெடில் வேறுபாடு இல்லை எனத் தேர்ந்தெடுக்க.

அ) இகர, உகரம்

ஆ) உகர, எகரம்

இ) எகர ஒகரம்

ஈ) அகர, இகரம்

விடை: இ ) எகர , ஒகரம்

2. தமிழெழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தங்கள் செய்தவர் யார் எனத் தெரிவு செய்க

அ) பாரதியார்

திரு.வி.கல்யாணசுந்தரனார்

இ) உ.வே.சாமிநாதர்

வீரமாமுனிவர்

விடை - ஈ ) வீரமாமுனிவர்

3. பொருத்துக. - விடை

அ) ஓலைச்சுவடி - வளைகோடுகள்

ஆ) செப்பேடுகள் - ஏழாம் நூற்றாண்டு

இ) கல்வெட்டுகள் - நேர்கோடு

ஈ)கண்ணெழுத்துகள் - கடைச்சங்ககாலம்

4 . கோடிட்ட இடங்களை நிரப்புக.

விடை

அ) ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை (  ஒலி எழுத்து நிலை )  என்பர்.

ஆ) கண் + எழுத்துகள் - சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ( கண்ணெழுத்துகள் ) ஆகும்.

இ) மனிதன் தன்கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க ( மொழியைக் ) கண்டுபிடித்தான்.

5. சரியா? தவறா? என எழுதுக.

அ) தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என்பதற்குஉத்திரமேரூர் கல்வெட்டே சான்றாகும். ( தவறு )

ஆ) தமிழ்மொழி தற்போது கணினிப் பயன்பாட்டிற்குஏற்றமொழியாக உள்ளது. ( சரி ) 

இ) மனிதன், பழங்காலத்தில் குகைச்சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்துவைத்தான். ( சரி )

ஈ) அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழெழுத்துகள்நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன. ( சரி ) 

6. தமிழ் வரிவடிவ வளர்ச்சியினை வரிசைப்படுத்துக.

அ) பேச்சு, ஒலி, எழுத்து. சைகை

விடை: சைகை , ஒலி , பேச்சு , எழுத்து

ஆ) அச்சுக்கலை, கல்வெட்டு, செப்பேடு

விடை - கல்வெட்டு , செப்பேடு , அச்சுக்கலை

7. கல்வெட்டுகள், செப்பேடுகளில் காணப்படும் வரிவடிவங்கள் யாவை?

விடை: வட்டெழுத்து , தமிழெழுத்து

8. பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தங்களை எழுதுக.

விடை:| 

பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் - புத்தகம் - பக்கம் எண் 11 ல் பார்க்கவும்.

9 ) வட்டெழுத்து, தமிழெழுத்து என்றால் என்ன?

விடை - வட்டெழுத்து என்பது வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து ஆகும். தமிழெழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துகளின் பழைய வரிவடிவம் ஆகும்.

10. தமிழ்மொழியின் வரிவடிவ வளர்ச்சி குறித்து ஒரு பக்க அளவில் கட்டுரை வரைக.

(குறிப்பேட்டில் எழுதுக)


விடை - பண்டைக்காலத்தில் தமிழ் மொழியில் உள்ள எல்லா எழுத்துகளும் நாம் இன்று எழுதுவது போன்ற வடிவத்தில் எழுதப்படவில்லை.அவை காலத்திற்கேற்ப பல உருவ மாற்றங்களைப் பெற்றுத்தான் இக்கால வடிவத்தைஅடைந்திருக்கின்றன.
இவ்வாறு எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை , அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைகின்றன.

பழங்கால எழுத்துகள்

   பழங்காலத்தில் கற்பாறை , செப்பேடு , ஓலை போன்றவற்றில் எழுதினர். அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கேற்ப எழுத்துகளின் வடிவங்கள் அமைந்தன. பாறைகளில் செதுக்கும் போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் நேர்கோடுகள் பயன்படுத்தப்பட்டன. ஓலைகளில் நேர்கோடுகளைநும் , புள்ளிகளைநும் எழுதுவது கடினம் என்பதால்  வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினார்கள். சில எழுத்துகளை அழகுபடுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதிநில் குறுக்குக் கோடு இடப்பட்டது. பின்னர் அவையே நிலையான வடிவங்களாக அமைந்து விட்டன.

ஆக்கம் - மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் மதுரை -,97861 41410


Post a Comment

0 Comments