எட்டாம் வகுப்பு - தமிழ் - வினாடி வினா - 6 , கற்கண்டு - வினைமுற்று - வினா & விடை / 8th TAMIL - QUIZ - 6 , KARKANDU - VINAIMUTRU - QUESTION & ANSWER


எட்டாம் வகுப்பு - தமிழ் -

வினாடி வினா - 6

 கற்கண்டு - வினைமுற்று


1. பின்வருவனவற்றுள் ஒருமை, பன்மையைக் காண இயலாத வினைமுற்றினைத் தெரிவுசெய்க.

அ) குறிப்பு வினைமுற்று

இ ) ஏவல் வினைமுற்று

ஆ) தெரிநிலை வினைமுற்று

(ஈ) வியங்கோள் வினைமுற்று

விடை: ஈ ) வியங்கோள் வினைமுற்று


**********    *************    :**************

2. கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ) காலத்தை வெளிப்படையாகக் காட்டாத வினைமுற்று  ( குறிப்பு வினைமுற்று ) ஆகும்.

ஆ) முன்னிலையில் மட்டும் வரும் வினைமுற்று ( ஏவல்வினை முற்று )  ஆகும்.

இ) 'மேய்ந்தது' என்பது ( தெரிநிலை வினைமுற்று ) ஆகும்.

ஈ) 'காண்மின்' என்பது ( பன்மை ) ஏவல் வினைமுற்று.

**********    ********   ********    **********

3. சரியா? தவறா? என எழுதுக.

அ) வினைமுற்று முற்றுவினை என்றும் வழங்கப்படும். ( சரி )

ஆ) 'ஓடும்' என்பது நிகழ்கால வினைமுற்று ஆகும். ( தவறு ) 

********    ********    ********    **********

4. பொருத்துக.

அ) குறிப்பு வினைமுற்று - எழுத்தன்

ஆ) தெரிநிலை வினைமுற்று - அவள்                எழுதினாள்

இ) ஏவல் வினைமுற்று - பள்ளிக்குச்செல்

ஈ) வியங்கோள்வினைமுற்று - செல்க

@@@@@@@    @@@@@@    @@@@@@@

5 ) கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு வினைமுற்றுகள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு வருமென எழுதுக.

அ) சித்திரையான் - காலம்
ஆ) உழவன் - தொழில் 
இ) வெள்ளையன் -  பண்பு
ஈ) பொன்னம்மாள் - பொருள்
உ) சிதம்பரத்தார்  - இடம்
ஊ ) குழலி - சினை

*********     *********   *********    ********

6. தற்கால வழக்கில் இல்லாத இரு விகுதிகள் யாவை?
விடை -  அல், இயர்

7. வியங்கோள் வினைமுற்று எவ்வெப்பொருள்களில் வருமெனக் கூறுக.

வாழ்த்துதல், வைதல் , வேண்டல், விதித்தல்

********   *********    ***********    ********

8. 'பாடம் படித்தான்' - இத்தொடரில் செய்பவர், கருவி. நிலம், காலம், செயப்படுபொருள்,
செயல் ஆகியவற்றைக் கண்டறிக.

செய்பவர்  - மாணவர
கருவி - புத்தகம்
நிலம் - பள்ளி
காலம்  - இறந்த காலம்
செயப்படுபொருள் - பாடம்
செயல் - படித்தல்

*******   *******   ******   ******   ******* 

9 ) வினையடியை வினைமுற்றாக மாற்றித் தொடர்களை நிறைவு செய்க.

அ) கூரன் எகிறிக் ( குதித்தான் ) (குதி).
ஆ) கூரன் காட்டுக்குள் ( ஓடியது )   (ஓடு)
இ) குறிஞ்சிப்புதர்  ( ஆடியது ) (ஆடு).

~~~~~~~      ~~~~~~~~~~    ~~~~~~~     ~~~~~~~~

10. கீழ்க்காணும் உரைப்பகுதியிலுள்ள வினைமுற்றுகளை எடுத்தெழுதுக.

கண்ணன் சோமுவை 'ஓடு' எனக் கட்டளையிட்டார். சோமு, வேகமாக ஓடி
ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு பெற்றான். அனைவரும் அவனை 'வாழ்க' என
வாழ்த்தினர்.

விடை:

கட்டளையிட்டார். பெற்றான் ,  வாழ்த்தினர்

****** ******* ********    *********

வாழ்த்துகள் மாணவர்களே ! அமிழ்தத் தமிழை அகம் நிறைந்து படியுங்கள்.

வாழ்த்துகளுடன், 

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை. 97861 41410

Post a Comment

0 Comments