PG TRB - தமிழ் - வினாத்தாள் 2004 - 2005 வினாக்களும் விடைகளும் - பகுதி - 1 / PG TRB - TAMIL - 2004 - 2005 - ORIGINAL QUESTION PAPER - QUESTION & ANSWER - PART - 1

 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2004 - 2005

வினாக்களும் விடைகளும்  - பகுதி - 1

1 முதல் 50 வரை - வினாக்களும் விடைகளும்

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER  - 2004 - 2005

QUESTION & ANSWER - PART - 1


****************     **************  **********

1. முக்தி நூல்' என்று அழைக்கப்பெறுவது?

A) சீவகசிந்தாமணி 

B) மணிமேகலை

C) கம்பராமாயணம்

D) சிலப்பதிகாரம்

2. பௌத்த சமயத்தைச் சார்ந்த நூல் எது?

A) சிலப்பதிகாரம்

B) கம்பராமாயணம்

C) குண்டலகேசி

D) வளையாபதி

3. மணிமேகலை எத்தனை காதைகளைக் கொண்டுள்ளது?

A) பன்னிரண்டு

B) பதின்மூன்று

C) பத்து

D) முப்பது

4. நீலகேசிக்கு உரை எழுதியவர் யார்? '

A) அடியார்க்கு நல்லார் 

B) தெய்வச் சிலையார்

C) சமய திவாகரர் 

D) சிவஞான முனிவர்

5. ஐஞ்சிறு காப்பியங்களில் சமண சமயம் சார்ந்தவை

A) ஐந்து

B ) மூன்று

C) பத்து

D ) ஆறு

6. அறவணடிகள் இடம்பெறும் காப்பியம் எது?

A) சீவகசிந்தாமணி 

B) மணிமேகலை

C) சிலப்பதிகாரம் 

D) வளையாபதி

7. பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக' என்று கூறியவர் யார்?

A) மணிமேகலை

B) காயசண்டிகை

C) ஆதிரை

D) தீவதிலகை

8.காயசண்டிகைக்கு நேர்ந்த துன்பத்தைக் காஞ்சனனிடம் கூறியது எது?

A) கந்திற்பாவை 

B) புத்த பீடிகை

C) மணிமேகலா தெய்வம் 

D) கோமுகிப் பொய்கை

9. தமிழில் தோன்றிய முதல் விருத்தக் காப்பியம் எது?

A) கம்பராமாயணம் 

B) சீவகசிந்தாமணி

C) சிலப்பதிகாரம் 

D) மகாபாரதம்

10. 'பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும் உறங்கலும் விழித்தலும் போன்றது' என்று கூறியவர் யார்?

A) சாதுவன்

B) கவுந்தியடிகள்

C) மணிமேகலை

D) அறவண்டிகள்

11. தமிழில் தோன்றிய முழுமுதற்காப்பியம் எது?

A) மணிமேகலை

B) கம்பராமாயணம்

C) சிலப்பதிகாரம்

D) மகாபாரதம்


12. பசிப்பிணி என்னும் பாவி என்று கூறியவர் யார்?

A) கணியன் பூங்குன்றனார் 

B) இளங்கோவடிகள்

C) ஔவையார்

D) சீத்தலைச்சாத்தனார்

13. மாதவி ஆடிய ஆடல்களின் எண்ணிக்கையினைக் கூறுக.

A) பதினொன்று

B) மூன்று

C) பத்து

D ) ஆறு

14. சிலப்பதிகாரத்தின் திருப்புமுனையாக அமையும் காதை எது?

A) வழக்குரை காதை

B) கொலைக்களக் காதை

C) அரங்கேற்று காதை 

D) கானல் வரி

15. சீவக சிந்தாமணி எவ்வகையில் பகுக்கப்பட்டுள்ளது?

A) சருக்கம்

B ) காதை

C) படலம்

D) இலம்பகம்

16. அறத்தொடு நிற்றல் துறையிலமைந்த பத்துப்பாட்டு நூல் எது?

A) முல்லைப்பாட்டு 

B) குறிஞ்சிப் பாட்டு

C) பட்டினப்பாலை 

D) நெடுநல்வாடை

17. 'எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்று பாடியவர் யார்?

A) ஔவையார்

B) கபிலர்

C) பரணர்

D) பொன்முடியார்

18. அகநானூற்றின் அடிவரையறை

A) 4 முதல் 40 அடி வரை 

B) 9 முதல் 13 அடி வரை

C) 13 முதல் 31 அடி வரை 

D) 3 முதல் 5 அடி வரை

19. தொண்ணூற்றொன்பது வகையான மலர்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது?

A) குறிஞ்சிப்பாட்டு 

B) கலித்தொகை

C) நெடுநல்வாடை 

D) பட்டினப்பாலை

20. 'வேம்பதலை யாத்த நோன்காழ் எஃகம்'
என்ற பாடலடி இடம்பெறும் சங்க நூல் எது?

A) நெடுநல்வாடை 

B) முல்லைப்பாட்டு

C) புறநானூறு

D) ஐங்குறுநூறு

21. குறிஞ்சித் திணைப் பாடல்களைப் பாடுவதில் வல்ல புலவர் யார்?

A) பரணர்

B) கபிலர்

C) ஔவையார்

D) பிசிராந்தையார்

22. திருமுருகாற்றுப்படையின் வேறு பெயர் யாது?

A) நெஞ்சாற்றுப்படை

B) புலவராற்றுப்படை

C) நெடுந்தொகை

D) மலைபடுகடாம்

23. சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

A) தொண்டைமான் இளந்திரையன்

B) கரிகாற்சோழன்

C) ஓய்மானாட்டு நல்லியக்கோடன்

D) பாண்டியன் நெடுஞ்செழியன்

24. பெரும்பாணாற்றுப்படையையும் பட்டினப்பாலையையும் இயற்றிய புலவர் யார்?

A) கடியலூர் உருத்திரங்கண்ணனார்

B) - நக்கீரர்

C) பெருங்கௌசிகனார்

D) நப்பூதனார்

25. பொருநராற்றுப்படையின் பாடலடிகள்

A) 188

B) 269

C) 248

D) 317

26. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள மருதத்திணைப் பாடல்களின் எண்ணிக்கையைக் கூறுக.

A) 35

B) 17

C) 33

D) 29

27. பத்துப்பாட்டு நூல்களின் ஆற்றுப்படை நூல்கள்

A) மூன்று

B) இரண்டு

C) ஐந்து

D) நான்கு

28. பத்துப்பாட்டு நூல்களில் அளவால் பெரிய நூல் எது?

A) பட்டினப்பாலை 

B) மதுரைக்காஞ்சி

C) மலைபடுகடாம் 

D) பெரும்பாணாற்றுப்படை

29. பத்துப்பாட்டு நூல்களில் அகமா புறமா என்ற சர்ச்சைக்குரிய நூல் எது?

A) நெடுநல்வாடை 

B) முல்லைப்பாட்டு

C) குறிஞ்சிப்பாட்டு 

D) பட்டினப்பாலை

30. பிரகதத்தன் எனும் அரசனுக்குத் தமிழ் பண்பாட்டைத் தெரிவிப்பதற்காகப் பாடப்பட்ட பத்துப்பாட்டு நூல் எது?

A) மலைபடுகடாம் 

B) மதுரைகாஞ்சி

C) பட்டினப்பாலை 

D) குறிஞ்சிப்பாட்டு

31. 'கற்றறிந்தார் ஏத்தும்' என்ற அடைமொழியையுடைய நூல் எது?

A) குறுந்தொகை 

B) கலித்தொகை

C) நற்றிணை

D) பதிற்றுப்பத்து

32. 'சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே' என்று கூறிய புலவர் யார்?

A) ஔவையார்

B) பொன்முடியார்

C) காவற்பெண்டு 

D) வெள்ளிவீதியார்

33. குடவோலை முறை' பற்றிய குறிப்பினைக் கொண்ட சங்க நூல் எது?

A) குறிஞ்சிப்பாட்டு

B ) முல்லைப்பாட்டு 

C) அகநானூறு

D) பரிபாடல்

34. 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று கூறிய புலவர் யார்?

A) கணியன் பூங்குன்றனார்

B) பிசிராந்தையார்

C) கபிலர்

D) பரணர்

35. இன்று நமக்குக் கிடைத்துள்ள பரிபாடல் பாடல்களின்
எண்ணிக்கையைக் கூறுக.

A) 32

B) 22

C) 42

D) 52

36. எயில்தனைக் காத்தல்

A) வஞ்சித்திணை 

B) உழிஞைத் திணை

C) "வாகைத் திணை 

D) நொச்சித் திணை

37. மகட்பால் இகல் எனும் துறை இடம்பெறும் திணை எது?

A) கரந்தைத் திணை 

B) காஞ்சித் திணை

C) உழிஞைத் திணை 

D) தும்பைத் திணை

38. புறப்பொருள் வெண்பாமாலையின் ஆசிரியர் யார்?

A) அமுதசாகரர் 

B) ஐயனாரிதனார்

C) பவணந்திமுனிவர் . 

D) நாற்கவிராச நம்பி

39. 'கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முற்றோன்றி மூத்த குடி' எனக் கூறும் இலக்கண நூல்
எது ?

A) புறப்பொருள் வெண்பாமாலை

B) தொல்காப்பியம்

C) நன்னூல்

D) பன்னிருபாட்டியல்

40. 'எள்ளல்'காரணமாகத் தோன்றும் மெய்ப்பாடு யாது?

A ) நகை

B) அழுகை

C) அச்சம்

D) வெகுளி

41. உள்ளுறையுவமை எத்தனை வகைப்படும்?

A) நான்கு

B) மூன்று

C) ஐந்து

D) எட்டு

42. இடைச்சங்கம் அமைந்திருந்த இடம் எது?

A) கடல் கொண்ட தென்மதுரை

B) கபாடபுரம்

C) தற்போதைய மதுரை

D) திருநெல்வேலி

43. எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் சார்ந்த நூல் எது?

A) கலித்தொகை

B) பரிபாடல்

C) ஐங்குறுநூறு

D) பதிற்றுப்பத்து

44. கலித்தொகைப் பாடல்களைத் தொகுத்தவர் யார்?

A) பூரிக்கோ

B) உருத்திரசன்மனார்

C) கூடலூர் கிழார் 

D) நல்லந்துவனார்

45. ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவர் யார்?

A) பேயனார்

B) அம்மூவனார்

C) ஓதலாந்தையார் 

D) ஓரம்போகியார்

46. குறிஞ்சித் திணைக்குரிய உரிப்பொருள் யாது?

A) இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

B) ஊடலும் ஊடல் நிமித்தமும்

C) புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

D) இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

47. அகப்பொருள் விளக்கம் கூறும் உரிப்பொருள்கள்

A) பதினான்கு

B) பன்னிரண்டு

C) பத்து 

D) பதிமூன்று

48. முல்லைத் திணைக்குரிய பண் யாது?

A) செவ்வழிப்பண் 

B) சாதாரிப்பண்

C) பஞ்சுரப்பண்

D) மருதப்பண்

49. நான்கு அறிவினையுடைய உயிர்

A) கறையான்

B) முரள்

C) சிப்பி

D) தும்பி

50. காஞ்சி எனும் புறத்தினைக்குரிய அகத்திணை எது?

A) கைக்கிளைத் திணை 

B) பெருந்திணை

C) நெய்தல் திணை 

D) மருதத்திணை


**************   **********    *****************


தேர்வில் வெற்றி உங்களுக்கே !

வாழ்த்தும் ,

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*****************   *************   **********

Post a Comment

0 Comments