எட்டாம் வகுப்பு - தமிழ் - வினாடி வினா - 18 , தொகைநிலை , தொகாநிலைத் தொடர்கள் - வினா & விடை / 8th TAMIL - QUIZ - 18 , QUESTION & ANSWER

 


 எட்டாம் வகுப்பு - தமிழ் 

  வினாடி வினா  - 18        

கற்கண்டு - தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்



1. ) பள்ளி சென்றான்

இதத்தொடரில் மறைந்துள்ள வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.

அ ) ஐ

ஆ ) ஆல்

இ ) கு

ஈ) இன்

விடை - இ ) கு


2. 'நண்பா! படி'. - என்ற விளித்தொடருக்கு இணையான தொடரினைத் தேர்ந்தெடுக்க.

அ) தேன் குடி

ஆ)கண்ணா எடு

இ) விரைவாக வா

ஈ) அங்கே போ

விடை: ஆ) கண்ணா எடு


3. தொடர் என்றால் என்ன? எடுத்துக்காட்டுத் தருக,

விடை:  சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது தொடர் ஆகும்.

எ.கா : பால் பருகினான்


4 ) கோடிட்ட இடத்தை நிரப்புக.

சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவது உம்மைத்தொகை எனப்படும்.


5. சரியா?தவறா? என எழுதுக.


காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை எனப்படும். ( சரி )

6.) பாம்பு பாம்பு பாம்பு இஃது எவ்வகைத் தொடர் என விளக்குக.

விடை: அடுக்குத்தொடர்


7 ) கீழ்க்காணும் தொடர்கள் எவ்வகைத் தொகை எனக் கண்டறிந்து எழுதுக.

அ) பொற்றொடி : அன்மொழித்தொகை

ஆ) பொற்றொடி வந்தாள் 

விடை: எழுவாய்த்தொடர்


8. 'கயல்விழி' - இத்தொகைச் சொல்லை விரித்து எழுதுக.

விடை: கயல் போன்ற விழி


9. "பொறுமை என்பது சாலச் சிறந்த நற்பண்பு." இவ்வரியில் இடம்பெற்றுள்ளஉரிச்சொல் எது?

விடை: சால - உரிச்சொல் 


10. பின்வரும் உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

தேன்மொழி பூக்கூடை எடுத்துக் கொண்டு பூங்கா   சென்று கொண்டிருந்தாள். செல்லும் வழியில் படர்கொடி ஒன்று காற்றில் அசைவதைக் கண்டாள். அதில் வெண்பஞ்சு மலர்கள் பூத்திருந்தன. அம்மலர்களை ஒவ்வொன்றாகப் பறித்தாள்.தேன்மொழி. பறித்த மலர்களைத் தொடுத்தாள். தொடுத்த மாலையை எடுத்துக்கொண்டு நிலவு வானம் போன்ற நட்புடைய தன் தோழி பூங்குழலிவீட்டிற்குச் சென்றாள்.

 பூங்குழலி, தேன்மொழியை வருக! வருக! என வரவேற்று அறுசுவை உணவு அளித்தாள். உணவு மிகவும் சுவையாக இருந்தது. குறிப்பாகப் பூங்குழலி வீட்டு மாமரத்திலிருந்து பறித்த மாங்காயில் செய்த ஊறுகாய் சாலச்சுவையுடையதாக இருந்தது. உணவு உண்டதும் வெற்றிலைப்பாக்கு கொடுத்தாள் பூங்குழலி. மன மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினாள் தேன்மொழி.

வினாக்கள் :

அ) உரைப்பகுதியில் உள்ள உவமைத்தொகைச் சொற்களை எழுதுக.

விடை: தேன்மொழி

ஆ) வினைத்தொகைச்சொற்கள் இரண்டனை எடுத்தெழுதுக.

விடை: ஊறுகாய் , படர்க்கொடி

இ) உம்மைத்தொகைச் சொற்களை எடுத்தெழுதுக.

விடை: வெற்றிலை பாக்கு , நிலவு வானம்

ஈ ) 'தொடுத்த மாலை' என்பது எவ்வகைத் தொடர்?

விடை: பெயரெச்சத்தொடர்

உ ) ' வெண்பஞ்சு' என்பது எவ்வகைத் தொடர்? விளக்கம் கூறுக.

விடை : பண்புத்தொகைத்தொடர். மை எனும் பண்புருபு மறைந்து வந்துள்ளது.






Post a Comment

0 Comments