எட்டாம் வகுப்பு - தமிழ் - வினாடி வினா - 10 , தமிழர் மருத்துவம் - வினா & விடை / 8 th TAMIL - QUIZ - 10 , QUESTION & ANSWER

 

எட்டாம் வகுப்பு - தமிழ் -

வினாடி வினா - 10

ரைநடை உலகம் - தமிழர் மருத்துவம் (நேர்காணல்)

1. பலவுள் தெரிவு வினா

'வேர்பாரு தழை பாரு மிஞ்சினக்கால் பற்ப செந்தூரம் பாரே' - இது யார் கூற்று?

அ) உழவர்கள்

ஆ) மீனவர்கள்

இ) சித்தர்கள்

ஈ) வணிகர்கள்

விடை: சித்தர்கள்

****************   ************     ***********

2. கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ) மரபு சார்ந்த மருந்து வேலை செய்யும் விதத்தைப் புரிந்துகொள்வதற்கு
தமிழர் மருத்துவ முறை பயன்படுகிறது.


ஆ) தமிழாது நிலம், நிறைந்த பண்பாடுகளும்
தத்துவங்களும் அடங்கியது.

*************        **********   **************

3. சரியா? தவறா? என எழுதுக.

அ) நம் நாட்டின்மீது நிகழ்ந்த படையெடுப்புகள் தமிழர் மருத்துவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
( தவறு )

ஆ ) சமண, பௌத்த காலத்தில் அந்தந்த மதங்களின் கூறுகள் நம் மருத்துவத்தில்
இருந்தன.   ( சரி )

*************          ***********       **********

4. "விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு" - இக்கூற்றை நீ ஏற்றுக்
கொள்கிறாயா? இதைப் பற்றி உன் கருத்தினை இரு வரியில் எழுதுக.

ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வுணவுகள் பெரும் பாலும்துரித உணவாகவ உள்ளன. அவற்றின்  நிறமும் , சுவையும்
நம் மனத்தைக் கவர்ந்தாலும் , உட நலத்திற்கு தீங்கு தருபவை.

.*****************      ******** ***************

5 ) கீழ்க்காணும் பாடல் கூறும் கருத்தை உன் சொந்த நடையில் எழுதுக.

"உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே". - திருமூலர்

விடை

உடம்பு அழிந்தால் உயிரும் அழியும். உறுதியான மெய்ஞானத்தை அடைய முடியாது. அதனால் உடம்பை வளர்க்கும்
வழியை அறிந்து கொண்டேன். எனவே உடம்பை வளர்த்தேன் உயிரையும்
வளர்த்தேன்.

   ***************     **************      ********

6. நடைமுறையிலுள்ள மருத்துவ முறைகள் சிலவற்றைக் குறிப்பிடுக.

விடை:

1. சித்த மருத்துவம்
2. ஆயுர்வேம்
3. யுனானி
4' அலோபதி

    ***********      **************    *************

7. குறிப்புகளை விரித்து அரைப்பக்க அளவில் எழுதுக.( புத்தகம் -  ப எ 55 )

தமிழர்மருத்துவம் - தனித்துவமான பார்வை
சூழலுக்கு இசைந்தது
சுற்றுச்சூழலைச் சிதைக்காது- வாழ்வியல் மருத்துவம் - நோய்நாடி நோய் முதல்நாடி-
நோயில்லாத மனிதராக்குகிறது.

(குறிப்பேட்டில் எழுதுக)

**************     *************     ************     **************      ****************

8. அடைப்புக்குறிக்குள் உள்ள மூலிகைப் பெயர்களைத் தகுந்த இடங்களிலிட்டு நிரப்புக.

(தூதுவளை, கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி,கற்றாழை )

அ) மஞ்சள் காமாலையைக் குணப்படுத்துவது கீழா நெல்லி 

ஆ) நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்தாக விளங்கும் மூலிகைச்செடி குப்பைமேனி

இ) தலைமுடி நன்கு வளரப் பயன்படுவது - கற்றாழை

ஈ ) கண்பார்வையைத் தெளிவாக்குவது - கரிசலாங்கண்ணி

உ) இளைப்பிருமல் போக்குவது ----தூதுவளை

********     *************    **************      *************     *********     ***********

9. உரைப்பகுதியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க,

தமிழகத்து உணவு. தொன்றுதொட்டு மருத்துவ முறையில் சமைக்கப்படுகிறது.வெப்ப நாடான நமது நாட்டுச் சமையலுக்குப் புழுங்கல் அரிசியே ஏற்றது. அன்றாடச் சமையலில் கூட்டுவனவற்றுள் மஞ்சள், நெஞ்சிலுள்ள சளியை நீக்கும். கொத்துமல்லி பித்தத்தைப் போக்கும். சீரகம் வயிற்றுச் சூட்டைத் தணிக்கும். மிளகு
தொண்டைக்கட்டைத் தொலைக்கும். பூண்டு வளியகற்றி, வயிற்றுப் பொருமலைநீக்கிப் பசியை மிகுவிக்கும். வெங்காயம் குளிர்ச்சியை உண்டாக்கிக் குருதியைத்தூய்மைப்படுத்தும்.

விடை

அ) வயிற்றுச் சூட்டைத் தணிப்பது எது?

சீரகம்

ஆ) வெங்காயத்தின் பயன் என்ன?

குளிர்ச்சியை உண்டாக்கிக்
குருதியைட தூய்மைப்படுத்தும்.

இ) நெஞ்சிலுள்ள சளியை நீக்குவது எது? 

மஞ்சள் 

ஈ) பொருள் தருக -

குருதி -  இரத்தம்

உ) இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக. 

உணவே மருந்து

************     *************    **************     *************    *****************

10 ) கீழ்க்காணும் உரைப்பகுதி உணர்த்தும் கருத்துகளை மையப்படுத்தி, மருத்துவரும்
மாணவரும் உரையாடுவது போன்று ஓர் உரையாடல் அமைக்க.
நாச்சுவை கருதி உண்ணாமல் உடல் நலம் கருதி உண்ணுதலே நல்லது. உணவை
விரைவாக விழுங்குதல் கூடாது; நன்றாக மென்று விழுங்குதல் வேண்டும்.
அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர், வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலக்கும்.
உமிழ்நீர் கலக்காத உணவு உள்ளே சென்றாலும், அது செரிக்காது. உணவின் சத்துகள்  வீணாகாமல் பார்த்துக்கொள்ளுதல் வேண்டும். காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்ணுதல் வேண்டும். வேகவைத்தகாய்கறிநீரில் மிகுதியான சத்துகள் இருப்பதால் அதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

(குறிப்பேட்டில் எழுதுக)

மாணவர்களே ! மேல உள்ள பத்தியை இருமுறை வாசித்து . உரையாடலைத் தயார் செய்யுங்கள்.

வாழ்த்துகள் .

Post a Comment

0 Comments