எட்டாம் வகுப்பு - தமிழ் - வினாடி வினா - 15 , மதிப்பீடு - வினா & விடை / 8th TAMIL - QUIZ - 15 , QUESTION & ANSWER

 

 எட்டாம் வகுப்பு - தமிழ் 

 வினாடி வினா  - 15  

 மதிப்பீடு


1. ) சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அ) கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், கயிலைக் கலம்பகம்

ஆ) கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை , மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

இ) கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் , கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை

ஈ) கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்,சகலகலாவல்லி மாலை

விடை:

ஆ) கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை , மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்


2. பொருந்தாத வேற்றுமைப் பொருளைக் கண்டறிந்து எழுதுக.

அ) கொடை

ஆ) கருவி

இ) முறை

ஈ) தகுதி


விடை :  ஆ) கருவி


3. கீழ்க்காணும் பாடலைப்  படித்து வினாக்களுக்கு விடையளிக்க..

கொய்யாப்பழம்

காட்டுமுயற்காதிலையும் களியானைத்

துதிக்கை அடிமரமும் வானில்

நீட்டுக்கிளைக் கொய்யாதன் நிரல்தங்கத்

திரள் பழத்தை நம் கண்ணுக்குக்

காட்டுகின்றபோது கொய்யும் பழம் என்

போம்கையில் கொய்து வாயில்

போட்டுமென்ற போதேகொய்யாப் பழமென்

போம்பொருளின் புதுமை கண்டீர் !

பாவேந்தர் பாரதிதாசன்

வினாக்கள்

அ) பிரித்து எழுதுக. கொய்யாப்பழம்

விடை:  கொய்யா + பழம்

ஆ) கொய்யாப்பழத்தின் பெயர்ப் புதுமையைப் பாரதிதாசன் எவ்வாறு விளக்குகிறார்?

விடை:  பறிக்கும்போது கொய்யும் பழமென்றும் , வாயிலிட்டு உண்ணும்போது கொய்யாப் பழமென்றும் கூறுகிறோம் என்று விளக்குகிறார்.

இ) இரு பொருள் கூறுக. களியானை, நிரல், கொய்து

விடை:

களியானை - மகிழ்ந்த யானை , மகிழாதவனை

நிரல் - வரிசை , அழகு

கொய்து - பறித்து  , பறித்துச்சாப்பிடு

ஈ ) வடிவ ஒற்றுமைக்கான உவமைகளை எழுதுக.

விடை: காட்டு முயல் காதிலை , துதிக்கை அடிமரம்

4. கீழ்க்காணும் உரைப்பகுதியைப் படித்து அதில் இடம்பெற்றுள்ள சொல்லுருபுகளை எடுத்தெழுதுக.

மாணிக்கம் ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றோருக்குத் தன் பணத்தைக்
கொண்டு உதவும் பொருட்டு முயன்றார். ஆனால் அந்த முயற்சியானது ஊரடங்கின் கடுமை நிமித்தம் உரிய பலன் பெறவில்லை. ஆகவே தன் நண்பர்களின் உதவியை
வைத்துச் செய்ய முயல, அது முதல் முயற்சியைக் காட்டிலும் மிகச் சிறப்பாக முடிந்தது.

விடை:

1 ) கொண்டு

2 ) பொருட்டு

3 ) நிமித்தம்

4 ) காட்டிலும்


5. கீழ்க்காணும் தொடர்களில் இடம்பெற்றுள்ள வேற்றுமை உருபுகள் எப்பொருளில்வந்துள்ளன என எழுதுக.

அ) பணத்திற்குப் பருப்பு வாங்கினான்

விடை: அதுவாதல்

அ) இந்தியாவின் மேற்கு அரபிக்கடல்

விடை: எல்லை

இ ) காமராசர் பதவியை அடைந்தார்

விடை: அடைதல்

ஈ) கர்ணனது கொடை

விடை: கொடை

6. பின்வரும் தொடர்களில் அமைந்துள்ள கருவி,கருத்தாப் பொருள்களின் வகைகளை எழுதுக.

அ) புலவரால் பாடல் பாடப்பட்டது

விடை: முதற்கருவி

ஆ) தங்கத்தால் நகை செய்தான்

விடை: முதற்கருவி

காமராசரால் அணை கட்டப்பட்டது

விடை: ஏவுதற்கருத்தா

ஈ) தூரிகையால் ஓவியம் வரைந்தான்

விடை: துணைக்கருவி

7. உனது பள்ளி கையெழுத்து இதழில் எழுத 'கல்வி' என்னும் தலைப்பில் ஐந்து
வரிப்பாடல் ஒன்று எழுதுக.


மாணவர்களே  ! உங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை கவிதையாக எழுதுங்கள். வாழ்த்துகள்.

மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை.

Post a Comment

0 Comments