பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 17 - வினா & விடை / 10th SOCIAL SCIENCE - ACTIVITY 17 - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 17 , அரசாங்கத்தின் வகைகள்

மதிப்பீடு

1. நாடாளுமன்ற ஆட்சி முறை ----- என்றும் அழைக்கப்படுகிறது.

விடை : அமைச்சரவை அரசாங்கம்

2. பாராளுமன்ற ஆட்சிமுறையில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் ---- ஆவார்.

விடை : பிரதம மந்திரி

3. கோடிட்ட இடத்தை நிரப்புக;


நாடுகள்          நாடாளுமன்றத்தின் பெயர்


1அமெரிக்க ஐக்கிய நாடுகள் - காங்கிரஸ் 

2  நார்வே        - ஸ்டார்டிங்

3 . டென்மார்க்   - ஃபோர்டிங்

4. வேறுபடுத்துக - நாடாளுமன்ற ஆட்சிமுறை மற்றும் அதிபர் ஆட்சிமுறை

நாடாளுமன்ற ஆட்சிமுறை

* மத்திய சட்டமன்றம் அதிகாரம் படைத்தது.

* கூட்டுத்தலைமை 

* தனித்தனியான சார்புடைய செயல்பாடுகளைக் கொண்ட பிரிவுகள்

* பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவர் பிரதம மந்திரியாவார்.

* அரசின் தலைவர் குடியரசுத் தலைவர் 

அதிபர் ஆட்சி முறை

* அதிபரே அதிகாரம் படைத்தவர்.

* தனி நபர் தலைமை

* சுதந்திரமாகச் செயல்படும் பிரிவுகள்

*மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

* மாகாணத்தின் தலைவர் அதிபர் ஆவார்.

5. கூட்டாட்சி முறையின் நிறைகள் யாவை?

* பொருளாதார மற்றும் பண்பாட்டு முன்னேற்றங்களுக்கு நன்மையளிக்கிறது.

* மத்திய , மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரப் பகிர்வு , நிர்வாகத்திறன் மேம்பட வழிவகுக்கிறது.

* உள்ளூர் ஆட்சி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையே சமரசம் ஏற்படுத்துகிறது.

* மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தடுக்கிறது.


****************     ***********   ************

விடை உருவாக்கம் 

திருமதி.ச.இராணி , ப.ஆசிரியர் , 

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

****************    *************   ************

வாழ்த்துகள் மாணவர்களே !

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***************    ****************   ***********

Post a Comment

0 Comments