பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சி - 18 , வறுமை மற்றும் வேலையின்மை / 10th SOCIAL SCIENCE - ACTIVITY 18 - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 18 

வறுமை மற்றும் வேலையின்மை 

மதிப்பீடு

வினாக்களும் விடைகளும் 

*************   *************   **************

1. தற்காலிக வறுமைக்கு காரணம்

அ) கல்வியறிவு இன்மை 

ஆ) மது அருந்துதல் 

இ) சூதாட்டம் 

ஈ) பெரும்நோய் தொற்று

விடை : ஈ ) பெரும்நோய் தொற்று

2. ஜவகர் கிராம வேலைவாய்ப்பு திட்டத்திற்கான செலவினம் மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே கீழ்க்கண்ட எந்த முறையில் பிரித்துக் கொள்ளப்படுகிறது.

அ) 70-30

ஆ) 60-40

இ) 75-25

ஈ) 50-50

விடை : இ ) 75 : 25

3. இந்தியாவில் வறுமையினால் ஏற்படும் தாக்கத்தினை பட்டியலிடவும்.

* வறுமையினால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உண்டாகிறது.

* மாணவர்களின் பள்ளி வருகை பாதிக்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகின்றனர்.

* சமூகத்தில் சமத்துவமின்மை ஏற்படுகிறது.

* வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுகிறது.

* சுகாதாரநிலை  பாதிக்கப்படுகிறது.

4. வறுமைக்கும் வேலையின்மைக்கும் உள்ள தொடர்பை விளக்குக.

* வறுமையும் வேலையின்மையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படுகிறது.

* ஒரு நாட்டின் பொருளாதாரம் உயரும் பொழுது மக்களிடையே வறுமை நீங்குகிறது.

* ஒரு நாடு தொழில் துறையில் பின்னடைவு ஏற்படும்போது வேலையின்மை மற்றும் வறுமை உண்டாகிறது.

* வேலையின்மையை நீக்கும்போது வறுமை ஒழிக்கப்படுகிறது.

***************   *************   ************

விடை உருவாக்கம் 

திருமதி.ச.இராணி , ப.ஆசிரியர் , 

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

****************    *************   ************

வாழ்த்துகள் மாணவர்களே !

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***************    ****************   *********

Post a Comment

0 Comments