பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக்கட்டகம் - 16 , மக்கள் அடர்த்தி - வினா & விடை / 10th SOCIAL SCIENCE - ACTIVITY 16 - QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 16 - மக்கள் அடர்த்தி 

மதிப்பீடு

1. சாதகமான காலநிலை நிலவும் இடங்களில் -------

அ) மக்களடர்த்தி அதிகம் 

ஆ) குறைந்த மக்களடர்த்தி

இ) பரவலான மக்களடர்த்தி 

ஈ) எதுவுமில்லை

விடை : அ ) மக்களடர்த்தி அதிகம்

2. மக்களடர்த்தி அதிகம் உள்ள நாடு

அ) சீனா 

ஆ) பங்களாதேஷ் 

இ )மங்கோலியா 

ஈ) பொலிவியா

விடை : ஆ ) பங்களாதேஷ்

3. மக்களடர்த்தி குறைவாக உள்ள நாடு

அ) சீனா 

ஆ) பங்களாதேஷ் 

இ ) மங்கோலியா 

ஈ) பொலிவியா

விடை : இ ) மங்கோலியா

4. மக்களடர்த்தி கணக்கிடப்படுவது -----உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில்

அ) 1 கி.மீக்குள்

ஆ) 1 ச.கி.மீக்குள்

இ) 1 மைலுக்குள்

ஈ) 1 சதுர மைலுக்குள்

விடை : ஆ ) 1 ச.கி.மீக்குள்

5. தற்போதைய உலக மக்கள் தொகை எண்ணிக்கை

அ) 5 மில்லியன்

ஆ) 6 பில்லியன்

இ) 7 பில்லியன்

ஈ) 8 பில்லியன்

விடை : ஈ ) 8 பில்லியன்

6. தமிழகத்தின் மக்கள் தொகை - சிக்கிம் மாநிலத்தின் மக்கள் தொகை எது அதிகம்? ஏன்?

   தமிழகத்தின் மக்கள் தொகை அதிகம். தமிழ்நாடு , சிக்கிம் மாநிலத்தை விட பரப்பளவு அதிகம். சிக்கிம் ஒரு மலைப்பிரதேசம்.

7. ஒரு பகுதியின் மக்கள் தொகையினை நிர்ணயிக்கும் காரணிகளைப் பட்டியலிடவும்.

இயற்கை காரணிகள் :

    வெப்பநிலை, மழை, மண், நிலத்தோற்றம், நீர், இயற்கைத் தாவரங்கள், கனிம வளங்களின் பரவல் மற்றும் ஆற்றல் வளங்களின் இருப்பு உள்ளிட்டவை மக்கள் தொகை பரவலுக்கான இயற்கை காரணிகள் ஆகும்.

வரலாற்றுக் காரணிகள் :

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், ஆற்றங்கரை நாகரிகங்கள், போர் மற்றும் தொடர் ஆக்கிரமிப்புகள் ஆகியவை மக்கள் தொகை பரவலுக்கான வரலாற்றுக் காரணிகள் ஆகும்.



****************     ***********   ************

விடை உருவாக்கம் 

திருமதி.ச.இராணி , ப.ஆசிரியர் , 

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

****************    *************   ************

வாழ்த்துகள் மாணவர்களே !

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***************    ****************   ***********

Post a Comment

0 Comments