பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சி செயல்பாடு - 14 , வினா & விடை / 10th SOCIAL SCIENCE - REFRESHER COURSE MODULE - 14 , QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 14 - காடுகளின் வகைகள்

மதிப்பீடு

சரியான விடையைத்தேர்ந்தெடுக்கவும்.

1. வெப்பமண்டலக் காட்டுப் பல்லுயிர்த் தொகுதி ------- ல் அமைந்துள்ளது

அ. கிரீன்லாந்து

ஆ. சஹாரா

இ. கலஹாரி

ஈ. காங்கோ படுகை

விடை : ஈ ) காங்கோ படுகை

2. ------ விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

அ. வெப்ப மண்டலக்காடுகள்

ஆ. மித வெப்ப மண்டலப் புல்வெளி

இ. சவானா புல்வெளி

ஈ. தூந்திராப்பகுதி

விடை : இ ) சவானா புல்வெளி 

3. ------- பல்லுயிர்த்தொகுதியில் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழில் ஆகும்.

அ. வெப்ப மண்டலக்காடுகள்

ஆ. மித வெப்ப மண்டலப் புல்வெளி

இ. சவானா புல்வெளி

ஈ. தூந்திராப்பகுதி

விடை : இ ) சவானா புல்வெளி 

4. தூந்திரப் பல்லுயிர்த் தொகுதி மக்களின் குளிர்காலத்திற்கான வீடு -----கொண்டு கட்டப்படுகிறது.

அ. செங்கல்

ஆ. பனிக்கட்டி

இ. விலங்குகளின் ரோமம்

ஈ. சுண்ணாம்புக்கல்

விடை : ஆ ) பனிக்கட்டி 

5. அ. நாம் வாழும் பல்லுயிர்த்தொகுதி ------

(நீர் / நிலம் )

விடை : நிலம்

ஆ. நாம் வாழும் பல்லுயிர்த்தொகுதி -------

எனும் காலநிலை மண்டலத்தில் உள்ளது

(மிதவெப்ப மண்டலம், தூந்திரமண்டலம் )

விடை : மிதவெப்ப மண்டலம்

6. சிந்தனை வினா

அ. தூந்திர மண்டல பல்லுயிர்த் தொகுதியினைச் சார்ந்த விலங்குகளைப் பட்டியலிடவும்.

* துருவக்கரடி

* துருவமான்கள்

* ஓநாய்கள்

* ஆர்டிக்நரி

* பனிச்சிறுத்தை 

* சீல்

ஆ.நீ பட்டியலிட்ட விலங்குகள் பாலைவனப் பல்லுயிர்த் தொகுதியில் வளர்க்கப்பட்டால் என்ன நிகழும்?

   வறண்ட காலநிலை காரணமாக  உயிர் வாழ்வது அரிதாகிவிடும்.


****************     ***********   ************

விடை உருவாக்கம் 

திருமதி.ச.இராணி , ப.ஆசிரியர் , 

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

****************    *************   ************

வாழ்த்துகள் மாணவர்களே !

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***************    ****************   ***********

Post a Comment

0 Comments