12 ஆம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - இயங்கலைத் தேர்வு - 3 , வினா & விடை / 12th TAMIL - PUTHTHAAKKAP PAYIRCHI KATAKAM - ONLINE TEST - 3

 

12 ஆம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

இயங்கலைத் தேர்வு - 3 

வினாக்களும் விடைகளும்


1) இடது பக்கம்' - என்பதன் திருந்திய வடிவம் -----

அ) இடப்பக்கம்

ஆ) இடது புறம்

இ) வலப்புற மாற்று

ஈ) இடக்கைப் புறம்

விடை : அ) இடப்பக்கம்

2) ஆந்தை -----

அ) கூவும்

ஆ) கீச்சிடும்

இ) அலறும்

ஈ) கரையும்

விடை : இ) அலறும்

3) புலியின் இளமைப் பெயர் ------

அ) குருளை
ஆ) பறழ்
இ) கன்று
ஈ) குட்டி

விடை : ஆ) பறழ்

4) குதிரை ஒலி மரபு -----

அ) கத்தும்
ஆ) ஊளையிடும்
இ) குரைக்கும்
ஈ) கனைக்கும்

விடை : ஈ) கனைக்கும்

5) ஆட்டின் இருப்பிடம் ------

அ) பட்டி
ஆ) தொட்டில்
இ ) கூடம்
 ஈ) தொழுவம்

விடை : அ) பட்டி

6) பனை  ------

அ) ஓலை
ஆ) இலை
இ) தாள்
ஈ) தட்டு

விடை : அ) ஓலை

7) ஏர் ------

அ) உழுதல்
ஆ) ஓட்டல்
இ) செலுத்துதல்
ஈ) எதுவுமில்லை

விடை : அ) உழுதல்

8) நன்கு தெரிந்த ஒரு பொருளின்
இயல்பைக் கூறி , தெரியாத ஒரு பொருளின்
இயல்பை விளக்குவது ----- அணி

அ) வேற்றுமை
ஆ) உருவக
இ) உவமை
 ஈ)சொற்பொருள் உவமை

விடை : இ) உவமை

9 ) உவமைத் தொடரில் அமையக்
கூடிய உவமைகளை -----வகைப்படுக்கலாம்.

அ) 5
ஆ) 4
இ) 7
ஈ) 3

விடை : ஈ) 3

10) சூரியனைக் கண்ட பனி போல - இதில்
பயின்று வந்துள்ள உவமை

அ) பண்பு உவமை
ஆ) தொழில் உவமை
இ )  பயன் உவமை
ஈ) மேற்காண் அனைத்தும்

விடை : இ )  பயன் உவமை

11) இலை மறை காய் போல என்பதன்
உள்ளடக்கம் -----

அ) அரிதாக
ஆ) ஒட்டி உறவாடுதல்
இ) காத்திருத்தல்
ஈ) மறை பொருள்

விடை : ஈ) மறை பொருள்

12) ஒரு பொருளின் தொழில் அல்லது செயல்
காரணமாக அமையும் உவமை -----

அ) தொழில்
ஆ) பயன்
இ )  பண்பு
ஈ) எதுவுமில்லை

விடை : அ) தொழில்

13) வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு
உணரப்படுவது -----

அ) எழுத்து மொழி
ஆ) தொடர்மொழி
இ)பேச்சு மொழி
ஈ) உடல்மொழி

விடை : இ)பேச்சு மொழி

14) மனிதர்களின் சிந்தனை காலம் கடந்து
நிற்பதற்கு ----- மொழியே காரணம் ஆகும்.

அ) எழுத்து மொழி
ஆ) தொடர்மொழி
இ) பேச்சு மொழி
ஈ) உடல்மொழி

விடை : அ) எழுத்து மொழி

15 ) பொருள் தெரியாத சொற்களுக்குப்
பொருள் கூறுவது -----

அ) கலைச்சொல்லாக்கம்
ஆ) மொழியாக்கம்
இ ) அகராதி
ஈ) விபரக்குறிப்பு

விடை :  இ ) அகராதி

16) ' தன் கையே தனக்குதவி' -
என்பதன் விளக்கம் -----

அ) தன்னலம்
ஆ) பிறர்நலம்
இ) தன்னம்பிக்கை
ஈ) அவதூறு

விடை : இ) தன்னம்பிக்கை

17) Backup - என்பதன் கலைச்சொல் -----

அ) உலாவி
ஆ) சொடுக்கி
இ )காப்பு நகல்
 ஈ) கோப்பு

விடை : இ )காப்பு நகல்

18) ' மின்னஞ்சல்' எனப்படுவது ---

 அ) Email
ஆ ) Windows 10
இ ) Blog
ஈ ) Website

விடை :  அ) Email

19 ) TYPHOD என்பது -----

அ) குடல்புண
ஆ) குடற்காய்ச்சல்
இ) குடல்புழு
ஈ) குருதி

விடை :  ஆ) குடற்காய்ச்சல்

20) பொருள் தெரிந்த
பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில்
முன்பே உள்ள சொற்களை அடையாளம்
காட்டியும் தேவையான இடத்தில் புதிதாகச்
சொற்களை உருவாக்குவதும் ---- ஆகும்.


அ) அகராதி
ஆ) விபரக்குறிப்பு
இ) கலைச்சொல்லாக்கம்
ஈ) தன்விபரம்

விடை : இ) கலைச்சொல்லாக்கம்

**************    ***********   **************

வினா & விடைத் தயாரிப்பு 

திருமதி. இரா.மனோன்மணி , 

முதுகலைத் தமிழாசிரியை , 

அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி , திண்டுக்கல்.

*************   *********   ************

Post a Comment

0 Comments