பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக்கட்டகம் - செயல்பாடு - 12 - வினா & விடை / 10th SOCIAL SCIENCE - REFRESHER COURSE MODULE - 12 - QUESTION & ANSWER

 


பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 12

வினாக்களும் விடைகளும் 

மதிப்பீடு

1. ஸ்ரீநகரையும், கார்கிலையும் இணைக்கும் கணவாய் ------

விடை : ஜொஷிலா

2. பன்னாட்டு வணிக முனையங்களாகத் திகழ்ந்த கேரளக் கடற்கரைத் துறைமுகம்

விடை : கொச்சி 

3. இந்தியாவின் மேற்குக் கடந்கரைக்கு வந்த ஐரோப்பியர் -------

விடை : போர்ச்சுகீசியர்கள்

4. கூற்று: கிழக்கே சீனா முதல் மேற்கே ஆப்பிரிக்கா வரை நீண்டிருந்த கடல் வணிகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்தியா இருந்தது.

காரணம்: இந்தியாவின் நிலவியல் அமைப்பு இந்தியப் பெருங்கடலின் மையத்தில்  அமைந்துள்ளது.

அ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

ஆ) கூற்று தவறு. காரணம் சரி

இ) கூற்றும் காரணமும் தவறானவை

ஈ) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை.

விடை : அ ) கூற்று சரி.காரணம் கூற்றை விளக்குகிறது.

5. சிந்தித்து விடையளிக்கவும்.

i) அனைத்துப் பகுதியிலுமான கடல் வணிகத்தை போர்ச்சுகீசியர்களால் கட்டுப்படுத்த முடிந்தது எவ்வாறு?

        போர்ச்சுகல் இளவரசர் ஹென்றி கடற்பயணங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கினார்.

      கடற்பயணப் பள்ளியை நிறுவினார்.

    * ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையில் வர்த்தகச் சாவடிகள் நிறுவினார்.

    * நிலநடுக்கோட்டை முதலில் கடந்து பயணித்தனர்.

    * இந்தியாவிற்கான கடல்வழிப் பயணத்தை மேற்கொண்டனர்.

   * கடல்வழிக் கண்டுபிடிப்பின் மூலம் கிழக்கில் போர்ச்சுகீசியப் பேரரசின் அடித்தளம் அமைக்கப்பட்டது.


ii) உயர்சிந்தனை வினா-தற்கால இந்தியாவில் வணிகத்திற்கு துறைமுகங்களின்பங்கினையும் துறைமுகங்களின் செயல்பாட்டினையும் விவாதித்து எழுதுக.

* தற்கால இந்தியாவின் பொருளாதார  வளர்ச்சிக்கு துறைமுகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

* மலிவான போக்குவரத்தாக உள்ளதால் மக்கள் அதிக அளவில் வணிகத்திற்கு இதைப் பயன்படுத்துகின்றனர்.

* பல நாடுகளுடனான வணிகத்திற்கு வழி வகுக்கிறது.

****************     ***********   ************

விடை உருவாக்கம் 

திருமதி.ச.இராணி , ப.ஆசிரியர் , 

அ.ஆ.தி.ந.மே.நி.பள்ளி , 

இளமனூர் , மதுரை.

****************    *************   ************

வாழ்த்துகள் மாணவர்களே !

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

***************    ****************   ***********

Post a Comment

0 Comments