11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
இயங்கலைச் சான்றிதழ்த் தேர்வு - 4
வினாக்களும் விடைகளும்
**************** ************** ***********
1 ) பா வகைகள் , பாக்களின் ஓசைகள் , பா இயற்றுவதற்கான விதிமுறைகள் குறித்துக் கூறும் நூல்
அ) யாப்பருங்கலக்காரிகை
ஆ ) புறப்பொருள் வெண்பா மாலை
இ) தண்டியலங்காரம்
ஈ) மாறனலங்காரம்
விடை : அ) யாப்பருங்கலக்காரிகை
2) புலவர்க்கு 'வன்பா ' என்று
அழைக்கப்படுவது
அ) கலிப்பா
ஆ) வஞ்சிப்பா
இ) வெண்பா
ஈ) ஆசிரியப்பா
விடை : இ) வெண்பா
3) பா எத்தனை வகைப்படும் ?
அ) 2
ஆ) 6
இ) 7
ஈ) 4
விடை : ஈ) 4
4) ஆசிரியப்பாவின் ஓசை
அ ) அகவல்
ஆ) செப்பல்
இ) துள்ளல்
ஈ) தூங்கல்
விடை : அ ) அகவல்
5) 5 அடி முதல் 12 அடி வரை பாடப்படும்
வெண்பா
அ) கலி
ஆ) பஃறொடை
இ) சிந்தியல்
ஈ) குறள்
விடை : ஆ) பஃறொடை
6 ) ஏகாரத்தில் (இறுதி அடியின் இறுதி
எழுத்து) முடியும் பா
அ) வெண்பா
ஆ) கலிப்பா
இ) ஆசிரியப்பா
ஈ) வஞ்சிப்பா
விடை : இ) ஆசிரியப்பா
7) புறப்பொருள் வெண்பா மாலை கூறும்
புறத்திணை எண்ணிக்கை
அ) 5
ஆ) 7
இ) 12
ஈ ) 2
விடை : இ) 12
8) ஒருவருடைய புகழ், வலிமை , கொடை,
அருள் போன்ற நல்லியல்புகளைச்
சிறப்பித்துக் கூறும் திணை
அ) பொதுவியல்
ஆ) பாடாண்
இ) குறிஞ்சி
ஈ) நொச்சி
விடை : ஆ) பாடாண்
9) முதற் பொருள் என்பது
அ ) நிலமும் பொழுதும்
ஆ) தெய்வமும் தொழிலும்
இ) உணவும் இருப்பிடமும்
ஈ) பறவையும் விலங்கும்
விடை : அ ) நிலமும் பொழுதும்
10) "அம்ம வாழி தோழி நம்மூர்ப் பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர்" - இப்பாடல் இடம்பெறும் திணை
அ) முல்லை
ஆ) குறிஞ்சி
இ) மருதம்
ஈ) பாலை
விடை : ஆ) குறிஞ்சி
11) அறம் , பொருள் , இன்பம் என்னும்
முப்பொருளினது உறுதி தரும்
தன்மைகளைக் கூறும் துறை
அ) பரிசில்
ஆ) செவியறிவுறூஉ
இ ) செந்துறை பாடாண்பாட்டு
ஈ) முதுமொழிக்காஞ்சி
விடை : ஈ) முதுமொழிக்காஞ்சி
12 ) அலங்காரம் எனும் சொல்
அ) தமிழ் மொழி
ஆ) வடமொழி
இ) தென்மொழி
ஈ ) உடல்மொழி
விடை : ஆ) வடமொழி
13) அணி இலக்கணம் பற்றிச் சிறப்பாகக்
கூறும் நூல்
அ) தண்டியலங்காரம்
ஆ) மாறனலங்காரம்
இ) குவலயானந்தம்
ஈ) தொன்னூல் விளக்கம்
விடை : அ) தண்டியலங்காரம்
14) தண்டியலங்காரம் கூறும்
பொருளணிகளின் எண்ணிக்கை
அ) 45
ஆ) 25
இ ) 35
ஈ ) 25
விடை : இ ) 35
15 ) " பீலிபெய் சாகாடும் அச்சிறும்
அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் " -
இக்குறட்பாவில் பயின்று வந்துள்ளஅணி
அ) நிரல்நிரையணி
ஆ) வேற்றுமையணி
இ ) உவமையணி
ஈ) பிறிதுமொழிதல் அணி
விடை : ஈ) பிறிதுமொழிதல் அணி
16) வேற்றுமை அணியின் வகைகள்
அ) 2
ஆ) 3
இ)4
ஈ) 6
விடை : அ) 2
17) கடலும் கடல் சார்ந்த இடமும்
குறிக்கும் திணை
அ) குறிஞ்சி
ஆ) நெய்தல்
இ) முல்லை
ஈ) பாலை
விடை : ஆ) நெய்தல்
18) முன்பனிக் காலத்தைக் குறிக்கும்
மாதங்கள்
அ) மாசி, பங்குனி
ஆ) சித்திரை, வைகாசி
இ) ஆனி , ஆடி
ஈ) மார்கழி , தை
விடை : ஈ) மார்கழி , தை
19) மக்களின் அகவாழ்க்கைக்கு உரிய
உணர்ச்சிகள் அல்லது மன உணர்வுகளைப் பற்றிப் பேசுவது
அ) கருப்பொருள்
ஆ) உரிப்பொருள்
இ) புறப்பொருள்
ஈ) புறத்திணை
விடை : ஆ) உரிப்பொருள்
20) பழமொழியை முதுசொல்'
எனக்குறிப்பிடும் நூல்
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) யாப்பருங்கலக்காரிகை
ஈ) சதுரகராதி
விடை : அ) தொல்காப்பியம்
*************** *************** **********
வினா உருவாக்கம்
திருமதி.இரா.மனோன்மணி ,
முதுகலைத் தமிழாசிரியை ,
அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி ,
திண்டுக்கல்
*************** *************** *********
0 Comments