11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
இயங்கலைத் தேர்வு - பகுதி - 2
வினாக்களும் விடைகளும்
1) அரசனில்லை - இது எவ்வகைப் புணர்ச்சி
அ) ஈறுபோதல்
ஆ) இனமிகல்
இ) ஆதிநீடல்
ஈ) உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
விடை : ஈ) உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
2) ஈறுபோதல் விதிக்குச் சான்று
அ) இயல்பில்லை
ஆ) செம்மொழி
இ) பூங்கொடி
ஈ) கைம்மாறு
விடை : ஆ) செம்மொழி
3) பூஞ்சோலை - புணர்ச்சி விதி தருக.
அ) பூப்பெயர் முன் இனமென்மையுந் தோன்றும்
ஆ) ஈறுபோதல்
இ) இனமிகல்
ஈ) ஆதிநீடல்
விடை :
4) எழுத்துகள் யாப்பிலக்கண அடிப்படையில்
வகைப்படும்
அ) 8
ஆ) 4
இ) 3
ஈ) 2
விடை : இ) 3
5) நிரையசைக்குச் சான்று
அ) கலாம்
ஆ) கல்
இ ) கால்
ஈ) க
விடை : அ) கலாம்
6 ) சீர் ----- வகைப்படும்
அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5
விடை :இ) 4
7) உறுப்பியல் , செய்யுளியல் என்பன -----
இலக்கணப் பிரிவுகளாகும்
அ) எழுத்து
ஆ) சொல்
இ) பொருள்
ஈ) யாப்பு
விடை : ஈ) யாப்பு
8) பொருளல்ல - வாய்பாடு
அ) புளிமாங்காய்
ஆ) தேமா
இ) புளிமா
ஈ) கருவிளங்காய்
விடை : அ) புளிமாங்காய்
9 ) தேமா , புளிமா ஆகியன
அ) விளச்சீர்
ஆ) மாச்சீர்
இ) கனிச்சீர்
ஈ) காய்ச்சீர்
விடை : ஆ) மாச்சீர்
10) நூலை + படி - சேர்த்து எழுதுக
அ) நூலைப்படி
ஆ) நூல்படி
இ) நூலைப்படி
ஈ) நூலினைப்படி
விடை : அ) நூலைப்படி
11) ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சத்திற்குப்பின் வல்லினம் -----
அ) மிகாது
ஆ) மிகும்
இ) வேறுபடும்
ஈ) இவற்றில் ஏதுமில்லை
விடை : ஆ) மிகும்
12) அ.இ, உ என்பன ------ எழுத்துகள்
அ) சுட்டு
ஆ) இன
இ) ஒற்றெழுத்து
ஈ) நெடில் எழுத்து
விடை : அ) சுட்டு
13 ) ' கான்' என்பதன் பொருள் ----
அ) பார்
ஆ) கண்
இ) காடு
ஈ) பூ
விடை : இ) காடு
14) ' கொடு' என்பது ----- பொருளில் வரும்
அ) வாழ்த்துதல்
ஆ) வேண்டல்
இ ) வைதல்
ஈ) இருத்தல்
விடை : ஆ) வேண்டல்
15 ) பேசுபவர்களுக்குப் பொருள் புரியாத
வண்ணம் மயக்கம் தரும் சொற்கள்
அ) கேட்பொலிச்சொற்கள்
ஆ) உரிச்சொற்கள்
இ) இடைச்சொற்கள்
ஈ) மயங்கொலிச்சொற்கள்
விடை :ஈ) மயங்கொலிச்சொற்கள்
16) 'ண ' உச்சரிக்கும் முறை
அ) டண்ணகரம்
ஆ) றன்னகரம்
இ) தந்நகரம்
ஈ) னகரம்
விடை : அ) டண்ணகரம்
17) பணிதல் என்ற பொருளில் வருவது
அ) தால்
ஆ) தாள்
இ) தாழ்
ஈ) தான்
விடை : இ) தாழ்
18 ) யானையைக் குறிக்கும் சொல் -----
அ) பரி
ஆ) கரி
இ) கறி
ஈ) பறி
விடை :ஆ) கரி
19) அரன்' என்ற சொல் ------- ஐக் குறிக்கும்
அ) சரசுவதி
ஆ) பெருமாள்
இ) பிரம்மன்
ஈ) சிவன்
விடை : ஈ) சிவன்
20) வெண்சீர்கள்' ------ அழைக்கப்படுகின்றன
அ) காய்ச்சீர்கள்
ஆ) கனிச்சீர்கள்
இ) மாச்சீர்கள்
ஈ) விளச்சீர்கள்
விடை : அ) காய்ச்சீர்கள்
*************** *************** **********
வினா உருவாக்கம்
திருமதி.இரா.மனோன்மணி ,
முதுகலைத் தமிழாசிரியை ,
அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி ,
திண்டுக்கல்
*************** *************** *********
0 Comments