11 ஆம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
இயங்கலைத் தேர்வு - பகுதி - 1
வினாக்களும் விடைகளும்
1) " கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
வாளொடு முன்தோன்றி மூத்தகுடி
தமிழ்க்குடி " எனக் குறிப்பிடும் நூல்
அ) நன்னூல்
ஆ) தொல்காப்பியம்
இ) புறப்பொருள் வெண்பா மாலை
ஈ) சதுரகராதி
விடை : இ) புறப்பொருள் வெண்பா மாலை
2) ' உலக இலக்கியம்' என்ற நூலில் கிரேக்க
இலக்கியத்திற்கும் , தமிழ்
இலக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு
காணப்படுகிறது என்று கூறியவர்
அ ) கா . அப்பாத்துரையார்
ஆ) அண்ணாமலையார்
இ) ஹீராஸ்
ஈ) பேரா.சுந்தரம்பிள்ளை
விடை : அ ) கா . அப்பாத்துரையார்
3 ) தமிழ் மொழி ----- பகுப்புகளை உடையது
அ ) 5
ஆ) 3
இ) 4
ஈ ) 2
விடை : ஆ) 3
4) " நாடக நன்னூல் நன்கு கடைபிடித்து"
என்ற அடிகள் இடம்பெற்ற நூல்
அ) பெரும்பாணாற்றுப்படை
ஆ) சிலப்பதிகாரம்
இ) மனோன்மணியம்
ஈ) நன்னூல்
விடை : ஆ) சிலப்பதிகாரம்
5 ) பண்ணோடு கலந்தும் தாளத்தோடு
கூடியும் இசைக்கப்படுவது
அ) இசைத்தமிழ்
ஆ) நாடகத்தமிழ்
இ) இயற்றமிழ்
ஈ) செந்தமிழ
விடை : அ) இசைத்தமிழ்
6) சங்க இலக்கியங்களை ------- நூல்கள்
என்று அழைப்பர்
அ ) கீழ்க்கணக்கு நூல்கள்
ஆ) மேற்கணக்கு நூல்கள்
இ) தற்கால நூல்கள்
ஈ) பிற்கால நூல்கள்
விடை : ஆ) மேற்கணக்கு நூல்கள்
7) வாழ்வை நெறிப்படுத்தும் அற
இலக்கியங்களைக் கொண்டவை
நூல்கள்
அ) பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
ஆ) பதினெண் மேற்கணக்கு நூல்கள்
இ) அகநூல்கள்
ஈ) புறநூல்கள்
விடை : அ) பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்
8 ) உயிர் 12 ம் மெய் 18 ம் ஆகிய 30 எழுத்துக்கள் -------- ஆகும்.
அ) சார்பெழுத்து
ஆ) முதலெழுத்து
இ) ஒற்றெழுத்து
ஈ) வட்டெழுத்து
விடை : ஆ) முதலெழுத்து
9) சார்பெழுத்துகள் ----- வகைப்படும்.
அ) 8
ஆ) 3
இ) 10
ஈ ) 6
விடை : இ) 10
10) உயிரளபெடை ------- வகைப்படும்.
அ) 3
ஆ) 2
இ )4
ஈ) 5
விடை : அ) 3
11) செய்யுளில் ஓசை குறையாத போதும்
ஒருபெயர்ச்சொல் எச்சச்சொல்லாகத் திரிந்து
அளபெடுப்பது ----- அளபெடை
அ) சொல்லிசை
ஆ ) செய்யுளிசை
இ ) இன்னிசை
ஈ) இசைநிறை
விடை : அ) சொல்லிசை
12) கண்ண் கருவிளை - இதில் பயின்று
வந்துள்ள அளபெடை
அ) செய்யுளிசை
ஆ) சொல்லிசை
இ) ஒற்றளபெடை
ஈ) இன்னிசை அளபெடை
விடை : இ) ஒற்றளபெடை
13 ) ஐம்புலனுக்கும் மனதிற்கும் புலப்படும்
பொருட்களைக் குறிக்கும் சொல்
அ) பெயர்
ஆ) வினை
1 ) இடை
ஈ ) உரி
விடை : அ) பெயர்
14) கடிநகர் - இலக்கணக்குறிப்புத் தருக
அ) வினைத்தொகை
ஆ) இடைக்குறை
இ) உவமைத்தொகை
ஈ) உரிச்சொற்றொடர்
விடை : ஈ) உரிச்சொற்றொடர்
15 ) திணை என்பதன் பொருள்
அ) ஒழுக்கம்
ஆ) வழி
இ) நெறி
ஈ) எதுவுமில்லை
விடை : அ) ஒழுக்கம்
16 ) " உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே "
எனச்சுட்டும் நூல்
அ) நன்னூல்
ஆ) தொல்காப்பியம்
இ) தொன்னூல் விளக்கம்
ஈ) சதுரகராதி
விடை : ஆ) தொல்காப்பியம்
17) இடம் -----வகைப்படும்
அ) 3
ஆ ) 2
இ) 5
ஈ) 4
விடை : அ) 3
18) பகுதிக்கும் விகுதிக்கும் இடையில்
வருவது
அ) சந்தி
ஆ) விகுதி
இ) இடைநிலை
ஈ ) விகாரம்
விடை : இ ) இடைநிலை
19 ) சந்தியின் மற்றொரு பெயர் -----
அ) புணர்ச்சி
ஆ) முதனிலை
இ ) வேர்ச்சொல்
ஈ ) விகாரம்
விடை : இ ) புணர்ச்சி
20) காலம் கரந்த பெயரெச்சம் ------
அ) பண்புத்தொகை
ஆ) உருவகம்
இ) போலி
ஈ) வினைத்தொகை
விடை : ஈ ) வினைத்தொகை
*************** *************** **********
வினா உருவாக்கம்
திருமதி.இரா.மனோன்மணி ,
முதுகலைத் தமிழாசிரியை ,
அ.மே.நி.பள்ளி , செக்காபட்டி ,
திண்டுக்கல்
*************** *************** *********
0 Comments