PG - TRB - தமிழ் - வினாத்தாள் 2004 - 2005 - பகுதி 3 - வினாக்களும் விடைகளும் / PG TRB TAMIL - ORIGINAL QUESTION PAPER - 2004 - 2005 - QUESTION & ANSWER

 


ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2004 - 2005

வினாக்களும் விடைகளும்  - பகுதி - 3

51முதல் 100 வரை - வினாக்களும் விடைகளும்

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER  - 2004 - 2005

QUESTION & ANSWER - PART - 3


****************     **************  ********

101. இவான் பாவ்லாவ் ஆய்வு செய்வது

A) ஊக்கம்

B) மாறுதலுக்குள்ளான அனிச்சைச் செயல்

C) அறிவுத்திறன்

D) ஆளுமை

102 ஜான் பியாஜேவின் ஸென்ஸரி மோட்டார் நிலைக்காலம் (Sensory motor stage period) விரவியிருப்பது

A) 0 முதல் 2 ஆண்டுகள்

B) 7 ஆண்டுகள் முதல் 11 ஆண்டுகள் வரை

C) 11 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்

D) 2 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை

103. கற்றல் வகையின் படிநிலைக் கொள்கையை (The theory of Hierarchy of learning types) உருவாக்கியவர்

A) இ.எல். தார்ண்டைக்

B) பி.எஃப். ஸ்கின்னர்

C) இராபர்ட் எம், காக்னே

D) பாவ்லோவ்

104. கீழ்க்கண்டவற்றில் எது முன்னேற்றப் பள்ளி' ஆகும்?

A) குழந்தைகள் இல்லம்

B) கோடை மலைப்பள்ளி

C) ஆசிரமப் பள்ளிகள்

D) கிண்டர்கார்டன் பள்ளிகள்

105. கற்பித்தல் இயந்திர தளத்தின் (Field of teaching machines) ya Garing

A) பி.எஃப். ஸ்கின்னர் 

B) கிரௌடர்

C) ஆட்லர்

D) சிட்னி பிரஸ்ஸே

106. 'Education for a Better Social Order' என்ற நுலை எழுதியவர்

A) ஸ்ரீ அரவிந்தர் 

B) ஜான் டூயி

C) பெர்டரண்ட் ரஸ்ஸல் 

D) மாண்டிசேரி

107. விஸ்வபாரதி நடைமுறைக்கு வந்த ஆண்டு

A) 1901

B) 1921

C) 1911

D) 1919

108. உன பகுப்பாய்வு கோட்பாட்டை விவரித்தவர்

A ) ஜங்

B) சிக்மண்ட் ப்ராய்டு

C) ஷெல்டன்

D) மாஸ்ஸோ

A) ஜங்


109. சின்னம்மை உடலில் நீடிக்கும் காலம்

A) ஒரு வாரம்

B) நான்கு வாரங்கள்

C) இரண்டு வாரங்கள் 

D) மூன்று வாரங்கள்

110. TATஐ விரிவாக்கம் செய்தவர்

A) பிரஸ்ஸே

B) ஆல்பிரட் பினே

C) சிரில் பர்ட் மற்றும் வெர்னான்

D) முர்ரே மற்றும் மார்கன்

111 'நவசக்தி'என்ற இதழின் ஆசிரியர் யார்?

A) பாரதியார்
B) திரு.வி.க.
C) மறைமலையடிகள் 
D) கல்கி

112. தமிழில் தோன்றிய முதல் சிறுகதை எது?

A) குறட்டை ஒலி
B) குருபீடம்
C) குளத்தங்கரை அரச மரம்
D) செவ்வாழை

113. 'தமிழ்ச் சிறுகதைச் சித்தர்' எனப் போற்றப்படுபவர் யார்?

A) ஜெயகாந்தன் 
B) பதுமைப்பித்தன்
C) மௌனி
D) - கு.ப.ரா.

114. 'பயண இலக்கியப் பெருவேந்தர்' எனப் போற்றப்படுபவர் யார்?

A) ஏ.கே. செட்டியார் 
B) சோமலெ
C) மணியன்
D) திரு.வி.க

115. திருவருட்பாவை மருட்பா எனக் கூறியோரை எதிர்த்து வாதிட்டு அருட்பாவே என நிறுவிய முஸ்லீம் பேரறிஞர் யார்?

A) ஜவ்வாதுப் புலவர்
B) வண்ணக் களஞ்சியப் புலவர்
C) காசிம் புலவர்
D) செய்குதம்பிப் புலவர்

116. இலக்கியத்தல் பரவி நிற்கும் அழகுத் தன்மையைப் பல நோக்கங்களில் ஆராய்வது

A) மரபுவழித் திறனாய்வு

B) படைப்பு வழித் திறனாய்வு

C) முருகியல் முறைத் திறனாய்வு

D) விதிமுறைத் திறனாய்வு

117. ஞானபீட இலக்கிய விருது பெற்ற தமிழ் நாவல் எது?

A) சித்திரப்பாவை 
B) கள்ளோ? காவியமோ?
C) பொன்விலங்கு
D) பாரிஸுக்குப் போ

118. 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்' எனத் தமிழகத்தின் எல்லையைச் சுட்டியவர்

A) பனம்பாரனனார் 
B) தொல்காப்பியர்
C) நச்சினார்க்கினியர் 
D) இளங்கோவடிகள்

119. 'சூரியனுக்கு மிகத் தொலைவில் உள்ள கிரகம்’ எது?

A) யுரேனஸ்
B) நெப்டியூன்
C) ப்ளுட்டோ
D) வெள்ளி


120. இந்திய தேசியக் கொடியில் அமைந்துள்ள ஆரங்களின் எண்ணிக்கையைக் கூறுக.


A) 32

B) 24

C) 12 

D ) 18

121. பெண்களுக்காக முதன் முதலில் தொடங்கப்பெற்ற இதழ் எது?

A) மங்கையர் மலர் 

B) பெண்மதி போதினி

C) மாதர்மித்திரி

D) அமிர்தவர்ஷினி

122 திருக்குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர் யார்?

A) வேதநாயக சாஸ்திரியார்
B) சிவக்கொழுந்து தேசிகர்
C) திரிகூடராசப்பக் கவிராயர்
D) வரத நஞ்சையப்ப பிள்ளை

123. தெய்வீக உலா' என்று சிறப்பிக்கப்படும் நூல் எது?

A) திருக்கைலாய ஞான உலா
B) மூவருலா
C) மதுரைச் சொக்கநாதர் உலா
D) திருவாரூர் உலா

124. உரைநடை வேந்தர்' என்று போற்றப்படுபவர் யார்?

A) நக்கீரர்
B) ஆறுமுக நாவலர்
C) பரிமேலழகர்
D) சேனாவரையர்

125. என் சரிதம்' என்ற நூலை எழுதியவர் யார்?

A) உவே.சா.
B) நாமக்கல் கவிஞர்
C) பாரதியார்
D) மறைமலையடிகள்

126. செயல்பாட்டு ஆக்க நிலையுறுத்தல் கொள்கையை தோற்றுவித்தவர்

A) இ.எல். தார்ண்டைக் 

B) பாவ்லாவ்

C) பி.எஃப். ஸ்கின்னர்

D) கோஹ்லர்


127. விளைவு விதி (Lawofeffect).....-- -ன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

A) மறுபடி செய்தல்
B) வெகுமதி
C) ஊக்கம்
D) மறுமொழி

128. தேசிய கல்விக் குழுவின் (1964-66) தலைவராக இருந்தவர்

A) டாக்டர் டி.எஸ். கோத்தாரி
B) டாக்டர் ஏ.எல். முதலியார்
C) டாக்டர் ஜே.பி. நாயக்
D) டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்

129. சுவிட்சர்லாந்திலுள்ள ஓல்டன்வால்ட் பள்ளியைத்  (oldenwald School) தோற்றுவித்தவர்

A) பால் கேஹப்
B) பால் ஃப்ரியர்
C) ஏ.எஸ். நீல்
D) ஃபுரோபெல்

130. ஃபுரோபெல்லுடன் தொடர்பில்லாதது எது?

A ) பாடல்கள்
B) பரிசுகள்
C) தொழில்
D) கற்பிக்கும் உபகரணங்கள்

131 சமரச சன்மார்க்கர்தை முதன் முதலாக உலகிற்கு உணர்த்தியவர் யார்?

A) தாயுமானவர்
B) அருணகிரிநாதர்
C) பட்டினத்தார்
D) திருமூலர்

132. பக்தி சுவை நனி சொட்ட சொட்டப்பாடிய கவிவலவ' என்று போற்றப்படுபவர் யார்?

A) சேக்கிழார்
B) கம்பர்
C) மாணிக்கவாசகர்
D) அப்பர்

133. பரஞ்சோதி முனிவர் இயற்றிய புராணம் எது?

A) கந்தபுராணம்
B) அரிச்சந்திர புராணம்
C) திருவிளையாடல் புராணம்
D) பெரியபுராணம்

134. 'ஆராய்ச்சி' என்னும் இதழை நடத்தியவர் யார்?

A) நா. வானமாமலை 
B) கி.வா. ஜகந்நாதன்
C) அன்னகாமு
D) அழ வள்ளியப்பா

135. 'ஒரு கிராமத்து நதி' கவிதை நூலுக்காக சாகித்ய அகாதெமி பரிசு பெற்றவர் யார்?

A) கவிக்கோ அப்துல் ரகுமான்
B) கவிஞர் மீரா
C) கவிஞர் சிற்பி.
D) கவிஞர் வைரமுத்து

136. ‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னைநன்றாகத் தமிழ்செய்யு மாறே' என்று கூறும் நூல் எது?

A) திருமந்திரம்
B) திருவாசகம்
C) பெரிய புராணம் 
D) திருக்கோவையார்

137. திருவிரட்டை மணிமாலையை இயற்றியவர் யார்?

A) சுந்தரர்
B) அப்பர்
C) ஆண்டாள்
D) காரைக்கால் அம்மையார்

138, சைவத்திற்கு மாணிக்கவாசகர் போன்று வைணவத்திற்கு உரியவர் யார்?

A) நம்மாழ்வார்
B) பேயாழ்வார்
C) பெரியாழ்வார்
D) திருப்பாணாழ்வார்

139. வழிப்பறிக் கொள்ளையடித்து வைணவ அடியார்களைப் புரந்த ஆழ்வார் யார்?

A) பூதத்தாழ்வார்
B) குலசேகர ஆழ்வார்
C) திருமங்கையாழ்வார்
D) பொய்கையாழ்வார்

140. நம்மாழ்வாரையே தெய்வமாகக் கருதிப்பாடிய ஆழ்வார் யார்?

A) மதுரகவியாழ்வார்
B) திருமழிசையாழ்வார்
C) தொண்டரடிப் பொடியாழ்வார்
D) ஆண்டாள்

141 'ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கமுடைமை' என்று சுட்டும் நூல் எது?

A) ஆசாரக்கோவை 
B) நாலடியார்
C) முதுமொழிக்காஞ்சி
D) ஏலாதி

142. சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றியவர் யார்?

A) காரியாசான்
B) கணிமேதாவியார்
C) விளம்பிநாகனார் 
D) பூதஞ்சேந்தனார்

143. குமரகுருபரர் இயற்றிய நூல் எது?

A) அறநெறிச்சாரம் 
B) நன்னெறி
C) வெற்றிவேற்கை 
D) நீதிநெறி விளக்கம்

144. தேவாரம் எனப்படுபவை

A) முதல் மூன்று திருமுறைகள்
B) முதல் ஐந்து திருமுறைகள்
C) முதல் ஏழு திருமுறைகள்
D) முதல் ஆறு திருமுறைகள்

145. 'ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பது எது?

A) திருவாசகம்
B) திருப்புகழ்
C) திருவருட்பா
D) திருமந்திரம்

146. திருக்குறளில் அறத்துப் பாலில் இடம் பெற்றுள்ள அதிகாரங்கள்

A) 70
B) 25
C) 35
D) 38

147. 'கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்' என்று கூறியவர் யார்?

A) ஔவையார்
B) இடைக்காடர்
C) கோவூர்கிழார் 
D) மோசிகீரனார்

148. 'வேளாண் வேதம்' என்னும் வேறு பெயரையுடைய நூல் எது?

A) திருக்குறள்
B) நாலடியார்
C) சிலப்பதிகாரம் 
D) கம்பராமாயணம்

149. உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்ட தமிழ் நூல் எது?

A ) புறநானூறு
B) சிலப்பதிகாரம்
C) திருக்குறள்
D) நாலடியார்

150. மூன்றுரை அரையனார் இயற்றிய நீதி நூல் எது?

A ) பழமொழி நானூறு
B) ஆசாரக்கோவை
C ) நான்தணிக்கடிகை
D) திரிகடுகம்




**************   **********    *****************


தேர்வில் வெற்றி உங்களுக்கே !

வாழ்த்தும் ,

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*****************   *************   **********




Post a Comment

0 Comments