ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு
வினாத்தாள் - 2012 - 2013
வினாக்களும் விடைகளும் - பகுதி - 3
101 முதல் 150 வரை - வினாக்களும் விடைகளும்
PG - TRB - TAMIL
ORIGINAL QUESTION PAPER - 2012 - 2013
QUESTION & ANSWER - PART - 3
**************** ************* ***********
101. தன்னைச் சுட்டும்போது ஐ என்னும் எழுத்துக்கு எத்தனை மாத்திரை?
A) ஒன்றரை
B) ஒன்று
C) இரண்டு
D ) அரை
102. இது என்பது
A) முற்றியலுகரம்
B) உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
C) வன்றொடர்க் குற்றியலுகரம்
D) இவற்றுள் எதுவுமில்லை
103. அப்பரும் சம்பந்தரும் படிக்காசு பெற்ற தலம்
A) திருவீழிமிழலை
B) திருவாரூர்
C) திருநின்றவூர்
D) தஞ்சாவூர்
104. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர்
A) தொ.பொ. மீனாட்சி சுந்தரனார்
B) அ. விநாயகமூர்த்தி
C) தேவநேயப் பாவாணர்
D) மு. வரதராசனார்
105. அதிரப் பொருவது
A) வாகைத்திணை
B) தும்பைத்திணை
C) உழிஞைத்திணை
D) பாடாண்திணை
106. பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் -1 பட்டியல் - 2
a) சம்பந்தர் 1. வாகீசர்
b) நாவுக்கரசர் 2. வாதவூரர்
c) சுந்தரர் 3. ஆளுடைய பிள்ளை
d) மாணிக்கவாசகர் 4. ஆரூரர்
குறியீடுகள் :
a) b) c) d)
A) 3 1 4 2
B) 4 1 3 2
C) 2 3 4 1
D) 4 1 2 3
A) மேட்சன்
B) மாஸ்லோ
C) முர்ரே
D) ஹல்
130. வெஸ்லர் குழந்தைகளுக்கான நுண்ணறிவு சோதனை நடத்திய ஆண்டு
A) 1939
B) 1949
C) 1955
D) 1956
131 யூனெஸ்கோ ஆதரித்த கல்வி எது?
A) பெண் கல்வி
B) முதியோர் கல்வி
C) அனைவருக்கும் கல்வி
D) இவற்றுள் எதுவுமில்லை
132. தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் மக்கள்தொகை அடர்த்திகுறைவாக உள்ளது?
A) நீலகிரி
B) பெரம்பலூர்
C) சிவகங்கை
D) தர்மபுரி
133. 1973-ஆம் ஆண்டு எந்த நாடு தொலைதூரக் கல்வியில் சோதனைகளை செய்தது?
A) UK
B) USA
C) USSR
D) ஜப்பான்
134. குழந்தை தொழிலாளி ஒழிப்பு நாள்
A) ஜுன் 12
B) ஜுலை 12
C) ஆகஸ்டு 12
D) நவம்பர் 12
135. முறையான கல்வி முகமை என்றழைக்கப்படுவது எது?
A) பள்ளி
B) வீடு
C) சமூகம்
D) இவற்றுள் எதுவுமில்லை
136. முன்னோடிப் பள்ளியின் மறுபெயர்
A) தொடக்கப்பள்ளி
B) முன் தொடக்கப்பள்ளி
C) நர்சரி பள்ளி
D) நவொதயா பள்ளி
137. தமிழ்நாட்டில் எத்தனை திறந்தநிலைப் பள்ளிகள் உள்ளன?
A) 25
B) 26
C) 27
D) 28
138. செயலறிவுக்கல்வித் திட்டம் தொடங்கியது யாருக்காக?
A) தொழிலாளர்கள்
B) உழவர்கள்
C) மலைவாழ் மக்கள்
D) இவர்கள் அனைவருக்கும்
139. தேசியக் கல்விக் கொள்கை கடைபிடிக்கப்பட்ட ஆண்டு
A) 1981
B) 1983
C) 1986
D) 1989
140. முதியோர் கல்விக்காக மகிளா மண்டல் எந்த நிலைக்காக
அமைக்கப்பட்டது?
A) வட்டார நிலை
B) கிராமப்புற நிலை
C) மாவட்ட நிலை
D) மாநில நிலை
141. இந்தியா ஹாக்கிப் போட்டியில் உலகக் கோப்பையை வென்ற ஆண்டு
A) 1971
B) 1973
C) 1978
D) 1975
142. விரிவாக்கம் தருக : NABARD
A) National Bank for Agriculture and Rural
Development
B) National Books and Research Department
C) National Bharath Rador Defence
D) Nuclear and Bharath Rador Defense
143. பாண்டியர்களின் துறைமுகம்
A) தொண்டி
B) முசிறி
C) கொற்கை
D) பூம்புகார்
144. கோரா (Gora) என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A) டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன்
B) இரவீந்திரநாத் தாகூர்
C) முல்க்ராஜ் ஆனந்த்
D) எல்.கே. அத்வானி
145. அசோகரது கல்வெட்டுகளில் அவருடைய பெயர் பொதுவாக எப்படிக் குறிக்கப்பட்டுள்ளது?
A) சக்கரவர்த்தி
B) தர்மதேவர்
C) பிரியதர்சி
D) தர்மகீர்த்தி
0 Comments