PG - TRB - தமிழ் வினாத்தாள் - 2005 - 2006 வினாக்களும் விடைகளும் - பகுதி - 3 / PG TRB - TAMIL - 2005 - 2006 , ORIGINAL QUESTION PAPER - PART 3 - QUESTION & ANSWER

 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய 

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2005 - 2006

வினாக்களும் விடைகளும் - பகுதி - 3

101 முதல் 150 வரை - வினாக்களும் விடைகளும்

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER - 2005 - 2006

QUESTION & ANSWER - PART - 3

****************    *************   ***********

101. 'சாமான்' என்ற சொல் எம்மொழியைச் சார்ந்தது?

A) தமிழ்

B) கன்னடம்

C) உருது

D) பாரசீகம்

102. சேர மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஆழ்வார்

A) நம்மாழ்வார்

B) குலசேகராழ்வார்

C) திருமங்கையாழ்வார் 

D) பெரியாழ்வார் 

103. பலவகைப் பொருள் பற்றிப் பலவகைச் செய்யுள்களால் நூறு பாட்டுகள் அமைந்த நூல்

B) உலா

C) பிள்ளைத் தமிழ் 

D) கலம்பகம்

104. பேதைப் பருவம் என்பது

A) 5 வயதிலிருந்து 7 வயது வரை

B) 7 வயதிலிருந்து 9 வயது வரை

C) 12 வயதிலிருந்து 13 வயது வரை

D) 14 வயதிலிருந்து 19 வயது வரை

105. 'கோப்பை' என்ற சொல் எம்மொழியைச் சார்ந்தது?

A) ஆங்கிலம்

B) போர்த்துக்கீசியம்

C) பாரசீகம்

D) சீனம்

106. டெல்லியில் உள்ள செங்கோட்டை யாரால் கட்டப்பட்டது?

A) ஷாஜஹான்

B) ஜஹாங்கீர்

C) ஔரங்கசீப்

D) அக்பர்

107. சீனா மற்றும் ஜப்பானில் வீசும் வெப்பமண்டல புயல் காற்றிற்குப் பெயர்

A) ஹரிகேன்

B) டொர்னேடோ

C) டைபூன்

D) வில்லி - வில்லீ

108. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :

a) அன்னிபெசன்ட் 1. யங் இந்தியா

b) ஜி.சுப்பிரமணிய அய்யர் 2. தி ஹிந்து


c) மோதிலால் நேரு  3. நியூ இந்தியா

d) எம்.கே. காந்தி       4. இன்டிபெண்டன்ட்

குறியீடுகள்:

    a)     b)      c)      d)

A) 1      2        3        4

B) 3      4         2        1

C) 1       4         3         2

D) 3        2        4          1

109. அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடம்

A) லண்டன்

B) பீஜிங்

C) சிட்னி

D) பாரீஸ்

110. ஹிராகுட் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டது?

A) மகாநதி

B) கோதாவரி

C) நர்மதை

D) ரவி

111. மக்கள் தொகைக் கல்வியின் முக்கிய நோக்கம்

A) மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஏற்படக்கூடிய
விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது

B) குடும்பக் கட்டுப்பாட்டுக் கல்வியை அளித்தல்

C) சிறு குடும்பம் அமைக்க மக்களைத் தூண்டுதல்

D) குடும்ப மற்றும் உடல்நலக் கல்வியை அளித்தல்

112 மதிப்பு , தன்மதிப்பு தேவைகளை நிச்சயமாக நிறைவேற்றுவது என்பது

A) சாதனைகள் மூலமாக

B) சமூக இணைப்பின் மூலமாக

C) காப்புணர்ச்சி மூலமாக

D) தோல்வி மூலமாக

113. இலக்கியம், ஓவியம், இசை மற்றும் பிற நுண்கலைகள் யாவும் உருவாவதற்கு அடிப்படை

A) மீள் ஆக்கக் கற்பனை 

B) பயன்வழிக் கற்பனை

C) அழகுணர் கற்பனை 

D) பின்பற்றும் கற்பனை

114. நுண்ணறிவு சோதித்தல் என்பது பயன்படுவது

A) பாடத்திட்ட மாற்றத்திற்கு

B) கற்றுக் கொள்ளும் திறனைக் கண்டறிய

C) மாறுபாடுள்ள குழுக்களை ஒப்பிடுவதற்கு

D) அதிகப்படியான கற்பித்தலுக்கு

115. குழந்தையின் அறிவு வளர்ச்சியுடன் தொடர்புடையது

A) பயிற்சிகள்

B) உடல் வளர்ச்சியின் விகிதம்

C) சூழ்நிலையின் தரம்

D) நரம்பு மண்டலத்தின் வளர்ச்சி


116. எரிக் எரிக்சன் என்பார் குறிப்பிடுகின்ற சமுதாய அடிப்படையில் ஏற்படும் வளர்ச்சி நிலைகளில் குமரப் பருவத்தில் ஏற்படக்கூடிய 'தன்முனைப்பு-ஒப்புமை' (Ego Identity) நெருக்கடி ஏற்படுவது

A) மற்றவர்கள் மீது வெறுப்பு கொள்வதால்

B) சமூகத்தில் மற்றவர்களோடு ஏற்படும் போராட்டங்களால்

C) 'ஈகோ' அல்லது 'தான்' என்ற உயர்வு மனப்பான்மையால்

D) சமூகத்தில் தனக்கென ஒரு வாழ்க்கைப் பங்கினை அறிந்து கொள்வதில் உண்டாகும் நெருக்கடி நிலையால்

117. நியாயமான சிந்தனையைப் பாதிக்கக்கூடியது

A) மன எழுச்சிகள் 

B) தவறான எண்ணம்

C) சூழ்நிலை

D) மனப்பான்மை

118. வாழ்க்கைக்குப் பயன்படும் கல்வியானது உள்ளடக்கியது

A) எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு

B) எண்ணாற்றல்

C) எழுத்தறிவு மற்றும் தொழிலறிவு

D) எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் தொழிலறிவு

119. மிகப் பிரபலமான தொழில்நுட்பம் அமைந்த புதுமையான கற்பித்தல் தொடர்புடையது

A) அறிவியல் ஆய்வகம் 

B) மொழி ஆய்வகம்

C) கணினி ஆய்வகம் 

D) தொழில்நுட்ப ஆய்வகம்

120. செயல்படுவதற்கான உந்துதல் செயலில் இருப்பின் ஆவ்வூக்கமானது

A) புற ஊக்கி

B) அக ஊக்கி

C) அக மற்றும் புற ஊக்கி

D) அடைவைச் (Achievement) சார்ந்தது

121 பொருநராற்றுப்படை என்பது எந்த அரசனைப் பற்றிப் பாடப்பட்டது?

A) சோழன்

B) சேரன்

C) பாண்டியன்

D) பல்லவன்

122 மலைபடுகடாம் என்ற நூலின் மற்றொரு பெயர்

A) பெரும்பாணாற்றுப்படை 

B) சிறுபாணாற்றுப்படை

C) திருமுருகாற்றுப்படை 

D) கூத்தராற்றுப்படை

123. வடநாட்டு அரசன் பிரகதத்தனுக்குத் தமிழ் அறிவித்தற் பொருட்டுப் பாடப்பட்ட நூல்

A) குறிஞ்சிப்பாட்டு 

B) முல்லைப்பாட்டு

C) பட்டினப்பாலை 

D) தமிழ்விடு தூது

124. மதுரைக் காஞ்சியில் மாலை நேரக் கடைகள் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.

A) நாளங்காடி

B) அல்லங்காடி

C) வணிகச் சந்தை 

D) கடை வீதி


125. நீதி நூல்களின் காலம்


A) கி.பி. 100 - 600 

B) கி.பி. 600 - 850

C) கி.பி. 850 - 1200 

D) கி.பி. 1350 - 1750


126. பத்துப்பாட்டுத் தொகுப்பிலுள் 782 அடிகளையுடைய நூல்

A) நெடுநல்வாடை 

B) குறிஞ்சிப்பாட்டு

C) முல்லைப்பாட்டு 

D) மதுரைக்காஞ்சி


127. சங்க இலக்கியத்துள் அமைந்துள்ள பாடல்கள் பெரும்பாலும் இப்பா வகையைச் சார்ந்தவை

A) வெண்பா

B) கலிப்பா

C) ஆசிரியப்பா

D) வஞ்சிப்பா

128. கோப்பெருஞ்சோழனுக்கும் அவனுடைய மக்களுக்கும் பகைமை ஏற்பட்டபோது அது போராக மூளாதபடி தடுத்த புலவர்

A) கண்ணகனார்

B) புல்லாற்றூர் எயிற்றியனார்

C) மாங்குடி மருதனார்

D) ஔவையார்

129. "யாதும் ஊரே; யாவரும் கேளிர்;” எனத் தொடங்கும் பாடலை இயற்றிய புலவர்

A) கபிலர்
B) பரணர்
C) கணியன் பூங்குன்றனார்
D) நக்கீரனார்


130. நாட்டியக் கலையில் சிறப்புப் பெற்ற பெண்கள் இப்பெயரில் அழைக்கப்பட்டனர்


A) கூத்தர்

B) பொருநர்

C) பாணர்

D) விறலியர்


131. நான்கு சீர்களையும் துள்ளித் துள்ளி வரும் ஓசையையும் உடையது

A) வெண்பா

B) ஆசிரியப்பா

C) கலிப்பா

D) வஞ்சிப்பா

132. பகைவனின் மதிலை முற்றுகையிடுதல்

A) தும்பை

B) உழிஞை

C) காஞ்சி

D) வஞ்சி


133. ஓர் இடம் குறித்து இருவர் படையும் எதிர்ப்பட்டுப் போர் செய்தல்

A) தும்பை

B) வெட்சி

C) வஞ்சி

D) காஞ்சி

134. சங்க இலக்கியங்களில் ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடி வரையில் பாடல்கள் காணப்பெறும் தொகுப்பு

A) குறுந்தொகை

B) அகநானூறு

C) நற்றிணை

D) புறநானூறு

135. நெடுந்தொகை எனச் சிறப்புப் பெயர் பெற்றது

A) அகநானூறு

B) புறநானூறு

C) கலித்தொகை 

D) ஐங்குறுநூறு

136. நாலடியார் என்னும் நீதிநூலை முழுவதும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

A) கால்டுவெல்

B) இரேனியஸ்

C ) ஜி.யு.போப்

D) இராபர்ட்-டி-நொபிலி

137. கழுமலம் என்னும் இடத்தில் நடந்த போர் பற்றிக் கூறும் நூல்

A) கார் நாற்பது

B) களவழி நாற்பது

C) இன்னிலை

D) இன்னா நாற்பது

138. மூவேந்தர்களை வெண்பாக்களால் புகழ்ந்து பாடிய பழைய நூல்

A) சிலப்பதிகாரம் 

B) முத்தொள்ளாயிரம்

C) நந்திக்கலம்பகம்

D ) மூவருலா

139. பழங்கால நாட்டுப் பாடல்களின் வடிவங்களை நாம் இந்நூலின் வழி அறியலாம்

A) முக்கூடற்பள்ளு 

B) திருக்குறள்

C) சிலப்பதிகாரம் 

D) பழமொழி நானூறு

140. மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்லை இல்."
எனும் வரிகள் இடம் பெறும் இலக்கிய நூல்

A) ஆசாரக் கோவை 

B) மணிமேகலை

C) சிலப்பதிகாரம் 

D) கம்பராமாயணம்

41 மன எழுச்சி என்பது

A) சிக்கலான உளநிலை

B) மனதின் தூண்டப் பெற்ற அல்லது சலனமடைந்த நிலை

C) பாதிக்கப்பட்ட மனநிலை

D) தூண்டலுக்கு வினை புரிய தயார் நிலை

142 முன்பிள்ளைப் பருவத்தில் மிகக் கடினமான வளர்ச்சிசார்செயல்களுள் ஒன்று

A) மன எழுச்சியுடன் பிறருடன் தொடர்பு கொள்வதைக் கற்றுக்கொள்ளுதல்

B) நடக்கக் கற்றுக் கொள்ளுதல்

C) படிக்கக் கற்றுக் கொள்ளுதல்

D) தானே உணவு உண்ணக் கற்றுக் கொள்ளுதல்

143. எந்த ஓர் உயிரின வகையிலும் மரபு நிலைக் கூறுகனைப் பரம்பரையாகக் கடத்தக் கூடியது.

A) செல்கள்

B) திசுக்கள்

C) ஜீன்கள்

D) சைட்டோபிளாசம்

144. தனி மனிதனுன் வேறுபாடுகள் என்பது

A) ஒரே நபரின் பல்வேறு திறன்களின் வேறுபாடுகள்

B) வெவ்வேறு நபரிடையே ஏற்படும் வேறுபாடுகள்

C) வெவ்வேறு நபரிடையேயுள்ள ஆளுமை வேறுபாடுகள்

D) வெவ்வேறு நபரிடையேயுள்ள மனப்பான்மை வேறுபாடுகள்

145. ஆசிரியரின் விசாரணை ஆர்வத்தைத் தூண்டக் கூடிய கல்வி

A) பொது உளவியல்

B) மருத்துவ உளவியல்

C) கல்வி உளவியல்

D) பரிசோதனை உளவியல்

146. 'கறுப்பு மலர்கள்' எனும் புதுக் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்

A) மு. மேத்தா

B) வைரமுத்து

C) வாலி

D) நா. காமராசன்

147. இராவண காவியத்தின் ஆசிரியர்

A) புலவர் குழந்தை

B) கண்ணதாசன்

C) பெரியார்

D) வாணிதாசன்

148. எதிர்பாராத முத்தம் எனும் காவியத்தை எழுதியவர்

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) வாணிதாசன் 

D) கண்ணதாசன்

149. தமிழில் முதன்முதலில் தோன்றிய சமூக நாடகம்

A) டம்பாச்சாரி விலாசம்

B) நந்தனார் சரித்திரம்

C) மனோன்மணியம்

D) அனிச்ச அடி

150. 'தமிழ் நாடகத் தந்தை' என்று போற்றப்படுபவர்

A) அண்ணா

B) சங்கரதாஸ் சுவாமிகள்

C) பம்மல் சம்பந்த முதலியார்

D) கோமல் சுவாமிநாதன்


*****************   ****************   ********


தேர்வில் வெற்றி உங்களுக்கே !

வாழ்த்தும் ,

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*****************   *************   **********

Post a Comment

0 Comments