ஆசிரியர் தேர்வு வாரியம்
முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு
வினாத்தாள் - 2002 -2003
வினாக்களும் விடைகளும் - பகுதி - 3
PG - TRB - TAMIL
ORIGINAL QUESTION PAPER - 2002 - 2003
QUESTION & ANSWER - PART - 3
**************** ************** ***********
101. இராமலிங்கரின் 'அருட்பாவிற்கு' மறுப்புத் தெரிவித்து வழக்கிட்டவர் யார்?
A) மீனாட்சிசுந்தரம் பிள்ளை
B) ஆறுமுக நாவலர்
C) கோபாலகிருஷ்ண பாரதி
D) முத்துசாமிப் பிள்ளை
102. மெய்ப்பாட்டை அல்லது மனநிலையை வெளியிட்டாடுகின்ற கூத்து
A) சொக்கம்
B) மெய்க்கூத்து
C) அவிநயக் கூத்து
D) நாடகம்
103. காண்டேகரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர்
A) த.நா. சேனாபதி
B) ஸ்ரீராம்
C) கா.ஸ்ரீ.ஸ்ரீ.
D) ஜயராம்
104. ஞாயிறு மலர்களில் நாட்டுப்புறப் பாக்களை ஓராண்டுகாலம் தொடர்ந்து வெளியிட்ட நாளிதழ் எது?
A) தினத்தந்தி
B) தினமணி
C) தினகரன்
D) தினமலர்
105. குழுமியாடுதலைக் குரவை' என்ற பெயரால் முதன் முதலில் சுட்டிய நூல்
A) சிலப்பதிகாரம்
B) கலித்தொகை
C) அகநானூறு
D) தொல்காப்பியம்
106. திருப்பள்ளி எழுச்சி சங்க காலத்தில் எவ்வாறு அழைக்கப்பெற்றது?
A) துயிலெடை நிலை
B) பூவை நிலை
C) வெள்ளி நிலை
D) கொடி நிலை
107. வால்மீகி பாடாத, கம்பன் பாடிய படலம் எது?
A) அதிகாயன் வதைப்படலம்
B) மாயாசனகப் படலம்
C) நாகபாசப் படலம்
D) பிரமாத்திரப் படலம்
108. பரிமேலழகர் உரையெழுதிய எட்டுத்தொகை நூலெது?
A) நற்றிணை
B) ஐங்குறுநூறு
C) பரிபாடல்
D) புறநானூறு
109. 'பழமொழி' என்ற சொல்லை முதன் முதலில் எடுத்தாண்ட சங்க இலக்கியம் எது?
A) குறுந்தொகை
B) கலித்தொகை
C) அகநானூறு
D) பதிற்றுப்பத்து
110. தொல்காப்பியர் விடுகதையை எப்பெயரால் குறிப்பிடுகின்றார்?
A) வாய்மொழி
B ) பிசி
C) அங்கதம்
D) முதுசொல்
111 ) போர் பற்றி எழுந்த தனி நூல்
A) உலா
B) பரணி
C) புகழ்ச்சி மாலை
D) அங்க மாலை
112. பின்ளைத் தமிழ் இலக்கிய வகைக்கு முதன் முதலில் வித்திட்டவர் யார்?
A) மதுரகவியாழ்வார்
B) பேயாழ்வார்
C) நம்மாழ்வார்
D) பெரியாழ்வார்
113. அந்தாதி முறையில் நூறு பாக்களாகப் பாடப்பட்ட நூலெது?
A ) பள்ளு
B) குறவஞ்சி
C) நந்திக் கலம்பகம்
D) தமிழ்விடு தூது
114. நளன் கதையை வெண்பா யாப்பில் பாடியவர்
A) செயங்கொண்டார்
B) புகழேந்தி
C) ஒட்டக்கூத்தர்
D) பரஞ்சோதியார்
115. 'பெண் புத்தி மாலை'யை எழுதிய புலவர் யார்?
A) அப்துல் மஜீது
B) சவ்வாதுப் புலவர்
C) முகம்மது உசேன்
D) முகம்மது கான்
116. 'அஆ' இரண்டும் எவ்வுயிர் வகையில் அடங்கும்?
A) முன்னுயிர்
B) குவியுயிர்
C) மூடுயிர்
D) அங்காப்புயிர்
117. சங்கம் என்ற சொல்லை முதன் முதலில் வழங்கிய நூலெது?
A) முல்லைப்பாட்டு
B) நற்றிணை
C) திருக்குறள்
D) மணிமேகலை
118. யார் பாடிய தேவாரத்தில் அருள், இரு, ஒழி, பெறு போன்றவை துணை வினைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன?
A) சம்பந்தர்
B) அப்பர்
C) சுந்தரர்
D) மாணிக்கவாசகர்
119. ஆய்த எழுத்தைத் தனி ஒலியாகக் கருதும் இலக்கண நூல் எது?
A) தொல்காப்பியம்
B) வீரசோழியம்
C) அகத்தியம்
D) இலக்கண விளக்கம்
120. இருதிணை ஐம்பாலுக்கு உரியதாக அன்று, அல்ல என்ற எதிர்மறைச் சொற்களைப் புதிதாகச் சொன்ன நூலைக்
குறிப்பிடுக.
A) நேமிநாதம்
B) வச்சணந்திமாலை
C) நன்னூல்
D) யாப்பருங்கலம்
121 மூட நம்பிக்கையை எதிர்த்துக் கல்கி எழுதிய சிறுகதை எது?
A) வீணை பவானி
B) கணையாழியின் கனவு
C) கேதாரியின் தாயார்
D) காதறாக் கள்ளன்
122. ஆங்கிலத்திற்கு ஷேக்ஸ்பியர் அமைந்தது போலத் தமிழுக்கு
அமைந்தவர்
A) பம்மல் சம்பந்த முதலியார்
B) இலட்சுமண பிள்ளை
C) சங்கரதாஸ் சுவாமிகள்
D) பொன்னுசாமி பிள்ளை
123. தமிழ்நாட்டு நாடகக் குழுவை இங்கிலாந்து வரை அழைத்துச் சென்றவர்
A) பவானந்தம் பிள்ளை
B) எஸ்.டி. சுந்தரம்
C) டி.கே. முத்துசாமி
D) தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்
124. ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட சாமிநாத சர்மாவின் நாடகம் எது?
A) பாணபுரத்து வீரன்
B) அபிமன்யூ
C) வித்யாசாகரர்
D) காளமேகம்
125. தாலாட்டுப் பாட்டின் இராகம் எது?
A) மோகனம்
B) சிந்து பைரவி
C) நீலாம்பரி
D) இந்தோளம்
126. வில்லிபுத்தூரார் தன் பாரதத்தை எத்தனை பருவங்களாக வகுத்துள்ளார்?
A) பத்து
B) பன்னிரண்டு
C) முப்பது
D) இருபது
127. வையை பற்றித் தனிப்பாக்கள் அமைந்துள்ள இலக்கியம் எது?
A) பதிற்றுப்பத்து
B) பரிபாடல்
C) புறநானூறு
D) ஐங்குறுநூறு
128. மிகப்பழைய தமிழ் எழுத்து எது?
A) வட்டெழுத்து
B) கிரந்த எழுத்து
C) பிராமி எழுத்து
D) தேவநாகரி
129. புணர்ச்சியில் தோன்றும் உடம்படு மெய்கள் யாவை?
A) க்,ச்
B) ன், ற்
C) ய், வ்
D) ட், ண்
130. "தமிழ் என்ற பெயருக்கு நிகரான சமஸ்கிருதப் பெயர் திராவிட” என்பதாம் என்றவர் யார்?
A) ஹீராஸ்
B) கால்டுவெல்
C) கமில் கவலபில்
D) ஹால்
131. "வன்தொண்டர்” என்று குறிக்கப் பெறுகின்ற சைவ அடியவர் யார்?
A) திருநாவுக்கரசர்
B) சுந்தரர்
C) பரஞ்சோதியார்
D) கருவூர்த்தேவர்
132. "த்ரியெம்பாவ- த்ரிபாவ” என்ற பெயரில் திருவெம்பாவை, திருப்பாவை விழாக் கொண்டாடும் நாடு எது?
A) சயாம்
B) இந்தோனேசியா
C) மலேசியா
D) தாய்லாந்து
133. திருப்பாவை ஜீயர் என்றழைக்கப்படுபவர் யார்?
A) மணவாள முனிவர்
B) ஆளவந்தார்
C) நஞ்சீயர்
D) இராமானுஜர்
134. பெண்களின் மடலேற்றம் பற்றிப் பாடிய ஆழ்வார் யார்?
A) மதுரகவி ஆழ்வார்
B) நம்மாழ்வார்
C) திருமங்கை ஆழ்வார்
D) குலசேகர ஆழ்வார்
135. பத்திரகிரியாரின் ஆசிரியர் யார்?
A) பட்டினத்தார்
B) வில்லிபுத்தூரார்
C) காளமேகம்
D) ஒட்டக்கூத்தர்
136. பாட்டுள் அமைந்த வருணனைத் தொடரையே பாட்டுக்குத் தலைப்பாகக் கொண்ட இலக்கியம்
A) அகநானூறு
B) பரிபாடல்
C) பதிற்றுப்பத்து
D) நற்றிணை
137. அன்பு கொண்ட பெண்பாற் புலவர் யார்?
A) ஔவையார்
B) வெண்ணிக்குயத்தியார்
C) காவற்பெண்டு
D) நக்கண்ணையார்
138. நக்கீரர் பாடிய பத்துப்பாட்டு நூல் எது?
A) மதுரைக்காஞ்சி
B) நெடுநல்வாடை
C) முல்லைப்பாட்டு
D) சிறுபாணாற்றுப்படை
139. "சிறந்த பேரமர் உண்கண் இவளினும் பிரிக” என வஞ்சினம் கூறிய அரசன் யார்?
A) நலங்கிள்ளி
B) அறிவுடை நம்பி
C) பூதப்பாண்டியன்
D) நல்லுருத்திரன்
140. மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்கள் எத்தனை?
A) இரண்டு
B) மூன்று
C) ஐந்து
D) நான்கு
141 . ''கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்” - இக்குறளில் அமைந்துள்ள அணி எது?
A) உவமை அணி
B). உருவக அணி
C) தன்மை அணி
D) ஏகதேச உருவக அணி
142. ஏறிய மடல் திறம் எத்திணைக்குரியது?
A) கைக்கிளை
B) குறிஞ்சி
C) பெருந்திணை
D) பாலை
143. சேயோன் மேய உலகம் எது?
A) காடு
B) வரை
C) புனல்
D) பெருமணல்
144. "ஊரன், மகிழ்நன் இப்பெயர்கள் எத்திணைக்குரிய கருப்பொருள்கள்?
A) குறிஞ்சி
B) முல்லை
C) மருதம்
D) பாலை
145. இரங்கலுக்குரிய அகத்திணை எது?
A) நெய்தல்
B) பாலை
C) முல்லை
D) குறிஞ்சி
146. ஒலியை ஆராயும் முறையை எத்தனையாக வகுக்கின்றனர்?
A) இரண்டு
B) நான்கு
C ) மூன்று
D) ஐந்து
147. மொழிகளில் காணப்படும் சொற்களின் உள் அமைப்பை.ஆராய்வதை மொழியியலாளர் என்னவென்று குறிப்பர்?
A) உருபனியல்
B) எழுத்தியல்
C) உறுப்பியல்
D) பொருளியல்
148. "கூயி” மொழி எம்மாநிலத்தில் பேசப்படுகின்றது?
A) கேரளம்
B) ஒரிசா
C) மைசூர்
D) பீஹார்
149. மெய்ப்பாட்டிற்குத் தனி இயலை வகுத்தவர் யார்?
A) அமிர்தசாகரர்
B) தொல்காப்பியர்
C) நன்னூலார்
D) தண்டி
150. சங்கம் மருவிய கால நூல் எது?
A) குறுந்தொகை
B) நற்றிணை
C) கலித்தொகை
D) திருக்குறள்
**************** *************** ***********
தேர்வில் வெற்றி உங்களுக்கே !
வாழ்த்தும் ,
பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு ,
தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
***************** ************* ***********
0 Comments