முதுகலை - தமிழாசிரியர் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரிய வினாத்தாள் 2003 - 2004 - வினாக்களும் விடைகளும் - பகுதி - 1 / TRB - PG - TAMIL - 2003 - 2004 - ORIGINAL QUESTION PAPER - QUESTION & ANSWER - PART - 1

 

ஆசிரியர் தேர்வு வாரியம் 

முதுகலைத் தமிழாசிரியர் தேர்வு 

வினாத்தாள் - 2003 - 2004

வினாக்களும் விடைகளும்  - பகுதி - 1

1 முதல் 50 வரை - வினாக்களும் விடைகளும்

PG - TRB - TAMIL 

ORIGINAL QUESTION PAPER  - 2003 - 2004

QUESTION & ANSWER - PART - 1


****************     **************  **********


1. அருணாச்சலக் கவிராயர் இயற்றிய நூல் எது?

A) இராம நாடகக் கீர்த்தனை

B) நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

C) சர்வசமயக் கீர்த்தனை

D) இந்துமத விளக்கம்

2 .நாடகவியல் என்ற நூலை எழுதியவர் யார்?

A) விபுலானந்த அடிகள் 

B) உ..வே.சா.

C) பரிதிமாற் கலைஞர் 

D) சங்கரதாஸ்

3 .தேசபக்தன் இதழை நடத்தியவர் பெயரைக் குறிப்பிடுக.

A) திரு.வி.க.

B) பாரதியார்

C) பாரதிதாசன்

D) பெரியார்

4 . தமிழ்நாடகத் தந்தை என்றழைக்கப்படுபவர் யார்?

A) பம்மல் சம்பந்த முதலியார்

B) சங்கரதாஸ் சுவாமிகள்

C) டி.கே. சண்முகம்

D) பரிதிமாற்கலைஞர்

5 . சிறுகதை மன்னர் என்று போற்றப்படுபவர் யார்?

A) புதுமைப்பித்தன் 

B) ஜெயகாந்தன்

C) வ.வே.சு.ஐயர்

D) கு.ப.ரா.

6 . தமிழில் வெளிவந்த முதல் புதினம் எது?

A) பிரதாப முதலியார் சரித்திரம்

B) கமலாம்பாள் சரித்திரம்

C) பத்மாவதி சரித்திரம்

D) சுகுணசுந்தரி

7 . சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்ற நூலை இயற்றியவர் யார்?

A) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை

B) தேசிக விநாயகம் பிள்ளை

C) இராமலிங்கம் பிள்ளை

D) மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை

8 . தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படுபவர் யார்?

A) திரு.வி.க.

B) உ.வே.சா.

C) மறைமலையடிகள் 

D) ஆறுமுக நாவலர்

9 . மண்ணியல் சிறுதேர் என்ற நூலின் ஆசிரியர் பெயரை எழுதுக.

A) ந.மு.வேங்கடசாமி நாட்டார்

B) பண்டிதமணி கதிரேசன் செட்டியார்

C) மறைமலையடிகள்

D) ஆறுமுக நாவலர்

10. 'அபிதான சிந்தாமணி' என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A) கா. நமசிவாய முதலியார்

B) செங்கல்வராய முதலியார்

C) ஆ. சிங்காரவேலு முதலியார்

D) ந.மு. வேங்கடசாமி நாட்டார்

11. ஒப்பியல் இலக்கியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) கைலாசபதி

B) தமிழண்ணல்

C) முத்துசண்முகம் 

D) அகத்தியலிங்கம்

12. திறனாய்வுக் கொள்கைகள் என்னும் நூலின் ஆசிரியர் பெயரைக் கூறுக.

A ) மு.வ.

B) அ.ச. ஞானசம்பந்தம்

C) தி.சு.நடராசன் 

D) முத்து சண்முகம்

13. தா.ஏ. ஞானமூர்த்தி எழுதிய திறனாய்வு நூல் எது?

A) இலக்கிய மரபு 

B) இலக்கியத் திறனாய்வியல்

C) இலக்கியக் கொள்கைகள் 

D) இலக்கியத் திறன்

14. சதுரகராதியின் ஆசிரியர் யார்?

A) வீரமாமுனிவர் 

B) கால்டுவெல்

C) ஜி.யூ.போப்

D) மறைமலையடிகள்

15. கிறித்துவக் கம்பர் என்று போற்றப்படுவர் யார்?

A) வீரமாமுனிவர் 

B) ஜி.யூ.போப்

C) எச்.ஏ. கிருஷ்ணப்பிள்ளை

D) கால்டுவெல்

16. இயேசு காவியம் என்னும் நூலின் ஆசிரியரைக் கூறுக.

A) கண்ணதாசன் 

B) வைரமுத்து

C) வாலி

D) தமிழன்பன்

17. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை முதலில் ஆராய்ந்தவர் யார்?

A) ஜி.யூ.போப்

B) கால்டுவெல்

C) எமனோ பரோ 

D) வீரமாமுனிவர்

18. பிசி என்பது எதனைக் குறிக்கும்?

A) விடுகதை

B) பழமொழி

C) அங்கதம்

D) பழமரபுக்கதை


19. பள்ளியெழுச்சி என்பது யாது?

A) கண்படை நிலை 

B) துயிலெடை நிலை

C) வாயில் நேர்தல் 

D) வாயுறை வாழ்த்து

20. குட்டித் தொல்காப்பியம் என்றழைக்கப்படும் நூல் எது?

A) தண்டியலங்காரம் 

B) இலக்கண விளக்கம்

C) வீரசோழியம்

D) நேமிநாதம்

21 அறிவியல் சிறுகதைகளுக்கு வித்திட்டவர் பெயரைக்  குறிப்பிடுக.

A ) கு.ப.ரா 

B) அரசு மணிமேகலை

C ) சுஜாதா

D) சமுத்திரம்

22. சாகித்திய அகாதமி பரிசு பெற்ற பாரதிதாசனின் நூல் எது?

A) புரட்சிக்கவி

B) அழகின் சிரிப்பு

C) குடும்ப விளக்கு 

D) பிசிராந்தையார்

23. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்?

A) பெருஞ்சித்திரனார் 

B) மறைமலையடிகள்

C) ஆறுமுக நாவலர் 

D) திரு.வி.க.

24. 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது' என்று.தொடங்கும் பாடலை இயற்றியவரைக் குறிப்பிடுக.

A) பாரதியார்

B) பாரதிதாசன்

C) நாமக்கல் கவிஞர்

D) கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை

25. சிறைக் கோட்டத்தை அறக் கோட்டமாக்கியவர் யார்?

A) திலகவதியார்

B) மணிமேகலை

C) கண்ணகி

D) காரைக்கால் அம்மையார்

26. ஞானரதம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?

A) விந்தன்

B ) மு.வ.

C) பாரதியார்

D) கல்கி

27. விபுலானந்த அடிகள் எழுதிய நூல் எது?

A) நாடக நூல்

B) யாழ் நூல்

C) மதுரைக் கலம்பகம்

D) சிற்ப நூல்

28. இளைஞர் இலக்கியம் இயற்றியவரைக் குறிப்பிடுக.

A) பாரதியார்

B) அகிலன்

C) பாரதிதாசன்

D) நாமக்கல் கவிஞர்

29. கல்கியின் வரலாற்றுப் புதினங்களில் பல்லவர்கள் பற்றியது எது?

A) அலையோசை

B) மகுடபதி

C) சிவகாமியின் சபதம் 

D) பொன்னியின் செல்வன்

30. பெண்ணின் பெருமை என்ற நூலை எழுதியவர் யார்?

A) அகிலன்

B ) மு.வ.

C) 'திரு.வி.க.

D) காந்தியடிகள்

31 சுதமதி என்ற பாத்திரம் இடம் பெற்ற காப்பியம் எது?

A) சீவகசிந்தாமணி

B) சிலப்பதிகாரம்

C) மணிமேகலை

D) பெருங்கதை

32. அற்புதத் திருவந்தாதியின் ஆசிரியர் பெயரைக் கூறுக.

A) சேக்கிழார்

B) சேரமான் பெருமாள் நாயனார்

C) காரைக்கால் அம்மையார்

D) மாணிக்கவாசகர்

33. கலம்பக உறுப்புகள் எத்தனை?

A) 18

B) 12

C) 8

D) 10

34. 'ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப' -  தொல்காப்பிய வரிக்கு விளக்கமாக விளங்குவது எது?

A ) சீவகசிந்தாமணி

B) உலா

C) கலம்பகம்

D) பரணி,

35. ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல் யாது?

A) கலிங்கத்துப்பரணி

B) தக்கயாகப்பரணி

C) மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

D) நந்திக் கலம்பகம்

36. ' பெருந்தேவனார் இயற்றிய நூல் எது?

A) இராமகதை

B) பாரதம்

C) இன்னா நாற்பது 

D) இனியவை நாற்பது

37. ஊடலும் ஊடல் நிமித்தமும் எத்திணைக்கு உரிப்பொருள்?

A) முல்லைத்திணை 

B) மருதத்திணை

C) நெய்தல் திணை 

D) பாலைத் திணை

38. இரு பெரு வேந்தரும் படைகளும் எதிரெதிரே நின்று போரிடுதல் எத்திணை ?

A) வெட்சித்திணை 

B) வஞ்சித்திணை

C) உழிஞைத் திணை

D) தும்பைத் திணை

39. நெய்தல் திணைக்குரிய சிறுபொழுது யாது?

A) மாலை

B) விடியல்

C) யாமம்

D) எற்பாடு

40. “யாண்டு பலவாயினும் நரையின்றி” இருந்தவர் யார்?

A) பிசிராந்தையார்

B) கோவூர்கிழார்

C) பெருஞ்சித்திரனார்

D) பொத்தியார்

41. அற நூல்களுள் ஒன்றினைக் குறிப்பிடுக.

A) கார் நாற்பது 

B) ஆசாரக்கோவை

C) களவழி நாற்பது

D ) ஐந்திணை ஐம்பது

42 திருநானைப் போவார் என்பவர் யார்?

A) நந்தனார்

B) மாணிக்கவாசகர்

C) திருநாவுக்கரசர்

D) கண்ணப்ப நாயனார்

43. 'ஈடு' என்பது யாது?

A) சிற்றிலக்கியம்

B) யாப்பு

C) பாட்டு வகை

D) நாலாயிர திவ்வியப் பிரபந்த உரை

44. 'தாண்டக வேந்தர்' என்றழைக்கப்படுபவர் யார்?

A) அப்பர்

B) சுந்தரர்

C) சம்பந்தர்

D) மாணிக்கவாசகர்

45. விருத்தப்பாவில் அமைந்த முதல் காப்பியம் எது?

A) பெரியபுராணம்

B) சீவக சிந்தாமணி

C) கம்பராமாயணம்

D) வில்லிபாரதம்

46. பத்துப்பாட்டில் அகத்திணை ஒழுக்கம் பற்றிய நூல்களுள் ஒன்று

A) நெடுநல்வாடை 

B) பட்டினப்பாலை

C) மதுரைக்காஞ்சி 

D) கூத்தராற்றுப்படை

47. குறுந்தொகையின் அடியளவு யாது?

A) 9-13

B) 4-8

C) 13-31

D) 6-10

48. பதிற்றுப்பத்தில் கிடைக்காத இரு பத்துகள் எவை?

A) 1, 3

B) 3, 7

C) 9, 10

D) 1, 10

49. பூம்புகார் பற்றிய செய்திகளைச் சிறப்பாகக் கூறும் சங்க  நூல் எது?

A) பதிற்றுப்பத்து 

B) கூத்தராற்றுப்படை

C) திருமுருகாற்றுப்படை 

D) பட்டினப்பாலை

50. வையையைச் சிறப்பித்துக் கூறும் நூல் யாது?

A) குறிஞ்சிப்பாட்டு 

B) பரிபாடல்

C) குறுந்தொகை 

D) நெடுநல்வாடை

**************   **********    *****************


தேர்வில் வெற்றி உங்களுக்கே !

வாழ்த்தும் ,

பைந்தமிழ்.மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

*****************   *************   **********


Post a Comment

0 Comments