ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - வினாடி வினா - 1 , வினா & விடை / 9th TAMIL - QUIZ - 1 , QUESTIN & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

வினாடி வினா - 1

வினாக்களும் விடைகளும்

**************   *************    ************

பத்தியைப் படித்து விடையளிக்க.

          உலகின் பழமையான கைவினைக் கலைகளுள் ஒன்று மண்பாண்டக்கலை. சிந்து சமவெளி அகழாய்வில் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. பானை செய்தலை பானைவனைதல் என்று சொல்வது மரபு.

1) உரைப்பகுதி கூறும் உலகின் பழமையான கைவினைக் கலை எது?

அ) பேச்சுக்கலை

ஆ) சிற்பக்கலை

இ) மண்பாண்டக்கலை

ஈ) நாட்டியக்கலை

விடை : இ ) மண்பாண்டக்கலை 


2) பானை செய்தலை ------ என்று சொல்வது மரபு 

அ) பானை வனைதல்

ஆ) பானை வேய்தல்

இ) பானை முடைதல்

ஈ) பானை உருவாக்குதல்

விடை : அ ) பனை வனைதல்

3) கீழ் உள்ளவற்றில் களிமண்ணால்
செய்யப்படும் இசைக்கருவி எது?

அ) மத்தளம்

ஆ) நாதஸ்வரம்

இ) வீணை

ஈ ) கடம்

விடை : ஈ ) கடம்

4) மண்பானையில் வைத்த தண்ணீர் ------
ஆக இருக்கும்.

அ) குளிர்ச்சியாக

ஆ) வெப்பமாக

இ ) இளஞ்சூடாக

ஈ) கலங்கலாக

விடை : அ ) குளிர்ச்சியாக

5) முச்சங்கங் கூட்டி 
    முது புலவர் தமைக் கூட்டி

 - இவ்வடிகளில் வந்துள்ள தொடை நயம்

அ ) மோனை

ஆ) எதுகை

இ) இயைபு

ஈ) முரண்

விடை : அ ) மோனை 

6) பாடலின் ஒவ்வோர் அடியிலும் இறுதி
எழுத்தோ , சீரோ ஒன்றி வருவது -----

அ) மோனை

ஆ) எதுகை

இ) இயைபு

ஈ) முரண்

விடை : இ ) இயைபு 

7) " அற்புதங்களெல்லாம் அமைந்த
பெருமாட்டி " - இதில் கவிஞர் கண்ணதாசன் பெருமாட்டி என யாரைக் குறிப்பிடுகிறார்?

அ) அம்மாவை

ஆ) பாட்டியை

இ) தலைவியை

ஈ) தமிழ் மொழியை

விடை : ஈ ),தமிழ் மொழியை

8) கவிஞர் கண்ணதாசன் பாடலில் ' அற்புதம் ' என்ற சொல் குறிக்கும் பொருள் யாது?
|
அ) புதுமை

ஆ) பழமை

இ) அருமை

ஈ) பெருமை

விடை : அ ) புதுமை 

9 ) " தூய காற்றும் -------- ம் சுண்டப்
பசித்த பின் உணவும் " என்கிறார்
கவிமணி

அ ) இளநீர்

ஆ) பதநீர்

இ) வெந்நீர்

 ஈ) நன்னீர்

விடை : ஈ ) நன்னீர் 

10 ) அகராதியின் உதவியுடன் பொருள்
காண்க . வையம் ------

அ) வானம்

ஆ) உலகம்

இ) நாடகம்

ஈ) நாடு

விடை : ஆ ) உலகம்

11 ) அகராதியின் மற்றொரு பெயர் ------

அ ) கலைச்சொல்

ஆ) கலைக்களஞ்சியம்

இ) அகரமுதலி

ஈ ) என்சைக்ளோ பீடியா

விடை : இ ) அகரமுதலி 

12) அகராதிகள் தோன்றுவதற்கு முன் தமிழ்ச் சொற்களின் பொருள்களை
அறிந்து கொள்வதற்குப் பயன்பட்டவை

அ) ஓலைச்சுவடிகள்

ஆ) நிகண்டுகள்

இ) இலக்கணநூல்கள்

ஈ) கலைக்களஞ்சியம்

விடை : ஆ ) நிகண்டுகள்

13 ) சதுரகராதியை எழுதியவர் -----

அ) திருவள்ளுவர்

ஆ) பாரதியார்

இ) வீரமாமுனியவர்

ஈ) மறைமலையடிகள்

விடை : இ) வீரமாமுனிவர் 

14 )  ' குரவை ஆடினர்' - இதில் குரவை
என்பதன் பொருள்

அ) கடல்

ஆ) மீன்

இ) ஒலி

ஈ) கூத்து

விடை : ஈ ) கூத்து 

15 ) ' சதுரகராதி' எழுதப்பட்ட ஆண்டு ------

அ) 1632

ஆ) 1722

இ ) 1732

ஈ) 1832

விடை : இ ) 1732

16) ' குரவைக்குச் சென்றான்' - இதில்
குரவை என்பதன் பொருள் ----

அ) கடல்

ஆ) ஒலி

இ) மீன்

ஈ) மக்கள்

விடை : அ ) கடல்

17 ) அகராதியில் பொருள் காண்க.

 அடிசில் என்பதன் பொருள் -----

அ) அடித்தல்

ஆ) உணவு

இ ) திருவடி

ஈ) காற்று

விடை : ஆ ) உணவு

18) அஞ்ஞானம் என்பதன் பொருள்

அ) விஞ்ஞானம்

ஆ) அறியாமை

இ ) அகல்விளக்கு

ஈ) அறிவு

விடை : ஆ ) அறியாமை

19 ) ' எஞ்ஞான்றும் 'என்பதன் பொருள் ----

அ) எப்போதும்

ஆ) அப்போதும்

இ) எடுத்துக்காட்டு

ஈ) இசைத்தல்

விடை : அ ) எப்போதும்

20 ) நண்ணலர் என்பதன் பொருள் -----

அ) நண்பர்

ஆ) நல்லவர்

இ) பகைவர்

ஈ) பண்பாளர்

விடை : இ ) பகைவர்

*****************    ********    ***************

வாழ்த்துகள்

' பைந்தமிழ் ' மு.மகேந்திர பாபு , 

தமிழாசிரியர் , மதுரை - 97861 41410

****************   ***********   ***************

Post a Comment

0 Comments