பத்தாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - இயங்கலைத்தேர்வு - பகுதி - 1 , வினா & விடை / 10th TAMIL - ONLKNE TEST - PART - 1,QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

இயங்கலைத் தேர்வு - 1 

வினாக்களும் விடைகளும் 

***************    ************   ************

1) உலகில் மகிழ்ச்சி உடையவர் யார்?

அ) உடலின் உறுதி கொண்டவர்

ஆ) பணம் உடையவர்

இ) சொந்த வீடு உடையவர்

ஈ) அதிகம் படித்தவர்

விடை : அ ) உடலின் உறுதி கொண்டவர்

2 )  தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுவது ------

அ) மாடு மேய்த்தல்

ஆ) மீன் பிடித்தல்

இ ) ஏறுதழுவுதல்

ஈ) சேவல் சண்டை

விடை :  இ ) ஏறுதழுவுதல் 

3) -------   கொம்பினால் வளையம் செய்து
காளையின் கழுத்தில் அணிவிக்கும்
வழக்கம் தற்போதும் உள்ளது.

அ) வேப்பங்கொம்பு

ஆ) புளியங்கொம்பு

இ) ஆலங்கொம்பு

ஈ) வேலிக்கொம்பு

விடை : ஆ ) புளியங்கொம்பு 

4) அக்காலத்தில் மாட்டைத் தழுவும்
வீரருக்குச் சொந்தமாவது -----

அ) தங்க நாணயம்

ஆ) வெள்ளி நாணயம்

இ) மாட்டு வண்டி

ஈ) சல்லி நாணயம்

விடை :  ஈ ) சல்லிநாணயம்

5) ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ள ஒருவர் மற்றவரிடம் வினவுவது

அ) வினா

ஆ) விடை

இ) விவாதம்

ஈ) சொற்போர்

விடை : அ ) வினா

6) கீழ்க்காண்பவற்றுள் வினா எழுத்து
அல்லாதது எது ?

அ) எ

ஆ) யா

இ ) ஏ

ஈ ) உ

விடை : ஈ ) உ 

7) அம்பேத்கர் லண்டனில் சட்டப்படிப்பு
படித்தார். இதற்கான வினாக்களை எவ்வாறு அமைக்கலாம்?

அ) அம்பேத்கர் எங்கு சட்டப்படிப்பு படித்தார்?

ஆ) லண்டனில் சட்டப்படிப்பு படித்தவர் யார் ?

இ) அம்பேத்கர் லண்டனில் படித்த படிப்பின் பெயர் என்ன ?

ஈ) மேலே உள்ள மூன்று வினாக்களும் சரி.

விடை : ஈ ) மேலே உள்ள மூன்று வினாக்களும் சரி.

8) புணர்ச்சி  ------   வகைப்படும்.

அ) இரண்டு

ஆ) மூன்று

இ) நான்கு

ஈ) ஐந்து

விடை :  அ) இரண்டு 

9 ) விகாரப் புணர்ச்சி தோன்றல் , திரிதல்
மற்றும் ----- என மூன்று வகைப்படும்.

அ) பிரிதல்

ஆ) விடுதல்

இ) கெடுதல்

ஈ) சேர்தல்

விடை : இ ) கெடுதல் 

10 ) நிலைமொழியும் வருமொழியும்
இணையும்போது புதிதாக ஓர் எழுத்துத்
தோன்றுவது ----- விகாரம்

அ) தோன்றல்

ஆ) திரிதல்

ஈ) கெடுதல்

ஈ) எதுவுமில்லை

விடை : அ ) தோன்றல்

11) உள் + புறம் - எவ்வாறு புணரும்?

அ) உள்புறம்

ஆ) உட்புறம்

இ) உப்புறம்

ஈ) உபுறம்

விடை : ஆ ) உட்புறம் 

12 ) சிற்பம் + கலை = ------

அ) சிற்பகலை

ஆ) சிற்பம்கலை

இ) சிற்பக்கலை

ஈ) சிற்கலை

விடை : இ ) சிற்பக்கலை 

13 ) ஒரு கருத்தைச் சுருக்கமாகவும் ,
தெளிவாகவும் , சுவையாகவும் விளக்குபவை

அ) விடுகதைகள்

ஆ) புதிர்கள்

இ) பழமொழிகள்

ஈ) புதுமொழிகள்

விடை : இ ) பழமொழிகள்

14 ) " மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே"  - இதில்  ' மண்குதிரை '  என்ற சொல்லின் பொருள்

அ) மண்ணால் செய்யப்பட்ட குதிரை

ஆ) மண்மேடு

இ) மட்பாண்டம்

ஈ) மலை

விடை : ஆ ) மண் மேடு

15 ) சொல் அல்லது சொற்றொடர் அதன்
நேர்ப்பொருளை உணர்த்தாமல் குறிப்புப்
பொருளை உணர்த்துவது ---- தொடர் ஆகும்.

அ) வினாத்தொடர்

ஆ) செய்தித்தொடர்

இ) மரபுத்தொடர்

ஈ) உணர்ச்சித்தொடர்

விடை : இ ) மரபுத்தொடர் 

16 ) ஒரு கை தட்டினால்  ------  வராது.

அ) ஒலி

ஆ) ஓசை

இ )  வாகனம்

ஈ) ஆசை

விடை : ஆ ) ஓசை 

17 ) உண்டி கொடுத்தோர் ---கொடுத்தோர். 

அ) உறவு

ஆ) ஊக்கம்

இ) உயிர்

ஈ) உடை

விடை : இ ) உயிர் 

18) " யாதும் ஊரே யாவரும் கேளிர் " - இதில் கேளிர் என்ற சொல்லின் பொருள் ----

அ) கேட்பவர்

ஆ) கேட்காதவர்

இ) பகைவர்

ஈ) உறவினர்

விடை : ஈ ) உறவினர்

19 ) வீட்டின் அருகே புதிதாகக் கூரை -------

அ) வேய்ந்தனர்

ஆ) மேய்ந்தனர்

இ) போட்டனர்

ஈ) செய்தனர்

விடை : அ ) வேய்ந்தனர்

20) ------  சென்ற இடமெல்லாம் சிறப்பு.


அ) பெற்றோருக்கு

ஆ) மற்றோருக்கு

இ) கற்றோருக்கு

ஈ  ) மன்னர்க்கு 


விடை : இ ) கற்றோருக்கு 

Post a Comment

1 Comments