பத்தாம் வகுப்பு - தமிழ்
முன்னுரிமைப் பாடம் - உரைநடை
1. தமிழ்ச்சொல் வளம் - வினாடி வினா
இயங்கலைத்தேர்வு
வினாக்களும் விடைகளும்
************* ************** *************
வினா உருவாக்கம் -
' பைந்தமிழ்' மு.மகேந்திர பாபு,
தமிழாசிரியர் , மதுரை -
97861 41410
தினமும் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆன்லைன் சான்றிதழ்த் தேர்வை எழுத உங்களுக்கு விருப்பமா ? உங்களது வாட்சாப் எண்ணிற்கு வினா இணைப்பு வர வேண்டுமா ? உங்கள் பெயர் , படிப்பு இவற்றை 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்புங்கள். தினமும் தேர்வை எழுதி அரசுப்பணிக்கு ஆயத்தமாகுங்கள். வாழ்த்துகள்.***************** ************* ************
1) ' மொழி ஞாயிறு' என்று அழைக்கப்படுபவர் ------
அ) தேவநேயப் பாவாணர்
ஆ) மறைமலை அடிகள்
இ) ம.பொ.சிவஞானம்
ஈ) மு.வரதராசனார்
விடை : அ ) தேவநேயப்பாவாணர்
2) ' தமிழ்ச்சொல் வளம் ' என்னும் கட்டுரை உள்ள நூலின் பெயர்
அ ) சங்ககால ஆய்வுக்கட்டுரைகள்
ஆ) மொழி ஆய்வுக்கட்டுரைகள்
இ) சொல்லாய்வுக் கட்டுரைகள்
ஈ) தமிழ் ஆய்வுக்கட்டுரைகள்
விடை : இ ) சொல்லாய்வுக் கட்டுரைகள்
3) உலகத்திலேயே ஒருமொழிக்காக உலக மாநாடு நடத்திய நாடு ------
அ) சிங்கப்பூர்
ஆ) மலேசியா
இ) இலங்கை
ஈ) இந்தியா
விடை : ஆ ) மலேசியா
4) "திருவள்ளுவர் தவச்சாலையை "அமைத்தவர் -----
அ) முத்துக்குமரனார்
ஆ) பெருஞ்சித்திரனார்
இ) இளங்குமரனார்
ஈ) இலக்குவனார்
விடை : இ ) இளங்குமரனார்
5) ' நாடும் மொழியும் நமதிரு கண்கள் ' என்று பாடியவர்
அ) பாரதியார்
ஆ) ஔவையார்
இ) பாரதிதாசன்
ஈ) கவிமணி
விடை : அ ) பாரதியார்
6) காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். - இத்தொடரில் வண்ணமிட்ட பகுதி
குறிப்பிடுவது -----
அ) இலையும் சருகும்
ஆ) தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும்
ஈ) சருகும் சண்டும்
விடை : ஈ ) சருகும் சண்டும்
7) வேர்க்கடலை , மிளகாய்விதை
மாங்கொட்டை ஆகியவற்றைக்
குறிக்கும் பயிர்வகை -----
அ) குலைவகை
ஆ) மணிவகை
இ) கொழுந்து வகை
ஈ) இலை வகை
விடை : ஆ ) மணிவகை
8) " திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் " என்னும் நூலை எழுதியவர்
அ) ஜி.யு.போப்
ஆ)வீரமாமுனிவர்
இ) கால்டுவெல்
ஈ) உ.வே.சா.
விடை : இ ) கால்டுவெல்
9) நெல் , கேழ்வரகு முதலியவற்றின் அடிப்பகுதி எவ்வாறு அழைக்கப் படுகிறது?
அ) தாள்
ஆ) தண்டு
இ ) கோல்
ஈ) தூறு
விடை : அ ) தாள்
10) மூங்கிலின் அடிப்பகுதி ------ என அழைக்கப்படுகிறது.
அ) தட்டு
ஆ) கழி
இ) கழை
ஈ) அடி
விடை : இ ) கழை
11 ) அடிமரத்தினின்று பிரியும் மாபெரும் கிளை ------
அ) சினை
ஆ) கவை
இ) கொப்பு
ஈ) போத்து
விடை : ஆ ) கவை
12) தென்னை, பனை முதலியவற்றின் இலை ------
அ) தோகை
ஆ) தோகை
இ) சருகு
ஈ) ஓலை
விடை : ஈ ) ஓலை
13) கொழுந்தாடை என எதன் நுனிப்பகுதி
அழைக்கப்படுகிறது ?
அ) சோளம்
ஆ) தென்னை
இ ) பனை
ஈ) கரும்பு
விடை : ஈ ) கரும்பு
14) மாம்பிஞ்சைக் குறிக்கும் சொல் -----
அ) வடு
ஆ) கவ்வை
இ) குரும்பை
ஈ) கச்சல்
விடை : அ ) வடு
15) இளங்குமரனார் யாரைப்போல இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டார் ?
அ) பாவாணார்
ஆ) திரு.வி.க.
ஆ) வ.உ.சி.
ஈ) நாமக்கல் கவிஞர்
விடை : ஆ ) திரு.வி.க .
16) இளங்குமரனார் ------
தவச்சாலையை அமைத்தார்.
அ) இளங்கோவடிகள்
ஆ) ஓவையார்
இ) திருவள்ளுவர்
ஈ) பாரதியார்
விடை : இ ) திருவள்ளுவர்
17) தேரை அமர்ந்ததினால் கெட்ட
தேங்காய் ------
அ) அல்லிக்காய்
ஆ) ஒல்லிக்காய்
இ) தேரைக்காய்
ஈ) கூகைக்காய்
விடை : அ) அல்லிக்காய்
18) பைங்கூழ் என்று எதன் பசும்பயிர் அழைக்கப்படுகிறது?
அ) நெல்
ஆ) பனை
இ) தென்னை
ஈ) மா
விடை : அ ) நெல்
19) சம்பா நெல்லில் உள்ள உள்வகைகள்
அ ) இருபது
ஆ) நாற்பது
இ) அறுபது
ஈ) எண்பது
விடை : இ ) அறுபது
20 ) திருந்திய மக்களை மற்ற
உயிரினங்களிலிருந்து பிரித்துக்
காட்டுவது -----
அ) மொழி
ஆ) நாடு
இ) மதம்
ஈ) பழக்க வழக்கம்
விடை : அ ) மொழி
4 Comments
Hi
ReplyDeleteDharshini
ReplyDeleteUseful but 1 ques i hav doubt
ReplyDeleteS Sathish
ReplyDelete