தியாக தீபம் திருப்பூர் குமரன் - பிறந்த நாள் கவிதை ( 04 - 10 - 2021 ) - TIRUPPUR KUMARAN BIRTH DAY KAVITHAI

 
            தியாக தீபம் திருப்பூர் குமரன்

            பிறந்த நாள் ( 04 - 10 - 2021 ) 

                  சிறப்புக் கவிதை 

குமரக் கடவுள் உறையும்

      சென்னிமலை

குமரனை    ஈன்ற

     சின்ன மலை


திருப்பூர்  செய்த 

         தவப்   பயனாம் 

பொறுப்போடு நடந்தது

        கொடியேந்தி !


பள்ளிப்   படிப்போ

நிறையவில்லைசுதந்திர

உள்ளத்  துடிப்போ

    குறையவில்லை


அண்ணல்  வழியில்

    நடந்திட்டார் !

மண்ணில்  புகழாய்

   நிலைத்திட்டார் !


விடுதலை வேள்வியில்

   இணைந்திட்டார் !

கெடுதலை எதிர்த்துப்

    போரிட்டார் !


அறப்போர் தன்னை

    அணிந்திட்டார் !

துறக்கம் சென்று

  புகழ் பெற்றார் !


ரத்தம்  சிந்திய

   நேரத்திலும்  

சித்தம்  கொடியில்

    வைத்திட்டார் !


அடிமேல் அடியாய்

    விழுந்தாலும்

கொடியைக்  கீழே

   விடவில்லை !


இன்னுயிர் நீங்கும்

  நேரத்திலும்

தன்னுர்    ஈந்து

   கொடிகாத்தார் !


கொடியைக்   காத்து

   புகழ் பெற்றார்

கொடிகாத்த குமரனென

   அமரத்துவம் பெற்றார் !


அவர்தம் புகழைப் போற்றுவோம் !

நெஞ்சில் தியாக தீபம் ஏற்றுவோம் ! 


****************   ***********  ***************

கவிஞர் - மீனாட்சி , 

பட்டதாரி தமிழாசிரியர் , ஏனாத்தூர் , காஞ்சிபுரம்.

****************    **********   ****************

Post a Comment

0 Comments