உலக ரேபிஸ் தினம் - சிறப்புக் கட்டுரை / WORLD RABIES DAY - 28 - 09 - 2021

 

             உலக   ரேபிஸ்  தினம்

           (  WORLD  RABIES  DAY  )

                        28  • 9  • 2021

                மனித  கண்களுக்குப்   புலப்படாத  தீநுண்மிகள்   பல  உலகையே   அச்சத்தில்    ஆழ்த்திய    கொடிய   நோய்கள்  பலவற்றை  தந்து   காலந்தோறும்   மனித  குலத்தை  கலங்கடித்து   அல்லல்  படுத்திக் கொண்டிருக்கின்றது. 

           அந்த   வகையில்   மனித  இனத்தை   அழிக்க   வந்த கொடிய குணம்  கொண்ட  தீநுண்மி    என்னும்    ரேபிஸ்   வைரஸ்  ( RABIES   VIRUS ).  பாதிப்பு  அல்லது     வெறிநாய்க்கடி  என்பதாகும்.

        முதன்   முதலில்     1885 --  ஆம்   ஆண்டு   வெறிநாய்க்கடிக்கான   மருந்தை     அறிவியலார்  "லூயி  பாஸ்டியர் " கண்டுப்பிடித்தார் .   அவரின்    நினைவு     தினமான  செப்டெம்பர்  28 - ஆம்  நாளை     சர்வதேச   வெறிநாய்க்  கடித்தடுப்பு   தினமாக   அனுசரிக்கப்படுகிறது.

                     லூயி   பாஸ்டியர்   அவர்களை   கெளரவிக்கும்   விதமாக   2007  - ஆம்   ஆண்டு  முதல்  ஒவ்வொரு   ஆண்டும்  செப்டம்பர் 28 ஆம் தேதி உலக   வெறிநாய்க் கடித்தடுப்பு  தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

வெறிநாய்க்கடி  அல்லது  அல்லது  ரேபிஸ்  என்பது  உலக  அளவில்  ஆசியாவிலும் , ஆசிய  அளவில்  இந்தியாவிலும்தான்  உயிரிழப்போர்  அதிகம் என  ஆய்வுகள்  கூறுகின்றன. 

 ரேபிஸ்:

           ரேபிஸ்  என்பது "  ரேப்டோ "  என்னும்  வைரஸ்  குடும்பத்தைச்  சேர்ந்த   ஒரு  வைரஸ்  நோய்  ஆகும் .  இந்த  ரேபிஸ்  தாக்கினால்   மரணம்   நிச்சயம்  .  இது  மனிதர் மற்றும்  விலங்குகளில்    இறப்பை  ஏற்படுத்தக்கூடிய   தீவிரமான   நோய்க் காரணிகளுள்   ஒன்றாகும். இவை  வெப்ப ரத்த பிராணிகளில்   ஏற்படுத்தும்   மூளை  அலர்ஜி  நோயே   ரேபிஸ்  ஆகும்.  இது  பாதிக்கப்பட்ட  நாய்  மற்றும்  விலங்குகளின்  கடியால்   பரவும்   ஒரு  தொற்றுநோய்  ஆகும்.

நோய்  பரவும்  விதம்  :

    இந்நோயானது  நாய்கள்  மட்டுமல்லாது    காட்டு  விலங்கான   வெளவால்  , ஓநாய்  , நரி  மற்றும்   வீட்டு  விலங்கான   பூனை  , நாய்  போன்றவறின்   உமிழ்நீரில்  இருந்து  வெளியேறி   பரவுகின்றன. ரேபிஸ்   நோயுள்ள   நாயின்    உமிழ்நீரில்    ரேபிஸ்   வைரஸ்கள்   வாழும் .  இந்த   விலங்குகள்   மனிதனைக் கடிக்கும்   போது   ஏற்படும்   காயத்தின்   வழியாக   வைரஸ்  உடலுக்குள்   சென்று     அங்குள்ள   தசை  இழைகளில்    பன்மடங்காகப்  பெருகும். பிறகு   நரம்புகள்  வழியாகவும் ,  தண்டுவடத்தின்   வழியாகவும்   மூளையை  அடைந்து   ,   மூளைத் திசுக்களை  அழித்துச்    செயல்திறனை   பாதித்து   ரேபிஸ்   நோயை   உண்டாக்குகின்றன. 

           இதுதவிர   சிறிய  அளவில்   வெறிநாய்   பிராண்டினாலும்,  திறந்த   உடல்  காயங்களில்   நாவினால்   தீண்டினாலும்,   அதன்  உமிழ்நீர்   பட்டாலும்   நோய்  பரவுகிறது. பாதிக்கப்பட்ட  விலங்குகள்  கடிப்பதால்,   நேரடியாகவோ  அல்லது   அந்த   விலங்கினால்   கடிபட்ட   மற்றோர்   விலங்கு  கடிப்பதாலோ  இந்நோய்   ஏற்படுகிறது. காலில்   கடித்தால்   பாதிப்புகள்   வெளியில்   தெரிய  அதிக  நாட்களாகும். கையிலோ  , முகத்திலோ   கடிபட்டால்  உடனடியாக  அறிகுறிகள்   காணப்படுகின்றன. 

        வீட்டில்   பாதுகாப்பாக   வளர்க்கப்   படும்   வீட்டு  விலங்கான  நாய்களிடம்   இருந்தே   இந்த   நோய்  அதிகமாக   பரவுகின்றன. இவை  மனித  உடலில்   புகுந்து   ஐந்து   ஆண்டுகள்  வரை  அமைதியாக  இருந்து   விட்டுக் கூட   பின்பு  தாக்கும்   அபாயத்தைக்    கொண்டது .

நோய்  தடுப்பு  முறைகள்  :

         ரேபிஸ்   வைரஸால்    தாக்கப்பட்டு   பாதிக்கப்பட்டதாகக்   கருதப் படும்    விலங்குகள்    கடித்து   விட்டால்  உடனடியாக நோய்த்  தடுப்பூசிகள்   மற்றும்   மருத்துவ   நடவடிக்கைகளைத்      தொடங்க   வேண்டும். முதலிலேயே    சரியான    தடுப்பு   மருந்து   ( anti  rabies  vaccine  -- ARV )  பயன்படுத்துவதன்   மூலம்    வீட்டு   விலங்குகளைப்   இந்நோய்   தாக்காமல்   பாதுகாத்துக்  கொள்ளலாம். 

நோயின்   அறிகுறிகள்  :

            இந்நோய்த்   தொற்று   ஏற்படுவதற்கு   முன்    சளி  காய்ச்சல்   போன்ற  அறிகுறிகள்   தென்படுகின்றன. நோய்  வெளியில்   தெரிய    12 - வாரங்கள்  ஆகும். அவற்றில்  சில...

*  தூக்கமின்மை

*  மனக்கலக்கம் 

*   இலேசான  பக்க  வாதம்

*   அமைதியின்மை

*   திகில்

*   சித்த பிரமை

போன்ற  அறிகுறிகளைக்   கண்டு  ரேபிஸ்  பாதிப்பை  ஒரளவு  உணர்ந்து  சிகிச்சை   மேற்கொள்ளப்படுகிறது. 

ரேபிஸ்   தடுப்பூசி :

      நாய்  கடித்தவுடன்   தடுப்பூசி   போடவேண்டும்.  இன்று  நவீன   தடுப்பூசிகள்   பயன்படுத்தப் படுகின்றன.  ஐந்து   தடுப்பூசிகளில்   ரேபிஸை    100 %  குணப்படுத்தலாம். நாய்   கடித்த  அன்றே   தொடங்கி விடவேண்டும்.நாய்   3 - ம்  நாள்,   7 -ம் நாள் ,   14 - வது   நாள்  ,   28  - வது  நாள்    என   ஐந்து   தவணைகளாக    ரேபிஸ்    தடுப்பூசியைப்  போட்டுக் கொள்ள  வேண்டும். காயம்   கடுமையாக   இருந்தால்   6 - வது   ஊசியை   90  - வது   நாளில்    போட்டுக்கொள்ள  வேண்டும். 

      ரேபிஸ்   தடுப்பூசி   போடப்பட்ட   நாயால்    கடிப்பட்டாலும் கூட   ,  கடிப்பட்டவர்கள்  ரேபிஸ்   தடுப்பூசியை  போடத்  தொடங்க   வேண்டும் கடித்த  நாயை   பத்து  நாட்கள்   கண்காணிக்க   வேண்டும்.  நாயின்   குணத்தில்   எவ்வித   மாறுதலும்    இல்லை  எனில்   முதல்  மூன்று    தடுப்பூசிகளுடன்   ( 0 , 3 , 7 ) நிறுத்திக் கொண்ட வேண்டும். நாயிடம்  ரேபிஸ்   அறிகுறி   தெரிந்தால்   மீதமுள்ள   தடுப்பூசிகளையும்  ( 14 , 28 )   போட்டுக் கொள்ள வேண்டும்.

ரேபிஸ்  பாதிக்கப்பட்ட  நாயை  கண்டறிதல்  :

        ரேபிஸால்   பாதிக்கப்பட்ட  நாய்  அங்கும்  , இங்கும்  அலையும்  ,  காரணமின்றி   குறைக்கும்   ,  ஓரிடத்தில்  நிற்காமல்   ஓடிக் கொண்டே   இருக்கும் . காண்பவரை   எல்லாம்   துரத்தி  கடிக்க  வரும் , நாக்கு  வெளியே   தள்ளி க்கொண்டு   இருக்கும். எந்நேரமும்   உமிழ்நீர்   வடிந்துக்  கொண்டே  இருக்கும்.  பொதுவாக   ரேபிஸ்    பாதிக்கப்பட்ட   நாய்  பத்து  நாட்களுக்குள்    இறந்து விடும். 

சில  நாய்கள்  வீட்டில்   அல்லது   தெருவில்   ஏதாவது  ஒரு   மூலையில்    தனிமையாக,   மிகவும்   அமைதியாக    இருக்கும் .   எதுவுமே   சாப்பிடாமல்   இருந்து   பத்து  நாட்களில்   இறந்து விடும்.

ஹைட்ரோ  போபியா: (  தண்ணீரைக் கண்டு  அச்சம்).

ரேபிஸால்    பாதிக்கப்பட்ட  வர்கள்   தண்ணீரைக்  கண்டு  அஞ்சுவர். தண்ணீரைக்   கண்டவுடன்   தொண்டையில்   உள்ள   விழுங்கு தசைகள்    இறுக்கமடைகிறது,  பின்   சுவாசம்   நிற்கின்ற   உணர்வு   ஏற்படுவதாலும்   ,  மூச்சுத் திணறல்   காரணமாகவும்     உயிர்   பிரியும்  நிலையென   எண்ணி   அஞ்சி   தண்ணீர்  குடிக்க  மறுக்கின்றனர்.  இதற்கு  " ஹைட்ரோ  போபியா  "   என்று  பெயர். மேலும்  உடலிலும் ,  முகத்திலும்  வெளிச்சம்  அல்லது  காற்று    பட்டாலும்     உடல்    நடுங்கும்,   அமைதியின்றிக்   காணப்படுவர். மற்றவர்களை   விரட்டுவதும்,    ஓடுவதுமாக   இருப்பார்கள்.   கடைசியில்    வலிப்பு   வந்து   சுவாசம்    நின்று   உயிரிழப்பர் .

விழிப்புணர்வு :

        ரேபிஸ்  நோயால்   15 - வயதிற்குட்பட்ட   குழந்தைகளே   அதிகம்   பாதிக்கப்படு கின்றனர்.  எனவே   குழந்தைகளை   நாய் களிடம்   கையாளும்  முறையை  எச்சரித்தல், நாய் ,  பூனை   போன்ற வற்றுடன்  விளையாட  அனுமதிக்காமை,   தடுப்பூசியின்   அவசியம்  அறிதல்  , வீட்டு  நாய்க்கு  தகுந்த  தடுப்பூசியைப்   போட்டு  பராமரித்தல்  போன்றவற்றைக்  கொண்டு   விழிப்புணர்வை   ஏற்படுத்துதல்.

மில்வாக்கி   புரோட்டக்கால்  :

     ரேபிஸ்  நோயாள்    பாதிக்கப்பட்டவரை   ஒரு  சில   மருந்துகள்    கொடுத்து    கோமா   நிலைக்குக்    கொண்டு  சென்று.  பின்  " அமான்டடின் "  என்னும்   வைரஸ்  எதிர்ப்பு   மருந்தை    நோயாளிக்குக்     கொடுத்து    அதன்  மூலம்  ரேபிஸ்    நோயயை   குணப்படுத்துதல்   ஆகும்   .இம்முறை   வீரியம்   குறைந்த   ரேபிஸ்   வைரஸாக   இருந்தால்  சிகிச்சை  பலன்  தரும்.அல்லது  வைரஸ்   மூளைக்குச்   சென்றடைவதற்கு  முன்  சிகிச்சையை  மேற்கொள்ள   வேண்டும். ரேபிஸ்  நோயாளிகள்  அனைவருக்கும்  இவை  பொருந்தாது.  இது  வரை  7 - ரேபிஸ்  நோயாளிகள்  மட்டுமே   உயிர்  பிழைத்தாக   சொல்கிறது   உலக   வரலாறு.

ஆண்டு தோறும்    ரேபிஸ்    நோயால்    உலகில்  உயிரிழப்போர்   எண்ணிக்கை  60 ,000 - பேர்  என  அறியப்படுகிறது. இந்திய   அளவில்   ஆண்டுதோறும்   20, 000 - பேர்  உயிரிழக்கின்றனர்.  உயிரிழப்பில்  45  %   இந்தியா  போன்ற   தெற்காசிய   நாடுகளில்    நிகழ்வதாக    உலக  சுகாதார  நிறுவனம்   அறிவிக்கிறது.

ரேபிஸ்  நோயை   உலகிலிருந்து    2030 - க்குள்   விரட்டியடிக்க  வேண்டும்   என்ற  குறிக்கோளை   உலக   சுகாதார  நிறுவனம்   முன்வைத்துள்ளது. எனவே  இந்நோயின்    கடுமையைக்   கருதி   நாய்களை   பாதுகாப்பாக  கையாள  வேண்டியது    அவசியம். மேலும்  ரேபிஸ்  நோயால்   பாதிக்கப்படிருதாலும்  தகுந்த  மருத்துவ சிகிச்சையை  மேற்கொள்ள  வேண்டும். ரேபிஸ்  பாதிக்கப்பட்ட   நாயால்   கடிபட்டாலும்  அவற்றிலிருந்து   உயிர் பிழைக்க  தடுப்பூசி  போட்டுக் கொள்ள  வேண்டும்.  மேலும்  பாதிப்பைத்  தடுக்கவும்,  மனிதனையும்,   விலங்குகளையும்   காப்பாற்றவும்  தடுப்பூசி யை   போடவேண்டும் .

இக்கொடிய   நோயிலிருந்து  உலகை   காக்கதடுப்பூசிக்   கொண்டு   தடுப்போம்   ரேபிஸை .!

Post a Comment

0 Comments