புலவர்.புலமைப்பித்தனுக்கு பைந்தமிழின் கவிதாஞ்சலி / புலவர் புலமைப்பித்தன் - POET PULAMAIPPITHTHAN

 



தமிழே   தலைவணங்குகிறோம்!


புலமை  பலவென புத்தொளி  தந்த...பித்தனே 

பள்ளிப் பாளையம்  தனில்  உதித்த...

தமிழாசான்  புலமைப்பித்தனே, தமிழ் பக்தனே.!

"எழு ஞாயிராக  " குறள்  மலரில்"  மலர்ந்து...

நினைத்ததை  முடிக்க  ....

சொர்க்கத்தின்  திறப்பு விழாவுக்கு ...

பூமழை தூவிய  புது வசந்தம்

பாட்டுச்  சாலை தேடிய 

தமிழ்ச்  சோலை...!

சென்னைத்  தெருவெங்கும்  நடைபயின்று...

நான் யார்?  நான்  யார் ?- எனக்கேட்டு

அழகிய   விழிகளில்  

ஆயிரம்  நிலவுகளை  அழைத்த    தமிழ்ச்  சுடரே.!

இதயக் கனியாய்  ஏற்றம்  கண்ட

இனிய   கீதமே...!

இந்தப்  பச்சைக்கிளி  பாடிய   தமிழ்  கானம் ...

நீதிக்குத் தண்டனையாக 

இது  என்ன  சோதனை...!

செவ்வந்தி  பூவில்  உறங்கும்

செந்தமிழ் " கா" வுக்கு  ..

அந்தி  மழை மேகங்கள்  சிந்தும்  கண்ணீரஞ்சலி...!

புலமைப்  புயலே  உமை விடுத்து 

பாட்டுலகம்   என்னவாகும்...!

பாட மறத்ததேன்..!

பைந்தமிழே!  பார்முழுதும்  துயரத்தின்  வேர்..!

இனி  துயரம் துடைப்போர்   யார்...!

தமிழே   தலைவணங்குகிறோம் !

எங்கள் மனக் கோவிலில்

குடியிருப்பாய் என்றும் நீ 

அன்னைத் தமிழாய்  !

விழிகளில் ஈரமுடன் ,


பைந்தமிழ்க்குழு / Greentamil.in


Post a Comment

0 Comments