வலியா ? அவமானமா ? ஒவ்வொருவரின் பள்ளிப் பருவத்திலும் இது நடந்திருக்கும் - பால்யமும் நினைவலைகளும்.

 

                  வலியாஅவமானமா  ?


      அன்று ஆசிரியை நான்காம் வகுப்பிற்கு பாடம் நடத்தி கொண்டு இருந்தார்.மதிய உணவு இடைவேளை மணியோசை கேட்டது.

" வகுப்பு முடிந்தது.நீங்க சாப்பிட்டு வாங்க"என்று ஆசிரியை கூறினார்.

"ஹேய்ய்ய்......"என்று கத்தி கொண்டே மாணவர்கள் ஓடினர்.

"ஏய் தள்ளுடா நான் தட்டு கழுவிக்கிறேன்"என்று ஒரு மாணவன் கூறினான்.

."டேய் நானும் கழுவ தானடா நின்னு இருக்கேன்,பொறுடா அவன் கழுவிட்டு வரட்டும்.வரிசைல சண்டை சத்தம் போடாம இருக்கணும்னு டீச்சர் சொல்லி இருக்காங்கல"என்று மற்றொரு மாணவன் கூறினான்.

"டேய் பேசுனா பெயர் எழுதி டீச்சர் கிட்ட கொடுத்துடுவேன்டா"என்று ஒரு மாணவி கூறினாள்.

" டேய் பேசாம இருடா அப்புறம் டீச்சர்கிட்ட சொல்லிடப்  போகுது"என்று அந்த  மாணவன்  கூறினான்.

.அனைத்து மாணவர்களும் வரிசையில் நின்று உணவை வாங்கினார்.

"சாப்பாட்டச்   சிந்தாம  வாங்கிட்டு  அமைதியா  வரிசையா  உட்காரு. நான்  இப்ப  வந்துடுறேன்" என்று சத்துணவு அமைப்பாளர் கூறினார்.

ஒரு மாணவன் உணவை வாங்கி கொண்டு திரும்பி வரும் பொது கால் இடறி கீழே விழுந்து விட்டான்.சாதம் ஒரு பக்கம் சிதற தட்டு ஒரு பக்கம் பறக்க முட்டை ஒரு பக்கம் உருள அணைத்து மாணவர்களும் அவனைப் பார்த்து சிரித்தனர்.

"ஹேய் அங்க பாருடி விழுந்துட்டான்"என்று ஒரு மாணவி கூறினாள்."டேய் லூசு கண்ணு பொடனிலையா வச்சு இருக்க பார்த்து போக  மாட்டியா"என்று மற்றொரு மாணவன் கூற மற்ற மாணவர்கள் சிரித்தனர்.

ஒரு மாணவி வேகமாக ஓடி ஆசிரியையிடம் "டீச்சர் சரவணன் கீழே விழுந்துட்டான்.சாப்பாடு,முட்டை எல்லாமே கொட்டிப் போச்சு"என்று கூறினாள்.

ஆசிரியை வேகமாகச் சென்று அவனிடம், 

 "பார்த்து கவனமா நடந்து வரக் கூடாதா"என்று கேட்டார்.அதற்கு அவன் "டீச்சர் மெதுவா தான் நடந்து வந்தேன்.கால் இடறி விழுந்துட்டேன்"என்று அழுதான்.

சரி அழாத,ஆர்த்தி கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா.காலுல  மண்  ஒட்டி  இருக்கு" என்றார்.

எல்லாம் சுத்தப்  படுத்திக்  காயம்  எதுவும்  இல்லை  என்று  உறுதி  செய்த  பின்னர்  மறுபடியும்  சாப்பாடு வாங்கிக் கொடுத்தார்.

இருப்பினும் அவன் அழுது கொண்டே இருந்தான்.அருகில் உட்கார்ந்து சாப்பிட்ட சில மாணவர்கள் அவன் விழுந்ததை நினைத்துச் சிரித்து கொண்டே இருந்தனர்.

ஆசிரியை அவனருகில் சென்று "அதான் காயம் ஒன்னும் இல்ல.அப்புறம் ஏன் அழுவுற " என்று கேட்டார்.

."டீச்சர் நான் கீழே விழுந்ததுக்கு அழுகல,விழுந்தத பார்த்து இவுங்க எல்லாரும் சிரிச்சுகிட்டே இருகாங்க.அதான் அழுவுறேன்"என்று கூறினான்.

பிறகு ஆசிரியை மாணவர்களைப் பார்த்து "விழுந்து காயம் ஏற்பட்டு இருந்தா கூட அவன் அழுது இருக்க மாட்டான்.நீங்க சிரிக்கிறது தான் அவன் மனசுல வலியா ஏற்பட்டு  இருக்கு.அது அவமானமா நினச்சு அழுறான்.யாராவது கீழே விழுந்துட்டா ஓடிப் போய்த்  தூக்கி தான் விடணும்.சிரிக்க கூடாது உதவி செய்யலைன்னா கூட  பரவா  இல்ல.இது உங்க வாழ்க்கைக்கும் பொருந்தும் "என்று கூறினார்

." சாரி  டீச்சர்  இனிமேல்  இப்படி  சிரிக்க  மாட்டோம்  என்று   மாணவர்கள்   கூறினர்."சரி சாப்பிடுங்க" என்று  கூறி மாணவர்கள் அருகில் அமர்ந்து கொண்டார்..

ஆக்கம்.

அன்பாசிரியை திருமதி.ஷீலா , தேனி.

************     ***********    **************

         நண்பர்களே ! உங்கள் படைப்பாற்றலை உலகிற்கு வெளிச்சப் படுத்த உள்ளது greentamil.in.  படைப்புகள் கதை , கவிதை , கட்டுரை இவற்றை நீங்கள் 97861 41410 என்ற வாட்சாப் எண்ணிற்கு அனுப்பலாம். சிறந்த படைப்பு வெளியிடப்படும். படைப்பு உங்கள் சொந்தமானதாக இருக்க வேண்டும்.

************     ***********      *************

Post a Comment

0 Comments