பத்தாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 9 ( செய்திகள் மட்டும் )
தலைப்பிற்கேற்பப் பேசுதல்
கற்றல் விளைவு:
பேசுதல் திறனை வளர்த்தல்/பேச்சுப்போட்டியில் பங்கேற்றுப் பேசுதல்
கற்பித்தல் செயல்பாடு :
அறிமுகம்:
பேச்சு என்பது ஒரு கலை. பக்கம் பக்கமாக எழுதி உணர்த்துவதைக் காட்டிலும் எளிய முறையில் கருத்தை எடுத்துரைப்பதே பேச்சு ஆகும்.
விளக்கம்:
நுண்ணிய நூல்பற கற்றவருக்கே அமையத்தக்க அரியதொரு கலையே பேச்சுக்கலையாகும். நல்ல தமிழைக் கொண்டு மக்களைத் தன்பால் ஈர்த்தவர்கள் பலர். நாம் பேசும் பேச்சு வெற்றிபெற வேண்டுமென்றால் வலிமையான கருத்துகள் இருத்தல் வேண்டும். மின்சாரம் செல்லக் கம்பி கருவியாக இருக்கிறது. அதுபோலக் கருத்தை விளக்க மொழி, கருவியாக உள்ளது. பேசும் பொருளை ஒழுங்குமுறைப்படுத்தித் தொடக்கம், கருத்துரை, முடிவு எனப் பகுத்துக்கொண்டு முறையாகப் பேசுவதையே சிறந்த பேச்சுமுறை என்கிறோம்,
நாம் பேசும்போது, கேட்போர் சுவைக்கத்தக்க உவமைகள், எடுத்துக்காட்டுகள், சொல்லாட்சிகள், சிறுசிறுகதைகள் போன்றவை அமையப் பேசுவதே உயர்ந்த பேச்சாகும். சிறந்த பேச்சாளராகத் திகழப் பேசும்மொழியில் திறன் பெற்றிருக்கவேண்டும். சிறந்த மொழிநடை, தெளிவான உச்சரிப்பு, உணர்ச்சி பொங்கப்பேசுதல், கருத்தில் தெளிவு, குரலில் ஏற்ற இறக்கம், இலக்கிய எடுத்துக்காட்டுகள், மெய்ப்பாட்டை வெளிப்படுத்துதல் எனப் பேசுவதற்குப் பயிற்சி எடுத்துக்கொண்டால் சிறந்த பேச்சாளராகத் திகழ முடியும்.
(எ.கா.)
இலட்சியத்தை அடையும் வழி
ஒருவன் இலட்சியத்தை எப்படி அடைய வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். ஆப்பிரிக்கக் காடுகளிலே கீழ்வானம் சிவக்கும்போது,காலை விடியல் துவங்கும்போது ஒரு பக்கம் சிங்கம் கண் விழிக்கும். இன்னொரு பக்கம் மான் கூட்டமாக எழும். சிங்கத்திற்கு ஒரே ஒரு வேலை ஒரு மானையாவது அடித்துச் சாப்பிட்டுப் பசியாற வேண்டும். அதுதான் அதற்கு வேலையே. ஆனால், மானுக்கு இரண்டு வேலை ஒன்று அதுவும் பசிக்குப் புல்மேய வேண்டும். மற்றொன்று சிங்கத்திடமிருந்து தப்பிக்க வேண்டும். நம் அனைவருக்கும் தெரியும் சிங்கம் மானை விட வலிமையானது.............
(இவ்வுரையைத் தொடர்ந்து கேட்க உரலி இணைப்பைச் சொடுக்கவும். https://
youtu.be/AlTZfAMsGU)
மதிப்பீட்டுச் செயல்பாடுகள்
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்னும் தலைப்பில் 3 மணித்துளிகள்
பேசுக.
குறிப்புகள்
தொடக்கம்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
மையவுரை
நோய்-நோய் நீக்கும் வழிமுறை -உணவே மருந்து - உடல்நலம்.
முடிவு
நோயற்ற வாழ்வே உயர்ந்த செல்வம்
நோயற்ற வாழ்வே
உயர்ந்த செல்வம்
0 Comments