ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
செயல்பாடு - 8
கலைச்சொற்களை அறிந்து பயன்படுத்துதல்
கற்றல் விளைவு :
மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தன்மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல்.
தேவைப்படின் பார்வை நூல்களாகிய அகராதிகள், கலைக்களஞ்சியம், இணையத்தளம் போன்றவற்றில் பொருத்தமானவற்றைப் பயன்படுத்துதல்.
கற்பித்தல் செயல்பாடு:
அறிமுகம்:
ஒரு துறையில் உள்ள கருத்துகளையோ கருத்துத் தொகுப்புகளையோ குறிக்கப் பயன்படுத்தும் சொல் கலைச்சொல் எனப்படும். இது பொதுப் பொருளில் வழங்காததாய் அந்தந்தத் துறைக்கே உரிய சிறப்புச் சொல்லாய் அமையும். எனவே, கலைச்சொற்களைத் துறைசார் சொற்களாகக் கொள்ள வேண்டும்.
(எ.கா.) அடவு என்பது நாட்டியத்திற்குரிய கலைச்சொல். வினைச்சொல் என்பது இலக்கணத்திற்கு உரிய கலைச்சொல்,
காலத்திற்கேற்ப,வளரும் துறைசார்ந்த புதியகண்டுபிடிப்புகளுக்கென உருவாக்கிப் பயன்படுத்தும் சொல்,கலைச்சொல் ஆகும். ஒரு மொழியின் வேர்ச்சொல்லின் பகுதியைக் கொண்டு கலைச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு புதிய கலைச்சொற்கள் உருவாகும்போது மொழி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதோடு புதுவளர்ச்சியையும் பெறுகிறது. கலைச்சொற்கள் பெரும்பாலும் காரணப் பெயர்களாகவே இருக்கும்.
வேளாண்மை, மருத்துவம், பொறியியல், தகவல்தொடர்பியல் போன்ற துறைகள் சார்ந்து இன்றைய சூழலுக்கு ஏற்பக் கலைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன .
நாள்தோறும் துறைதோறும் கண்டுபிடிப்புகள் உருவாகி வெளிவந்து கொண்டுள்ளன. இந்தச் சூழலில் அவற்றுக்கான கலைச்சொல்லாக்கமும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவை ஏட்டளவில் இருக்காமல் பயன்பாட்டிற்கு வருவதில் மாணவர்களாகிய உங்களுக்கும் பெரும்பங்கு உண்டு என்பதை மறக்கக்கூடாது.
பல்வேறு துறைகள் சார்ந்த கலைச்சொற்களைத் தனித்தனியே தொகுத்து அகர வரிசைப்படுத்தி வெளியிடப்படுவது கலைச்சொல் அகராதி எனப்படும்.
1 Comments
Super
ReplyDelete