பத்தாம் வகுப்பு - அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - பாடம் 8 , அண்டம் - வினா & விடை / 10th TAMIL - REFRESHER COURSE MODULE - 8 , QUESTION & ANSWER

 

பத்தாம் வகுப்பு  - அறிவியல் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

பாடம் :  8  , அண்டம்

மதிப்பீடு:

1.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பின்வருவனவற்றுள் எது வான் பொருள்?

அ) சூரியன்

ஆ) சந்திரன்

இ) விண்மீன்கள்

ஈ) இவை அனைத்தும்

விடை : ஈ ) இவை அனைத்தும் 

2. மங்கள்யான்  --------  க்கு அனுப்பப்பட்டது.

அ) சந்திரன்

ஆ) செவ்வாய்

இ) வெள்ளி

ஈ) புதன்

விடை :  ஆ ) செவ்வாய் 

3. சந்திரயான்-1 விண்ணில் செலுத்தப்பட்ட நாள்

அ) 22 அக்டோபர் 2008

ஆ) 8நவம்பர் 2008

இ) 22 ஜீலை 2019

ஈ) 22 அக்டோபர் 2019

விடை : அ ) 22 அக்டோபர் 2008

4. சிவப்புக்கோள் என்று அழைக்கப்படுவது

அ) புதன்

ஆ)வெள்ளி

இ) பூமி

ஈ) செவ்வாய்

விடை : ஈ ) செவ்வாய் 

5. ராக்கெட்டில் பயன்படும் தத்துவம்

அ) நியூட்டனின் முதல் விதி

ஆ) நியூட்டனின் இரண்டாம் விதி

இ) நியூட்டனின் மூன்றாம் விதி

ஈ) இவை அனைத்தும்

விடை : இ ) நியூட்டனின் மூன்றாம் விதி 

II.கோடிட்ட இடங்களை நிரப்புக.

6. விண்மீன்களைப் பற்றியும், கோள்களைப் பற்றியும் படிக்கும் அறிவியல் பிரிவு  ------

விடை :  வானியல் 

7. சூரியன் ------- விண்மீன் திரளைச் சார்ந்தது.

விடை : பால்வழி 

8. பிறகோள்களுக்கு விண்கலனை அனுப்பிய முதல் இந்திய விண்வெளித் திட்டம் -------

விடை :  மங்கள்யான்

9. நிலவின் மேற்பரப்பில் நடந்த முதல் மனிதர்
 -----------   ஆவார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்

10. மிகக்குறைந்த வெப்பநிலை பற்றிய அறிவியல் --------

விடை : கிரையோஜெனிக்

III.சரியா, தவறா? எனக் கூறுக.

1. சூரியன் மற்றும் இதர வான்பொருட்கள் சேர்ந்து சூரியக் குடும்பத்தை
உருவாக்குகின்றன.

விடை :  சரி 

2. சந்திரயான் 1 ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

விடை :  சரி

3. செவ்வாய்க் கோள் சூரியக் குடும்பத்தில் உள்ள மிகச் சிறிய கோள் ஆகும்.

விடை :  தவறு 

4. PSLV மற்றும் GSLV ஆகியவை இந்தியாவின் புகழ்பெற்ற செயற்கைக்கோள்கள் ஆகும்.

விடை :  தவறு 

5. ராக்கெட்டின் இயங்கு பொருள்கள் திண்ம நிலையில் மட்டுமே காணப்படும்.

விடை :  தவறு 

IV.பொருத்துக

1. அ) சந்திரயான்     -  சந்திரன்

ஆ)மங்கள்யான்        - செவ்வாய்

இ) கிரையோஜெனிக் -  எரிபொருள்

ஈ) விண்மீன் திரள்     -  விண்மீன் கூட்டம்

உ ) பணிச்சுமை -  விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்டில் வைக்கப்படும் செயற்கைக் கோள்

V. சுருக்கமாக விடையளி.

1. சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களைப் பற்றி குறிப்பு வரைக.
2. கெப்ளரின் விதிகளை வரையறு.

    முதல்விதி - நீள்வட்டங்களின் விதி 

                   சூரியனின் மையம் ஒரு குவியத்தில் உள்ளவாறு நீள்வட்டப் பாதையில் கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. 

இரண்டாம் விதி - சமபரப்புகளின் விதி 

               கோளின் மையத்தையும் சூரியனின் மையத்தையும் இணைக்கும் கற்பனைக்கோடு சம காலங்களில் சம பரப்புகளைக் கடக்கிறது.

மூன்றாம் விதி - ஒத்திசைவுகளின் விதி 

             எந்த இரு கோள்களுக்கும் சுற்றுக் காலங்களின் இரு மடிகளின் விகிதம் சூரியனிலிருந்து அவற்றின் பாதியளவு பேரச்சுகளின் மும்மடிகளின் விகிதத்திற்குச் சமம்.

****************    ************   *************


விடைத்தயாரிப்பு : 

திரு.S.பிரேம் குமார் , 

பட்டதாரி அறிவியல் ஆசிரியர் , 

அப்பர் மே.நி.பள்ளி , கருப்பாயூரணி , மதுரை.

***************     *************    ************

Post a Comment

0 Comments