ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - செயல்பாடு 7 - நோக்கத்தின் அடிப்படையில் வினா உருவாக்குதல் - வினா & விடை / 9th TAMIL REFRESHER COURSE MODULE - ACTIVITY 7 - QUESTION & ANSWER

 

ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

செயல்பாடு - 7 

நோக்கத்தின் அடிப்படையில் வினா உருவாக்குதல்

கற்றல் விளைவு.

         படித்தவற்றைப் பற்றிச் சிந்தனை செய்து வினாக்கள் எழுப்பிப் புரிதலை மேம்படுத்திக் கொள்ளுதல்,

குறிப்பிட்ட நோக்கத்தின் அடிப்படையில் வினாக்களை உருவாக்குதல்

கற்பித்தல் செயல்பாடு :

அறிமுகம்:

         ஒருவரிடமிருந்து நமக்குத் தேவையான பதிலை எதிர்நோக்கிக் கேட்கப்படுவதுவினா எனப்படும். வினா எழுப்புவதற்காகப் பயன்படுத்தப்படும் சில சொற்களே வினாச்சொற்கள் ஆகும். ஒன்றைப் பற்றி அறிந்து கொள்வதற்காக வினாச்சொற்களைப் பயன்படுத்தி, வினாக்குறியோடு அமைவதனை வினா எனலாம். பொதுவாக வினாச் சொற்றொடரின் இறுதியில் வினாக்குறி (?) அமைந்திருக்கும்.

விளக்கம்

யார்?

ஏன்?

எத்தனை?

எவ்வளவு?

யாது?

எதற்கு?

எப்போது?

எவை?

யாவை? 

எப்படி?

என்ன?

யாருக்கு?

எவ்வாறு?

எங்கு?

யாருடையது?

எது?

இந்த வினாச்சொற்களைப் பயன்படுத்தி வினாக்களை எவ்வாறு அமைக்கலாம் என்று காண்போம்.

மாதிரி வினாக்கள்

படித்தது யார்?

ஏன் படித்தாய்?

எத்தனை பக்கம் படித்தாய்?

எவ்வளவு நேரம் படித்தாய்?

எதற்குப் படித்தாய்?

எப்போது படித்தாய்?

எவற்றைப் படித்தாய்?

எப்படிப் படித்தாய்?

என்ன படித்தாய்?

எவ்வாறு படித்தாய்?

எங்குப் படித்தாய்?

யாருடையதைப் படித்தாய்?

இதில் ஏன், எதற்கு, எப்படி, எவ்வாறு என்றவினாச்சொற்களில்,

ஏன், எதற்கு -ஏதேனும் ஒரு காரணத்தை அறிந்து கொள்வதற்குப் பயன்படுத்த வேண்டும்.

எப்படி , எவ்வாறு - ஏதேனும் ஒரு காரியம் நடந்த விதத்தை அறிந்து கொள்வதற்குப் பயன்படுத்த வேண்டும்.

காரணம் அறிந்து வினா அமைப்பதற்குரிய சான்று


1. இன்று எங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்ததால், நான் பள்ளிக்கு வரவில்லை.
என்ற தொடருக்கு...

நீ ஏன் இன்று பள்ளிக்கு வரவில்லை? என்று காரண அடிப்படையில் வினா 
அமைக்கலாம்.

2 . கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் கிருமிகள் பரவாமல் இருப்பதற்காகக்
கைகளைக் கழுவ வேண்டும்.

என்ற தொடருக்கு, கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் எதற்காகக்
கிருமிநாசினியால் கைகளைக் கழுவவேண்டும்?

என்று கார அடிப்படையில் வினாக்களை அமைக்கலாம். (எ.கா.)

1. இந்த விபத்து எப்படி நடந்தது?

2. நீசுதந்திர தின விழாவை எவ்வாறு கொண்டாடுவாய்?

- என்று காரியம் நடந்தவிதத்தை அறிந்துகொள்ள வினாக்களை அமைக்கலாம்.

பிற வினாச் சொற்கள் அமையும் விதம்

எங்கு   -     இடத்தைப் பற்றிக் கூறுதல்

எப்போது  -   எந்த நேரத்தில் நடந்தது பற்றிக் கூறுதல்.

என்ன   -   பொருள் அல்லது பெயரைப் பற்றி அறிந்து கொள்ளப்  பயன்படுத்துதல்.

எத்தனை  -   எண்ணிக்கையைக் கூறப் பயன்படுத்துதல்.

யார்  - செயலைச் செய்தவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காகப் பயன்படுத்துதல்.

இவ்வாறு வினாச்சொற்களைப் பயன்படுத்தி வினாக்கள் அமைக்கலாம்.

****************    ***********   ************

               மதிப்பீட்டுச் செயல்பாடு

1. கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களை உருவாக்குக.

           ' கண்ணியமிகு தலைவர் ' காயிதே மில்லத் அவர்களின் இயற்பெயர் முகமது
இசுமாயில். மக்கள் அவரைக்காயிதே மில்லத் என்று அன்போடு அழைத்தனர். காயிதே மில்லத் என்னும் சொல்லுக்குச் சமுதாய வழிகாட்டி என்பது பொருள்,
அப்பெயருக்கேற்ப மக்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் காயிதே மில்லத். அவர் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும் தன்னுடைய தேவைகளுக்குப் பொதுப்பேருந்திலும் தொடர் வண்டியிலும் பயணம் சென்று எளிமையின் சிகரமாக விளங்கினார்.

      கல்வி ஒன்றுதான் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்
என்று எண்ணியதால் கேரளாவிலும் திருச்சியிலும் இரண்டு கல்லூரிகளைத்
தொடங்கினார். இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழு உறுப்பினராகவும்
பணியாற்றினார்.

1 ) கண்ணியமிகு தலைவர் என்று அழைக்கப்படுபவர் யார் ? 

2 ) காயிதே மில்லத் அவர்களின் இயற்பெயர் என்ன ?

3 ) ' காயிதே மில்லத் ' என்னும் சொல்லின் பொருள் என்ன ?

4 ) ஒட்டு மொத்த சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது எது ?

5 ) காயிதே மில்லத் கல்லூரிகளை எங்கெங்கே தொடங்கினார் ?

2.சொற்றொடரில் விடுபட்ட இடங்களில் பொருத்தமான வினாச்சொற்களை நிரப்புக.

(யார், என்ன, எந்த, எப்போது, எப்படி)

1.இந்தப் பணம் உனக்கு எப்படிக்    கிடைத்தது?

2. தேசப்பிதா என்று அழைக்கப்படுபவர் யார் ? 

3. உன்னுடைய பிறந்த நாள் எப்போது ?

4. இலக்கணம் என்றால் என்ன ? 

5. தொடர் வண்டி எந்த  ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?

****************    *************    *************


Post a Comment

0 Comments