பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
பாடம் - 6 , பருவக் காற்றுகள்
மதிப்பீடு -
1 ) மேலைக்காற்றுகள் என்பது -------- ன் ஒரு வகை
அ) தலக்காற்று
ஆ) காலமுறைக் காற்று
இ) மாறுதலுக்குட்பட்ட காற்று
ஈ) கோள் காற்று
விடை : ஈ ) கோள் காற்று
2 ) துருவ உயர் அழுத்த மண்டலங்களிலிருந்து துணை துருவ தாழ்வழுத்த மண்டலம் நோக்கி வீசும் காற்றுகள் -------
அ) வியாபாரக் காற்று
ஆ) மேலைக்காற்று
இ) துருவ கீழைக்காற்று
ஈ) தலக்காற்று
விடை : இ ) துருவ கீழைக்காற்று
3 ) அதிக அழுத்தமுள்ள பகுதியிலிருந்து குறைந்த அழுத்தமுள்ள பகுதிக்கு சுழல் வடிவில் குவியும் காற்று -------
அ) கீழைக்காற்று
ஆ) மேலைக் காற்று
இ) சூறாவளி
ஈ) எதிர் சூறாவளி
விடை : இ ) சூறாவளி
4 ) உலகில் ஒவ்வொரு இடத்திலும் ஒரு பெயர் கொண்டு அழைக்கப்படும் காற்று ------
அ) காலமுறை காற்று
ஆ) மாறுதலுக்குட்பட்ட காற்று
இ) மேலைக் காற்று
ஈ) தலக்காற்று
விடை : ஆ ) மாறுதலுக்குட்பட்ட காற்று
5 ) ------- காற்றினால் தமிழகம் அதிகளவு மழை பெறுகிறது
அ) தென்மேற்கு பருவக்காற்று
ஆ) வடகிழக்கு பருவக்காற்று
இ) தலக்காற்று
ஈ) வியாபாரக்காற்று
விடை : ஆ ) வடகிழக்குப் பருவக்காற்று
6 ) பொருத்துக
i ) மிஸ்ட்ரல் - மத்திய தரைக்கடல் பகுதி
ii) சின்னூக் - வட அமெரிக்கா
iii) ஹரிக்கேன் - அட்லாண்டிக் பெருங்கடல்
iv) வில்லிவில்லி - ஆஸ்திரேலியா
v ) மான்சூன் - பருவக்காற்று
7 ) சரியா? தவறா? எனக் கண்டறியவும்
i) உயர் அழுத்த மண்டலம் மையத்திலும், தாழ்வழுத்தம் அதனைச் சூழ்ந்தும் காணப்படும் அமைப்பு எதிர் சூறாவளி ஆகும்
விடை : சரி
ii) அதிக வலிமையுடன் வீசும் காற்றுகள் துருவ கீழை காற்றுகள் ஆகும்.
விடை : தவறு
iii) கேரளா தென்மேற்கு பருவக்காற்றினால் அதிக அளவு மழை பெறுகிறது.
விடை : சரி
iv) வடகிழக்கு பருவக்காற்று பாகிஸ்தான் பகுதியிலிருந்து வீசுகிறது.
விடை : சரி
V) புவியின் மேற்பரப்பின் செங்குத்தாக நகரும் வாயுக்கள் காற்று எனப்படும்.
விடை : தவறு
நீ அறிந்த சூறாவளிகளின் பெயர்களையும், அவைகளுக்குப் பெயரிட்ட நாடுகளின் பெயர்கள்
8 ) குறித்த தகவல் சேகரித்து அட்டவணைப்படுத்தவும்
வ.எண்
உருவான கடல் பகுதி
சூறாவளியின் பெயர்
பெயரிட்ட நாடு
1 ) வங்காள விரிகுடா - நிவர் - இரான்
2 ) வங்காள விரிகுடா - நிஷாக்ரா - வங்கதேசம்
3 ) அரபிக்கடல் - கதி - இந்தியா
4 ) வங்காள விரிகுடா - யாஸ் - ஓமன்
9. தென்மேற்கு பருவக்காற்றினால் அதிக அளவுமழைபெறும் பெறாத பகுதிகளை எழுதி காரணம் எழுதவும்.
மழைபெறும் பகுதிகள்
மும்பை , சிவாலிக்குன்று , சோட்டா , நாகபுரி பீடபூமி , சிரபுஞ்சி
காரணம்
ஈரப்பதமிக்க காற்று மலைகள் , குன்றுகளால் தடுக்கப்படுவதால்.
பெறாத பகுதிகள்
தார் பாலைவனம் , பஞ்சாப் , ஹரியானா , தமிழ்நாடு
காரணம்
காற்று ஈரப்பத்தை இழப்பதாலும் , மழை மறைவு பகுதியில் உள்ளதாலும்.
10. பருவக் காற்றுகள் வீசவில்லையெனில் என்ன நிகழும்?
மழைப்பொழிவு இருக்காது . நாட்டில் பஞ்சம் உண்டாகும். ஏரி , குளங்கள் போன்ற நீர்நிலைகள் வறண்டு விடும். மின் உற்பத்தி குறையும்.
************** **************** **********
2 Comments
Super mam
ReplyDeleteVery useful
ReplyDelete