ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5 - டாக்டர் இராதா கிருஷ்ணன் பிறந்த நாள் / TEACHERS DAY - SEPTEMBER - 5

 

             ஆசிரியர்  தினம் 

                     5 • 9 • 2021



அறிவைப்   புகட்டும்  ஆலயமாக, 

அன்பை  வளர்க்கும்   பூவனமாக 

தடைகள்  தகர்த்து  தன்னம்பிக்கை  வளர்த்து

அறியாமை   இருளகற்றி  கற்பிதம்  தரும்  அற்புதங்கள்!

எதிர்காலத்  தூண்களின்  நம்பிக்கை   நாயகர்கள் !

திறன் பெருக்கி  கலைவளர்க்கும்  நல்லாசான்கள் ! 

மாணவர் நலன்காக்கும்  பெற்றோரின்  பிரதிகள் !

அறியாமை   இருள் நீக்கும்  தீபங்கள் !

அழகிய   ஒளிபெரும்   நாள்  இன்று....


                ஆம்..  சமுதாயம்  உயர , தான்   உருகுபவர்கள். முன்மாதிரியாகவும், கிரியாவூக்கியாகவும்  விளங்குபவர்கள். மாணவர்   சிந்தனையை   பெருக்கும் ஆர்வமூட்டிகள், ஆக்கத்திறன்  மிக்க  நல்வழிகாட்டிகள். சொல்லும் , செயலும்   ஒன்றென  இணையும் முன்மாதிரிகள்.

                      ஆசிரியர்   பணி  என்பது  கல்விமட்டுமல்லாது  ஒழுக்கத்துடன்  கூடிய   பண்பும்,  அறிவுப்  பெருக்கமும்,  ஆனந்தம்   தரும்   ஆன்மீகமும்  என   அனைத்தையும்  அள்ளித் தந்து, மாணவ  சமுதாயத்தை   எதிர்கால  வைரங்களாக்கித்    தெய்வீகப்   பணியாற்றும்   தன்னலமற்ற  தியாகத்   திருவுருவங்கள்   ஆசிரியர்கள்.

         அத்தகு   சிறப்பு  மிகு   ஆசிரியர்களைப்   போற்றும்   விதமாக  ஒவ்வொரு   ஆண்டும்   செப்டம்பர்  5 -ம் நாளை  ஆசிரியர்  தினமாக   கொண்டாடுகின்றன. 

       கல்வி புகட்டும்   ஆசிரியர்களை   ஊக்குவித்து,  நன்றி  செலுத்தும்  விதமாக   கொண்டாடப்  படுகின்றன  திருநாளே ஆசிரியர்  தினம். இது  உலகம்  முழுவதும்   பல  தேதிகளில் கொண்டாடப் படுகின்றன. 

இந்தியாவின்  ஆசிரியர்  தினம்

                              ஆசிரியராகத்   தன்  பணியைத்  தொடங்கி   எண்ணிலடங்காத  டாக்டர்  பட்டங்களைப்   பெற்ற  , டாக்டர்  இராதாகிருஷ்ணன்  அவர்களின்  பிறந்த நாளான  செப்டம்பர்  5 - ஆம்  நாளே  ஆசிரியர்  தினமாக  கொண்டாடப்  படுகின்றது.

பிறப்பும், கல்வியும் 

               சர்வபள்ளி  ராதா கிருஷ்ணன்  அவர்கள்  1888 - ஆம்  ஆண்டு , செப்டம்பர்  5 -ம்  நாள்   திருத்தணி  அருகே  உள்ள  சர்வபள்ளி  என்னும்   கிராமத்தில்    பிறந்தார்.

            தெலுங்கு  மொழியைத்   தாய்  மொழியாகக்  கொண்ட  டாக்டர். ராதா கிருஷ்ணன்  அவர்களின்  பால்ய காலங்கள்  திருத்தணி மற்றும்  திருப்பதியில்   நிறைவடைந்தது.

       திருவள்ளூரில்  உள்ள  " கெளடி "  பள்ளியிலும்,பின்னர் திருப்பதியில்  உள்ள  " லூத்தரன் "  மிஷன்  உயர்  நிலைப்  பள்ளியிலும்  படித்தார்.பின்னர்  வேலூரிலும், சென்னையிலும்  கல்லூரிப்  படிப்பை  முடித்தார். தத்துவத்தை  முதல்  பாடமாக  எடுத்து  இளங்கலை மற்றும்  முதுகலை  பட்டம்  பெற்றார்

ஆசிரியராக..

      அரசு  பள்ளி ,மற்றும்  அரசுக்  கல்லூரிகளில்  படித்து  பட்டம்  பெற்ற  டாக்டர் . ராதாகிருஷ்ண ன்  , ஆசிரியராக  தனது  பணியைத்  தொடங்கி  அற்பணித்து  , உயர்ந்து ,சுதந்திர  இந்தியாவின்  முதல்  குடியரசுத்  துணைத்  தலைவராக  விளங்கினார். 

                 1904 ஆம்  ஆண்டு  சென்னை " பிரசிடென்சி "  கல்லூரியில்  உதவி  விரிவுரையாளராக  பணியேற்றார்.  மேலை நாடுகளுக்குச்  செல்லாமல்  தாய்   நாட்டிலேயே  கல்வி கற்றவர்  என்ற  பெருமைக்குரியவர் டாக்டர்.ராதாகிருஷ்ணன்.

           பின்  மாநிலக்  கல்லூரி பணியைத்  தொடர்ந்து   மைசூர்,  கொல்கத்தா,  வாரணாசி , ஆக்ஸ்ஃபோர்டு    போன்ற வற்றிலும்  தத்துவப் பேராசிரியராகப்  பணியாற்றினார். இதன்காரணமாக  " சர்"  பட்டத்தைப்  பெற்றார். 

       1923 ஆம் ஆண்டு  இவரின்  படைப்பான  " இந்தியத்  தத்துவம் "  வெளியிடப் பட்டது. இது  பாரம்பரிய  தத்துவ  இலக்கியத்திற்கான  தலைசிறந்த  படைப்பாகும். 

     1931 ஆம்  ஆண்டு  டாக்டர். ராதாகிருஷ்ணன்  அவர்கள் ஆந்திர பல்கலைக்கழக  துணைவேந்தராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். 

   1931 ஆம் ஆண்டு "பெலாரஸ் "   இந்துமத  பல்கலைக்கழக துணைவேந்தராக வும், 1946 - ஆம் ஆண்டு  யுனெஸ்கோவின்  தூதுவராக  நியமிக்கப்பட்டார். 

       1948 - கல்வி   ஆணையத்  தலைவராக, இந்திய  கல்வி  முறையின்  தேவைகளை  நிறைவேற்றவும்,  சிறந்த  கல்விதிட்டத்தை   வடிவமைக்கவும்  டாக்டர். இராதாகிருஷ்ணன்   குழுவின்  பரிந்துரைகள்  பெரும் பயனை  நல்கின. 

குடியரசு தலைவராக...

            டாக்டர்.  ராதாகிருஷ்ணன்  அவர்கள்  1952 -ஆம்   ஆண்டு சுதந்திர   இந்தியாவின்  குடியரசு துணைத்தலைவராக  பொறுப்பேற்றார். இரண்டுமுறை  இப்பதவியை  வகித்த பின் , 1962 ஆம்  ஆண்டு   குடியரசு  தலைவராக நியமிக்கப்பட்டு  சிறப்புச்  செய்தார். 

கல்வியைப்  போற்றிய  ஆசிரியர்

                        டாக்டர்.ராதாகிருஷ்ணன்  அவர்கள்  இயற்கையோடு   இயைந்த  கல்லிமுறையை  விரும்பினார். மனிதனை  மாக்களிடம்  இருந்து   வேறுபடுத்துவது  கல்வியே ., கல்வியானது  மனிதனில் உள்ள  விலங்குத்  தன்மையை   நீக்கி  அன்பு  விளையும்  ஊற்றென  மாறவேண்டி  விரும்பினார். 

         சமூகத்தில்  உயர்நிலையில்  இருப்பது  கல்வி.  கல்வி   குழந்தைகளின்  அறிவு வளர்ச்சியை  முழு மையாக்கும்  முயற்சி.  இம்  முயற்சியை  மேற்க்கொள்ளும்  ஆசிரியர்களை உலகம் , தாய்   தந்தையை   அடுத்து  குருவாக  போற்றப்படுகிறார்கள் .    

        ஒவ்வொரு  ஆசிரியரும்   இச்சமூகத்தின்   எதிர்ப்பார்ப்பை   நிறைவு செய்யும்   விதமாக  செயல்பட்டு  மாணவரிடத்தில்  அதிக  அன்பும், அக்கறையும்  கொண்டு  சிறந்த  வழிகாட்டியாக  சமுதாய  முன்னேற்றத்திற்காகப்   பயன்படுவர்.


      பதற்றம், மனநோய்   போன்றவை  தவறான  கல்வியின்  விளைவுகளாகும், ஒரு  மனிதனின்   உடல், மனம், ஆளுமை  ஆகியவற்றின்   தேவையை  நிறைவு செய்வதே  கல்வி  கற்றலின்  பயன்  ஆகுமென  சாடுகிறார். மேலும்  கல்வி  என்பது  சமூக நீதிக்களையும், மனித  உறவுகளையும்  வளர்க்கும்  வளமை  கொண்டதாக  இருக்க வேண்டுமெனவும்  விரும்பினார்.

அரசு  மரியாதை..

         டாக்டர். ராதாகிருஷ்ணன்  அவர்களின்  அருஞ்செயல்களைப்  போற்றும்  விதமாக   அரசு பல  பெருமைகளைக்  செய்து  போற்றுகிறது.  அவரின்   திருத்தணி  வீடு  நூலகமாகவும், கருணை  இல்லமாகவும்  மாற்றப்பட்டன. 

      அவர்  வசித்த   தெருவிற்கு  " டாக்டர்  இராதாகிருஷ்ணன்  சாலை" எனப்  பெயரிடப்பட்டுள்ள.   1954 - ஆம்   ஆண்டு  இந்திய  அரசு  " பாரத  ரத்னா " விருது  வழங்கி  சிறப்பித்து.

ஆசிரியர்  தினமாக...

          டாக்டர். ராதாகிருஷ்ணன்   அவர்கள்  கற்பிக்கும்  திறன் ,மற்றும்  மாணவர்கள்  மீது கொண்ட  அன்பு, கருணை   போன்ற   பல்வேறு  காரணங்களால்  ஆசிரியருக்களுக்கு  முன்மாதிரியாக   திகழ்ந்தார். எனவே  இவரது  பிறந்த தினம் ஆண்டுதோறும்   இந்திய  ஆசிரியர்  தினமாகக்  கொண்டாடுகின்றன. 

        பாரத ரத்னா, குடியரசுத்  தலைவர், புகழ் பெற்ற தூதர், நன்மதிப்பு மிக்க  ஆசிரியர், அரசியல் வாதி எனப் போற்றப் படும்   டாக்டர். ராதாகிருஷ்ணன்  அவர்களின்  பிறந்த  நாள்   ஆசிரியர்  தின  திருநாளாக  தேசமெங்கும்  சிறப்பித்துக்  கொண்டாடப் படுகிறது.

          நாட்டின்   எதிர்காலத்தை   உருவாக்கும்  ஆற்றல்  மிக்க  சிற்பிகள், மாணவர்களை  செதுக்கிய  உழிகள்,  பண்பாடு  பாராட்டும்  படைகள் என  ஆசிரிய  பெருங்கூட்டம் , இருகரம்  சேர்த்து,  தேச பக்தி, பாதுகாப்பில்  அரணாக  அணிவகுக்கிறது.  

        அத்தகைய  சிறப்பு  கொண்ட  ஆசிரியர்களைக்   கொண்டாடி  வாழ்த்துவோம் !

சமூகப்பணியில் என்றென்றும் , 

பைந்தமிழ் ஆசிரியர் குழு / Greentamil.in Teachers.

**************    *************    ***********

Post a Comment

0 Comments